அமெரிக்காவை சேர்ந்த டேர்டிவில் நிக் வேலன்டா என்பவர், முதன் முறையாக நயாகரா நீ்ர் வீழ்ச்சியை கயிற்றின் மூலம் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். நிக் வேலன்டா, கயிற்றின் மேல் நடந்து நயாகரா நீர்வீழ்ச்சியை கடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது 1800 அடி உயரத்தில் திடீரென ஏற்பட்ட பனிமூட்டத்தால் தவறி விழுந்துள்ளார். நயாகராவை கடக்கும் முயற்சியில் ஈடுபட்ட முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நிக் வேலன்டா கூறுகையில், இது எனது சிறு வயது கனவு என தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் மேற்கொண்ட இந்த சாதனை முயற்சியை 112,000 பேர் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் இந்நிகழ்ச்சி நேரடியாகவும் உலகின் பல்வேறு நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

