லண்டனின் லிவர்பூல் பகுதியைச் சேர்ந்த ஆலிவியா மேனிங்(வயது 12) என்ற சிறுமி அறிவுத்திறன் போட்டியில் கலந்து கொண்டு 162 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.இந்த வெற்றியின் மூலம் உலகின் மிகவும் பழைமையானதும், பெரியதுமான அதிக அறிவுத்திறன் பெற்ற சமூகமான மென்சாவில் இணையும் வாய்ப்பையும் ஆலிவியா பெற்றுள்ளார்.
ஐன்ஸ்டீன், ஹாக்கிங் ஆகியோரை விட இவர் 2 மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். இதனால் உலகில் அதிக நுண்ணறிவு கொண்டவர்களில் முதலிடத்தையும் இவர் பிடித்துள்ளார்.
இது குறித்து ஆலிவியா கூறுகையில், என்னுடன் படிக்கும் மாணவ, மாணவிகளில் நிறைய பேர் என்னிடம் வந்து அவர்களது வீட்டுப்பாடங்களை செய்து தரும்படி கேட்பர். இதை ஒரு சவாலாக எடுத்து என்னுடைய ஞாபகத்திறனை வளர்த்துக் கொண்டேன் என்று தெரிவித்தார்.


