அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் எஸ்கலோனா. இவரது இரண்டு வயது குழந்தை அதிகளவு சேட்டை செய்ததால், கையில் பசையை தேய்த்து சுவற்றில் ஒட்ட வைத்து விட்டார்.அத்துடன் கையில் கிடைத்த பொருட்களை கொண்டும், வயிற்றில் எட்டி உதைத்தும் மிக கடுமையான முறையில் குழந்தையை தாக்கி உள்ளார்.
இதனால் குழந்தை கோமா நிலைக்கு சென்று விட்டது. நினைவு திரும்பிய பின் தன்னை தாக்கிய விதத்தை குழந்தை உறவினர்களிடம் தெரிவித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக எலிசபெத்தை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 99 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.





