சென்னை: எனது பெயரிலான ட்விட்டர் பக்கத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், எனது பெயரிலான டிவிட்டர் பக்கத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தொடர்ந்து அந்த முயற்சியிலே நாங்கள் எங்களை இணைத்துக் கொள்வோம் என்றார் கருணாநிதி.
டெசோ அமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த கேள்விக்கு, தீர்மானங்களையெல்லாம் பிரதமருக்கும், அடுத்தபடியாக தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கும் அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்றார் கருணாநிதி.
கூடங்குளத்தில் உற்பத்தியாகும் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் தமிழ்நாட்டிற்கே ஒதுக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு கிடைத்தால் நல்லது தான் என்றார் அவர்.