செல்போன் இல்லாவிட்டால் உலக தொடர்பே இல்லை என்ற நிலை வந்தாகி விட்டது. செல்போன் பேட்டரிகளுக்கு தினமும் சார்ஜ் போடுவது பெரிய பிரச்சினையாக உள்ளது.இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மணி பர்சில் மற்றும் பாக்கெட்டில் போட்டாலே தானாகவே சார்ஜ் ஆகும் புதிய தொழில் நுட்பத்தை அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி கண்டுபிடித்து உள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பெண் தொழில் அதிபரும், சமூகசேவகியுமான சால்சிடோ, அவரது கணவர் டான் ஆகியோர் செல்போன்களை மணி பர்ஸ் மற்றும் பாக்கெட்டில் வைத்தாலே சார்ஜ் ஆகும் `கட்டிங் எட்ஜ்' என்ற நவீன தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து உள்ளனர்.
அந்த நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மணி பர்ஸ் மற்றும் பாக்கெட்டில் செல்போனை வைத்தாலே போதும். அவை தானாகவே செல்போன் பேட்டரிகள் சார்ஜ் ஆகி விடும். இதனால் நாம் தனியாக செல்போன் பேட்டரிகளுக்கு சார்ஜ் செய்ய வேண்டியது இல்லை.
இது நீண்டதூரம் பயணிப்பவர்களுக்கும், அதிகமாக செல்போன் பயன்படுத்துபவர்களுக்கும் இது பெரும் வரப்பிரசாதமாக உள்ளது.

