நித்தியானந்தா மட்டும் 'ஒண்டி'யாக கொடைக்கானல் பயணம்!

 Nithyanantha Leaves Kodaikanal  மதுரை: மதுரை ஆதீனத்தை தவிர்த்து விட்டு நித்தியானந்தா மட்டும் கொடைக்கானலுக்குப் போயுள்ளாராம். அங்கு முக்கிய ஆலோசனைகளை அவர் நடத்தப் போயிருப்பதாக கூறப்படுகிறது.
பெங்களூர் ஆசிரமத்திற்குள் போக முடியாத நிலை ஏற்பட்டு விட்டதால் நித்தியானந்தாவும், அவரது பரிவாரங்களும் அங்கிருந்து இடம் பெயர்ந்து ஆங்காங்கு செட்டிலாகியுள்ளனர். நித்தியானந்தா, மதுரை, திருவண்ணாமலை என கேம்ப் அடித்துக் கொண்டிருக்கிறார்.
தன் மீது கர்நாடக அரசு போட்டு வைத்துள்ள வழக்குகளை சந்தித்து வெளிவருவது தொடர்பான தீவிர ஆலோசனைகளில் தற்போது அவர் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது திடீரென கொடைக்கானலுக்கு அவர் கிளம்பிப் போயுள்ளார். ஏன் அவர் கொடைக்கானலுக்குப் போயுள்ளார் என்பது தெரியவில்லை. ஆனால் சில முக்கியஸ்தர்களைப் பார்க்க அவர் போயுள்ளதாக கூறப்படுகிறது. வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தவும் இந்தப் பயணம் என்றும் கூறுகிறார்கள்.
இந்த பயணத்தின்போது மதுரை ஆதீனத்தை அவர் அழைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். ஆதீனத்திற்கு வீசிங் தொல்லை இருப்பதால் அவரை கூட்டிக் கொண்டு போகவில்லையா என்று தெரியவில்லை.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: