நச்சரிச்ச காதலனை போட்டுத்தள்ள கூலிப்படையை ஏவிய கல்லூரி மாணவி கைது


பெங்களூர்: காதலனை கொலை செய்ய ரூ.5 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவிய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரை சேர்ந்தவர் சீனிவாசன், பெங்களூர் ஜாலஹள்ளியில் மனைவி, மகன் மற்றும் மகள் சுஷ்மா ஆகியோருடன் வசித்து வருகிறார். பெங்களூர் மல்லேசுவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சுஷ்மா பி.பி.எம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சுஷ்மா பியூசி படிக்கும் போது அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு பரிசாக அவருக்கு கார் ஒன்றை அப்பா சீனிவாசன் வாங்கிக் கொடுத்ததுடன் மஞ்சுநாத் என்பவரை ஓட்டுநராகவும் நியமித்தார்.
எப்போதும் மஞ்சுநாத்தை அழைத்துக் கொண்டு வெளியில் சென்ற சுஷ்மா அவர் மீது காதலில் விழுந்தார். பெற்றோருக்குத் தெரியாமல் இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாவும் இருந்தனர். திடீரென மஞ்சுநாத்துடனான பழக்கத்தை சுஷ்மா நிறுத்திவிட்டார். ஆனால் மஞ்சுநாத்தோ என்னை மறந்தால் இருவரும் உல்லாசமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டியிருக்கிறார்.
மேலும் தம்மை திருமணம் செய்து கொள்ளுமாறு தமது நண்பரான ஜாலஹள்ளியை சேர்ந்த உசேன் என்பவரை சுஷ்மாவிடம் தூது அனுப்பியும் பார்த்திருக்கிறார் மஞ்சுநாத். இதில் வெறுப்பான சுஷ்மா, மஞ்சுநாத்தையும் அவனது நண்பனையும் போட்டுத் தள்ள முடிவு செய்தார். இதற்காக தமது பள்ளித் தோழன் அஜய்குமார் உதவியை நாடியிருக்கிறார் சுஷ்மா. அஜய்குமாரும் சும்மா இருக்கவில்லை. சுஷ்மாவிடம் இருந்து ரூ5 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கூலிப்படையை ஏற்பாடு செய்திருக்கிறார்.
சுஷ்மாவும் அஜய்குமாரும் போட்ட பிளான்படி கடந்த மே 11-ந் தேதி இரவு மஞ்சுநாத்தையும் அவரது நண்பர் உசேனையும் தாங்கள் குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்திருக்கின்றனர். அங்கு சுஷ்மாவின் காரில் அனைவரும் ஏறிக் கொண்டனர். செல்லும் வழியில் சுஷ்மா ஏற்பாடு செய்திருந்த கூலிப்படையும் ஏறிக் கொண்டது. இதில் உஷாரான மஞ்சுநாத் ஓடும் காரில் இருந்து தப்பிவிட உசேன் மட்டும் மாட்டிக் கொண்டார். உசேனை கூலிப்படைக் கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்து தொட்டபள்ளாப்புராவில் உடலை வீசியது.
ஆனால் இதுபற்றி மஞ்சுநாத் யாரிடமும் வாய் திறக்கவில்லை. உசேன் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திய போதுதான் எல்லாமும் வெட்ட வெளிச்சமாகியிருந்தது. இதனால் சுஷ்மாவையும் கூலிப்படையையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த கோஷ்டி வேலூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததையடுத்து பெங்களூர் போலீசார் கூண்டோடு கைது செய்து அழைத்துச் சென்ற்னார்.
சுஷ்மாவும் எதையும் மறைக்காமல் போலீசாரிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்திருக்கிறார். காதலனையும் நண்பனையும் கூலிப்படையை ஏவி கொல்ல முயற்சித்த கல்லூரி மாணவி சிக்கிய சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: