சென்னையை நெருங்கும் நிலம் புயல்- துறைமுகத்தில் 8-ம் எண் புயல்கூண்டு ஏற்றம்!

 Nilam Moves Closer Chennai Coast சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டு தமிழகக் கடலோர மாவட்டங்களை மிரட்டிக் கொண்டிருக்கும் நிலம் புயல் தற்போது சென்னைக்கு மிக நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை துறைமுகத்தில் உச்சபட்சமான அபாய எச்சரிக்கையாக 8-வது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது,
வங்கக் கடலில் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உருவெடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு நிலம் என்றும் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கும் சென்னைக்கும் இடையே மையம் கொண்டிருந்தது. நேற்று இரவு முதல் இது வேகமாக நகர்ந்து இன்று காலை சென்னைக்கு தென்கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. தற்போது இது சென்னைக்கு தென்கிழக்கில் 270 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இதனால் சென்னை நகரில் பலத்த காற்று வீசிவருகிறது.
சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பு முழுவதையும் சீறிவரும் கடலலைகள் ஆக்கிரமித்திருக்கிறது. சென்னை துறைமுகத்தில் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்பதுடன் சென்னை துறைமுகத்துக்கு கடுமையான பாதிப்பு இருக்கும் என்பதால் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6-ன் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இப்படி நகரும் நிலம் புயல் இன்று பிற்பகல் முதல் மாலைக்குள் கடலூர்- நெல்லூர் இடையே கரையைக் கடக்க இருக்கிறது, புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நிலம் புயல் கரையை நெருங்க நெருங்க கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி மிரட்டி வருகின்றன. இதனால் இன்றும் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லக் கூடாது என்று ஏற்கென எசத்ரிக்கப்பட்டிருக்கிறது
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: