லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத் அரசியாரின் மிகப்பெரிய ஓவியத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.அரண்மனையின் ஒயிட் டிராயிங் அறையில் 320 X 224 செ.மீ அளவில் வரையப்பட்ட பெரிய ஒவியத்தின் திறப்பு விழாவில் கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர், கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்ஸ்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த ஓவியம் ரிடியூ ஹாரின் அலங்கார வாயிலின் முன்பு அரசியார் நிற்பது போல வரையப்பட்டுள்ளது. அவருக்குப் பின்பக்கம் அவரது பாட்டியார் விக்டோரியா ராணியின் ஓவியம் காணப்படுகிறது. அரசியார் வெண்மை நிறத்தில் உடை அணிந்து காட்சி தருகின்றார்.
இந்த மாபெரும் ஓவியத்தை வரைந்து முடிக்க கனடா ஓவியர் ஃபில் ரிச்சர்டுஸ் 2 ஆண்டுகள் பாடுபட்டார். கடந்த 2010ஆம் ஆண்டில் அரசியார் கனடா வந்திருந்த போது அவரிடம் பல படங்களைக் காட்டி, கலந்து பேசி ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து அதனை தற்போது ஓவியமாக்கியுள்ளார். இந்தத் திறப்பு விழாவிற்கு முன்பும் ஓவியர் அரசியாரைச் சந்தித்துப் பேசினார்.
இந்த ஓவியத்தை பார்த்து அரசியார் வியந்து போனது குறிப்பிடத்தக்கது


