நேபாள நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி ராணா பகதூர் பாம் (64). அவர் நேற்று நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில், காட்மாண்டு நகர் அருகே சங்கமூல் பகுதியில் பாக்மதி நதியோரம் உள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிட சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து தனது காரில் நீதிமன்றத்துக்குப் புறப்பட தயாரானார். இந்த நிலையில், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள், அவரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவருடன் வந்த மெய்க்காப்பாளர் மற்றும் வேறு ஒரு நபரும் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த நீதிபதி ராணா உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.நேபாள நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி சுட்டுக்கொலை !
அதிரை கூகுள்-க்காக
Adirai Mail
நேபாள நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி ராணா பகதூர் பாம் (64). அவர் நேற்று நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில், காட்மாண்டு நகர் அருகே சங்கமூல் பகுதியில் பாக்மதி நதியோரம் உள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிட சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து தனது காரில் நீதிமன்றத்துக்குப் புறப்பட தயாரானார். இந்த நிலையில், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி ஏந்திய மர்மநபர்கள், அவரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவருடன் வந்த மெய்க்காப்பாளர் மற்றும் வேறு ஒரு நபரும் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த நீதிபதி ராணா உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.