கிரிக்கெட்டை நேசிக்கும் அளவுக்கு பைக் மற்றும் கார்கள் மீதும் டோணிக்கு அலாதி பிரியம் வைத்திருக்கிறார். கவாஸாகி, ஹார்லி டேவிட்சன் பேட் பாய் என அனைத்து பிரபல நிறுவனங்களின் சூப்பர் பைக்குகளும் டோணியிடம் உள்ளது. அந்த வகையில், சமீபத்தில் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹெல்கேட் சூப்பர் பைக்கை இறக்குமதி செய்துள்ளார் டோணி.
தென்கிழக்கு ஆசியாவில் இந்த பைக்கை வாங்கிய முதல் நபர் டோணிதான். டெல்லியில் இருக்கும் இந்த பைக்கை விரைவில் அவர் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு எடுத்து செல்ல திட்டமிட்டிருக்கிறார். இந்த நிலையில், இத்தனை பைக்குகள் இருக்கும் நிலையில் ஹெல்கேட்டை டோணி விரும்பி வாங்கியதற்கு காரணம் அதன் வடிவமைப்பு மற்றும் தரம். இந்த பைக் குறித்த சில முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.