குழந்தை தன்னை பார்த்து சிரிக்கவில்லை என்பதற்காக குழந்தையை சுவரில் அடித்து கொலை செய்த தந்தை


குழந்தை தன்னை பார்த்து சிரிக்கவில்லை என்பதற்காக குழந்தையை சுவரில் அடித்து கொலை செய்த தந்தைகுழந்தை தன்னைப் பார்த்து சிரிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அதன் மீது வெறுப்பு கொண்ட தந்தை ஒருவர், அதனை சுவரில் அடித்துக் கொன்றார். நியூஸிலாந்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
நியூஸிலாந்து நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் இந்த விவரம் வெளியே தெரியவந்துள்ளது. கேஃபு இகாமனு என்பவர், தனது பெண் குழந்தை செய்னியின் கழுத்தை நெரித்தும், தோள், இடுப்பு எலும்புகளை உடைத்தும், மூளையில் அடிபடக் காரணமாக அமைந்தும், அதன் இறப்புக்குக் காரணமாகவும் இருந்தார் என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணை நடந்தது.
அப்போது, தன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அந்தக் குழந்தையை சுவரில் தூக்கி வீசி, எலும்பும் மூளையும் பாதிக்கப்படும் அளவுக்கு இவர் நடந்துகொண்டுள்ளார் என்று நீதிமன்றத்தில் வக்கீல் குற்றம்சாட்டினார். இதனை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
கடந்த 2010 மார்ச் மாதம் தனது மூன்றாவது பிறந்தநாள் தொடக்கத்துக்கு 21 நாட்களுக்கு முன்னர் இந்தப் பெண் குழந்தை நிமோனியா தாக்கி இறந்தது. இதற்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதே காரணம் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், தன் குழந்தை தன்னிடம் ஒட்டுதல் இன்றி இருந்ததாலும், பாசம் காட்டவில்லை, சிரிக்கவில்லை என்ற காரணத்தாலும் கோபமும் வெறுப்பும் அடைந்த தந்தை இவ்வாறு நடந்துகொண்டது தெரியவந்தது. இத்தனைக்கும் வெகுநாட்கள் அது தன் பாட்டி வீட்டில் இருந்ததாம். அது கொல்லப்படுவதற்கு சில நாட்கள் முன்னர்தான் தன் தந்தை வீட்டுக்கு வந்ததாம்.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: