ஆணாக பிறந்து, பெண்ணாக மாறி, மீண்டும் ஆணாக துடிக்கும் பரிதாபம்!

லண்டன்: நான் பிறக்கும் போது ஆணாகத்தான் பிறந்தேன். ஆனால் எனக்கு பெண்ணைப்போல மாறவேண்டும் என்று ஆசை எழுந்தது. இதனால் பெண்ணாக மாற ஆபரேசன் செய்து கொண்டேன். அதுவே சிக்கலாகிவிட்டதால் மீண்டும் ஆணாக மாறிவிடலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் - இப்படி சொன்னது யார் தெரியுமா? இங்கிலாந்திலேயே மிகக்குறைந்த வயதில் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ரியா கூப்பர்தான்.

17 வயதில் பெண்ணாக மாறிய ரியா

ரியா கூப்பர் தன்னுடைய 17 வது வயதில் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார். மார்பக வளர்ச்சிக்காக பெண்மைக்கான ஹார்மோன்களையும் உடலில் பொருத்தினார். அசல் பெண்ணைப் போலவே அழகாகவும் மாறினார். அதுதான் சிக்கலாகி விட்டது.

தொலைந்து போன அமைதி

பெண்ணாக மாறியது முதல் மன அமைதியையும், மகிழ்ச்சியை தொலைத்து நிற்கும் ரியா மீண்டும் அறுவைச் சிகிச்சை செய்து ஆணாக மாற முடிவு செய்துவிட்டார்.

2 முறை தற்கொலை முயற்சி

பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சையினால் பாதிக்கப்பட்ட கூப்பர்,இருமுறை தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இதனால் அவருக்கு மனநல மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்.

ஹார்மோன் படுத்தும் பாடு...

ஹார்மோன்களை மாற்றி அறுவை சிகிச்சை செய்த காரணத்தினால் சில சமயம் மிகவும் சந்தோசமாக உணர்கிறேன். சில நேரங்களில் டல்லாக உணர்கிறேன் என்று கூறுகிறார் ரியா. இதனால் என் குடும்பத்தினரையும், உறவுகளையும் இழந்து தவிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

காதலிக்க முடியலையே..

பிறக்கும்போது ஆணாக பிறந்து 12 வயதில் பெண்ணாக வேண்டும் என்று நினைத்தார். 15 வயதில் அவருக்கு ஆபரேசன் நடைபெற்றது. என்னதான் ஹார்மோன் ஊசி எல்லாம் போட்டாலும் சராசரி பெண்ணைப்போல யாரையும் காதலிக்க முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்.


கடந்த 2010ம் ஆண்டு பெண்ணாக மாற ஆபரேசன் செய்து கொள்வதற்கு முன் பேட்டி கொடுத்த இவர், நான் பெண்ணாக உணர்கிறேன். ஆண் உடம்பில் என்னால் நடிக்க முடியாது. எனவேதான் ஆபரேசன் செய்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது மீண்டும் ஆணாக மாற ஆசைப்படுகிறார். ஆணாக மாறவேண்டும் என்று நினைத்த உடன் முடியை எல்லாம் வெட்ட ஆரம்பித்துவிட்டார். ஆனால் இறைவனால் படைக்கப்பட்ட இயற்கை நிலையை மாற்றினால் இப்படித்தான் சங்கப்படவேண்டும் என்பதற்கு ரியாவின் வாழ்க்கையே ஒரு பாடம்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: