உலகிலேயே மிகவும் புத்திசாலியான மிருகங்கள் எவை தெரியுமா?


நிறைய மக்கள் மனிதர்கள் தான் மிகவும் புத்திசாலியானவர்கள் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் மனிதர்களை விட மிருகங்கள் தான் மிகவும் புத்திசாலியானது.
எதற்காக வீட்டில் செல்லமாக விலங்குகளை வளர்க்கின்றோம்? நாம் அழைத்தால் எதனால் அவை உடனே வருகின்றன?
ஏனெனில் அவையும் மிகவும் புத்திசாலியானது மற்றும் மதிப்பளிக்க தெரிந்தது. ஆனால் இந்த புத்திசாலித்தனம் ஒவ்வொரு மிருகத்திற்கு ஏற்றவாறும் மாறுபடும்.
மனிதக்குரங்கு
என்ன சொன்னாலும் விரைவில் புரிந்து கொண்டு, அதை சரியாக செய்யும் திறன் படைத்தது மனிதக்குரங்கு.
சில சமயங்களில் இந்த மனிதக்குரங்குகளுடன் மனிதர்கள் போட்டிப் போட்டால், இவை மனிதர்களையே தோற்கடித்துவிடும். அந்த அளவு இதன் புத்திக்கூர்மையுடன் உள்ளது.
டால்பின்
இவைகளுக்கு தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை தானாகவே எளிதில் சரிசெய்துவிடும் அளவு புத்திசாலித்தனம் உள்ளது.
நிறைய ஆய்வில் புத்திசாலியான விலங்குகளில் நாம் பேசுவதை எளிதில் புரிந்து கொண்டு செயல்படுவதில் டால்பின் மிகவும் சிறந்தது என்று கூறப்படுகிறது.
பென்குயின்
இதனிடம் எதைச் சொன்னாலும் அதை அப்படியே திருப்பிச் சொல்லும் திறன் கொண்டது.
இதனிடம் வேறு எதைச் சொல்லிக் கொடுத்தாலும், விரைவில் பழகிக் கொள்ளும் திறமையுடையது.
எறும்பு
எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், எளிதில் தப்பித்துக் கொள்ளும் புத்திசாலித்தனமான திறனைக் கொண்டது.
கிளி
இவைகளுக்கு மனிதர்களைப் போலவே குரலும் உண்டு. மேலும் அவை நாம் பேசுவதை கூர்மையாக கவனித்து, அதுவே பேசும் தன்மையும் கொண்டது.
எதைச் சொல்லிக் கொடுத்தாலும், அதை நன்கு ஞாபகம் வைத்திருக்கும்.
யானை
யானையும் ஒரு வகையில் மனிதர்களைப் போல் தான். அதிலும் விலங்குகளில் மிகவும் சிறந்தது என்று சொல்லலாம்.
இதற்கும் மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளும் உள்ளது.
நாய்
மனிதர்களின் உணர்ச்சியை புரிந்து, அதற்கேற்ப நடக்கத் தெரிந்த ஒரு சிறந்த புத்திசாலியான விலங்கு. அதிலும் இவை மிகவும் நன்றியுள்ளது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: