பொதுவாக சிற்பங்கள் எப்பொழுதும் ஒரு அசையமுடியாத ஜடம் என்பதே பலரது கருத்தாகும். இருந்தும் அசையக்கூடிய சிற்பங்களையும், கலைப்படைப்புக்களையும் உருவாக்க முடியும் என்பது எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்?
ஆம், மூனிச் நகரில் காணப்படும் BMW அருங்காட்சியகத்தில் ஆறு சதுர அடிகள் கொண்ட பகுதி ஒன்றினுள் 714 உலோகக் கோளங்களைப் பயன்படுத்தி அசையும் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர்.

