வன்முறையை தூண்டும் வெப்சைட்கள்- விவரங்களை சேகரிக்க அமெரிக்கா உதவியை நாடும் இந்தியா


டெல்லி: இந்தியாவில் வன்முறையைத் தூண்டும் வகையில் ஆட்சேபனைக்குரிய படங்கள், வீடியோக்களை அமெரிக்க சர்வர்கள் மூலம் அப்லோடு செய்திருக்கும் இணையதளங்கள் பற்றிய விவரங்களை அந்நாட்டிடம் இருந்து பெற இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
சுமார் 250 இணையதளங்கள் வன்முறையைத் தூண்டும் வகையிலான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அப்லோடு செய்திருக்கின்றன. இந்த இணைய தளங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் தொடர்பாக கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் அளித்த தகவலில் பெரும்பாலானாவை பாகிஸ்தானிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவை அமெரிக்காவில் இயங்கும் சர்வர்கள் மூலம் அப்லோடு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்துஅமெரிக்கா விடம் இந்த இணையதளங்கள்பற்றிய கூடுதல் விவரங்களைக் கோர இந்தியா முடிவு செய்துள்ளது.
இருப்பினும் கூகுள், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் இத்தகைய வன்முறையை தூண்டும் புகைப்படங்கள், வீடியோக்களை அப்லோடு செய்வதைத் தடுக்க வில்லை என்று மத்திய அரசு கருதுகிறது. இதுபோன்ற உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளில் இந்த நிறுவனங்கள் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் மத்திய அரசு எதிர்பார்க்கிறது. ஆனால் யூடியூப்பில் இடம்பெற்றிருந்த இத்தகைய காட்சிகளை உடனே நீக்கிவிட்டதாக கூகுள் நிறுவனம் கூற்யுள்ளது. 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: