கார்களில் கருப்பு கண்ணாடி.. போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Sc Directs Police Remove Tinted Glasses Vehicles "கார்களில் கருப்பு கண்ணாடியை அகற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்," என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குற்றச் செயல்களை தடுக்கும் வண்ணம் கார்களில் கருப்பு பேப்பர்களை ஒட்டுவதற்கு உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் கருப்பு பேப்பர்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால், அரசியல்வாதிகள் மற்றும் பணபலம் மிக்கவர்கள் கார்களில் தொடர்ந்து கருப்பு கண்ணாடியுடன் காரில் வலம் வருவதாக பலதரப்பில் இருந்தும் புகார் எழுந்தது. போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாரபட்சமாக நடந்துகொள்வதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், கார்களில் கருப்பு கண்ணாடிகளை அகற்ற தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில காவல்துறை தலைவர்களை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தக்க நடவடிக்கை எடுக்காத காவல்துறை தலைவர்கள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதுகுறித்து நீதிபதிகள் பிஎஸ்.சவான் மற்றும் ஸ்வாதன்டேர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது," இந்த விஷயத்தில் மிகுந்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் பாரபட்சம் இருக்க்கூடாது. கண்டிப்பாக, கார்களில் கருப்பு கண்ணாடி பயன்படுத்துவது குற்றம்.
இசட் மற்றும் இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் விவிஐபிகளுக்கு மட்டும் தற்போது இந்த தடையிலிருந்து பாதுகாப்பு கருதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தடையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டிய விவிஐபிகளின் பட்டியலை மாநில காவல்துறை தலைவர், மாநில உள்துறை செயலர் அடங்கிய கமிட்டி கண்டறிந்து விலக்கு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் உள்ள விஐபிகளுக்கு மட்டுமே விதிகளின்படி விலக்கு அளிக்க வேண்டும். அனைத்து விஐபிகளுக்கும் விலக்கு அளிக்க இடமில்லை. இதனை உணர்ந்து இந்த தடையை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும்,  செல்லான் போடுவது மட்டும் போலீசாரின் கடமை என நினைப்பது தவறு. கார்களில் கருப்பு கண்ணாடி ஒட்டப்படிருந்தால் போலீசார் அதை உடனடியாக நீக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை தலைவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும். ஆனால், தற்போதைக்கு அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது," என்று தெரிவித்துள்ளனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: