ஆஸ்திரேலியாவின் சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சிலர் நீலத் திமிங்கிலத்தின் அகோரத் தாக்குதலுக்கு உள்ளான இறால் போன்ற அமைப்பில் உள்ள இராட்சத மீன் இனம் ஒன்றை கவனித்துள்ளனர்.
இச்சம்பவமானது அவர்களின் கண் எதிரேயே இடம் பெற்றுள்ளது. 13 அடிகள் நீளமாகக் காணப்பட்ட குறித்த உயிரினம் நீலத் திமிங்கிலம் ஒன்றினால் தாக்கப்பட்டிருந்தது.
இதன் ஒரு பகுதி விழுங்கப்பட்ட நிலையிலும், எஞ்சிய பகுதி நீர் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருப்பதை அவர்கள் அண்மையில் சென்று கவனித்துள்ளனர்.
இதனால் குறித்த உயிரினம் கணவாய் வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.



