பொதுவாக வாகனத்திற்கும் நமக்கும் ஆபத்து ஏதும் நேர்ந்து விடுமோ என்று எண்ணியபடியே வீதிகளில் ஜாக்கிரதையாக காரை ஓட்டுகின்ற நம்மவர்கள் ஒரு பக்கம் இருக்கின்றனர்.
ஆனால் “இப்படியும் கார் ஓடலாமா” என்று பார்ப்பவர்களை வியக்க வைக்கும் அளவிற்கு, தம் உயிரை சற்றும் பொருட்படுத்தாது அட்டகாசமாக கார் ஓட்டும் இந்த திறமைசாலிகளை எப்படிப் பாராட்டுவது.
விடுமுறை காலமான கடந்த 18.08.2099 அன்று Paris இல் அமைந்துள்ள Disneyland என்ற பொழுதுபோக்கு Studio இல் Hollywood திரைப்படங்களின் சண்டைப் பயிற்சியாளர்கள் தமது கார் சண்டைப் பயிற்சிகளை துல்லியமாக செய்து காட்டி பிரமிக்கவைத்துள்ளனர்.
இவர்கள் கடுமையான பயிற்சி பெற்ற பின்னரே இச்சாகசங்களை நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.