ஐக்கிய அரபு நாடான துபாயில் ஒரு பில்லியன் டாலர் செலவில் இந்திய தாஜ்மஹாலை போல கட்டடமொன்றை கட்ட அந்நாடு தீர்மானித்துள்ளது.தாஜ் அரேபியா என்ற இந்தக் கட்டிடம் காதல் நினைவு அடையாளமாக விளங்கும். மேலும் உலகின் மிகப்பெரிய கல்யாண மண்டபமும் அதில் இடம்பெறும்.
7 கட்டிடங்களை எல்லைகளாக கொண்டு கட்டப்படவுள்ள இந்த தாஜ் அரேபியாவில், சேவை ஆட்களுடன் கூடிய 200 குடியிருப்புகளும், 300 அறைகளுடன் கூடிய ஐந்து நட்சத்திர உணவு விடுதியும் இருக்கும்.
‘புதிய காதல் நகரம்’ ௭ன அழைக்கப்படவிருக்கும் இக்கட்டிடம் எதிர்வரும் 2014ம் ஆண்டு திறந்து வைக்கப்படவுள்ளதாகவும், புதுமண தம்பதிகளுக்கு தேனிலவு சுற்றுலாஸ்தளமாக விளங்கும் ௭னறும் கூறப்படுகிறது.








