கொழும்பு:இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுண தீவின் இரு நூறுவில் என்ற கிராமத்தில் அமைந்துள்ள முஹியத்தீன் ஜும்மா மஸ்ஜித் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இந்த அராஜகத்தை அரங்கேற்றியுள்ளனர்.சம்பவத்தின் போது அங்கு அமைக்கப்பட்டிருந்த நான்கு தற்காலிக குடிசைகளும் கடையொன்றும் இக்குழுவினரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிலரை போலீஸார் 1980-ம் ஆண்டு இக்கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையிலான வன்முறை காரணமாக வெளியேறியிருந்தனர்.
போர் ஓய்ந்த பின்னர் தமது மீள் குடியேற்றத்திற்காக அங்கு தற்காலிக பள்ளிவாசலொன்றை அமைத்ததோடு தற்காலிக குடிசைகளையும் அமைத்திருந்தனர்.
சம்பவம் தொடர்பாக தகவலறிந்து அங்கு விரைந்த அமைச்சர் ரவுஃப் ஹக்கீம், பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆறுதல் கூறினார்.
அந்தப் பகுதியில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை விரும்பாத சிலரின் நடவடிக்கையாகவே தான் இதனை கருதுவதாக அவர் கூறினார்.