மியான்மரில் மஸ்ஜித் தீக்கிரை! – புத்த பயங்கரவாதிகள் வெறிச்செயல் !



Buddhists burn down mosque in Myanmar's Rakhine stateயங்கூன்:ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை குறித்து சர்வதேச சமூகம் கவலையடைந்திருக்கும் வேளையில் மேற்கு மியான்மரின் ராக்கேன் மாநிலத்தில் மீண்டும் பெரும்பான்மை புத்த பயங்கரவாதிகள் வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராக்கேனில் நேற்று புத்தர்கள் ஒரு மஸ்ஜிதுக்கு தீவைத்துக் கொளுத்தியதுடன் முஸ்லிம் கிராமங்களையும், வீடுகளையும் தாக்கி சேதப்படுத்தியதாக ப்ரஸ்
டி.வி கூறுகிறது. கலவரத்தை தொடர்ந்து ராக்கேனில் அரசு ராணுவத்தை அனுப்பிய பொழுதும், அரசு ஆதரவுடன் புத்தர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றார்கள்.
இதனிடையே இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மியான்மர் அரசு, இஸ்லாமிய ஒத்துழைப்பு கவுன்சிலை(ஒ.ஐ.சி) அழைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது. முஸ்லிம்களுடனான மியான்மர் அரசின் அணுகுமுறை சர்வதேச அளவில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானதை தொடர்ந்து சவூதி அரேபியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பான ஒ.ஐ.சியை மியான்மர் அரசு அழைத்துள்ளது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: