கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?

 When Will Ajmal Amir Kasab Be Hanged மும்பை: பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல்கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்து அவன் எப்போது தூக்கிலிடப்படுவான் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து வந்து 2008ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மும்பையில் வெறியாட்டம் போட்ட 10 தீவிரவாதிகளில் உயிருடன் சிக்கியவன் கசாப் மட்டுமே. அவனை உயிருடன் பிடிக்க முக்கியக் காரணமாக அமைந்தவர் சப் இன்ஸ்பெக்டர் துக்காராம். அவரை தீவிரவாதிகள் படுகொலை செய்து விட்டனர்.
பிடிபட்ட கசாப் தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளான். அவனுக்காக பெரும் பொருட் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறான்.
தற்போது அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கசாப்பை தூக்கிலிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூக்கிலிடுவதற்கான தேதியை ஆர்தர் சாலை சிறை நிர்வாகம்தான் முடிவு செய்து அறிவிக்கும். உடனடியாக தேதியை சிறை நிர்வாகம் அறிவிக்கும். அதுதான் வழக்கம். தேதி முடிவு செய்யப்பட்ட பின்னர் கசாப்பைத் தூக்கிலிடத் தேவையான ஏற்பாடுகள் நடைபெறும். முதலி்ல தூக்கிலிடுவதற்கான இடம் தயார் நிலைக்குக் கொண்டு வரப்படும். தூக்கிலிடுவதற்கான ஆளைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்படும். தூக்குக் கயிறு வாங்கப்படும்.
தினசரி இனி அவனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். உடல் நலப் பாதிப்பு ஏதும் இல்லாத வகையில் அவனைப் பார்த்துக் கொள்வார்கள்.
இருப்பினும் இதெல்லாம் ஒருபக்கம் நடந்து வந்தாலும் கூட இன்னும் கூட கசாப்புக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அதாவது குடியரசுத் தலைவரின் கருணைதான் அது. இந்தியாவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குடியரசுத் தலைவரிடமிருந்து கருணையை எதிர்பார்த்து மனு செய்யலாம். அதில் குடியரசுத் தலைவர் நினைத்தால் தூக்குத் தண்டனையை மாற்றி ஆயுள் தண்டனையாக்க முடியும். எனவே கசாப்புக்கும் கூட அந்த வாய்ப்பு உள்ளதால் அவனும் கருணை கோருவான் என்று தெரிகிறது.
கருணை மனுக்கள் மீ்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு எந்தவித நிர்ப்பந்தமும், கால வரையறை இல்லை என்பதால் அதில் எப்போது முடிவு வரும் என்பது பெரும் கேள்விக்குறியான விஷயம்தான். எனவே கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது என்பது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: