தயவு செய்து சரணடையாதீர்கள்: உதயகுமாருக்கு கெஜ்ரிவால் கோரி்க்கை

 Kejriwal Urges Udhayakumar Not Surrender கூடங்குளம்: கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை சரணடைய வேண்டாம் என்று சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
கூடங்குளம், இடிந்தகரையில் கடந்த திங்கட்கிழமை வன்முறை வெடித்ததையடுத்து போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தலைமறைவானார். இந்நிலையில் நேற்று மாலை இடிந்தகரை திரும்பிய அவர் இரவு நேரத்தில் ஒரு தேசிய தலைவர் முன்னிலையில் கூடங்குளம் காவல் நிலையத்தில் சரணடையப் போவதாக அறிவித்தார். அவர் தேசிய தலைவர் என்று குறிப்பிட்டது சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு 9 மணிக்கு இடிந்தகரை வந்தார்.
ஆனால் சரணடைய தயாராக இருந்த உதயகுமாரை 50 இளைஞர்கள் குண்டுகட்டாக தூக்கிக் கொண்டுபோய் படகில் வைத்து கடலுக்குள் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எனது குழுவினர் முழு ஆதரவு அளிப்பார்கள். நான் ஊழலுக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்தவன். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் செய்ய நாங்கள் தயார். செர்னோபில் அணு மின் நிலைய விபத்துக்கு பிறகு ரஷ்யா தனது நாட்டில் ஒரு அணு மின் நிலையத்தைக் கூட கட்டவில்லை. அப்படி இருக்கையில் ரஷ்ய கூட்டமைப்புடன் கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரசு எப்படி கூறலாம்?
உதயகுமாரை சரணடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர் சரணடைந்துவிட்டால் அது இயக்கத்தை பெரிதும் பாதிக்கும். உதயகுமார் மீதான வழக்குகளை அதிகாரிகள் உடனே வாபஸ் பெற வேண்டும் என்றார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: