சொந்தமாக வாகனம் வைத்திருக்கும் உரிமையாளர்கள் பலர் தங்களுக்கு ராசியான எண்களை கொண்ட கார் நம்பர் பிளேட்டை அதிக பணம் கொடுத்து வாங்குவது வழக்கம்.

மலேசியா நாட்டில் போக்குவரத்து துறை அதிகாரிகள் டபிள்யூ. டபிள்யூ. டபிள்யூ (வோல்டு ஒயிடு வெப்) என்ற வரிசையில் கார் பிளேட் வழங்க முடிவு செய்தனர்.
இதை பெறுவதற்காக ஏராளமான பேர் போட்டி போட்டார்கள். ஏறத்தாழ 18 ஆயிரம் பேர் ஒப்பந்த புள்ளி வழங்கினர்.
இதில் மலேசிய அரச குடும்பத்தை சேர்ந்த சுல்தான் இப்ராகிம் இஸ்மாயில் அதிக தொகையாக ரூ.91 லட்சத்து 8 ஆயிரம் செலுத்தி டபிள்யூ. டபிள்யூ. டபிள்யூ-1 என்ற கார் நம்பர் பிளேட்டை பெற்றார். இந்த ஏலத்தின் மூலம் போக்குவரத்து துறைக்கு ரூ.18 கோடி வருமானம் திரண்டது.

