எந்தவித தாக்குதலிலும் இருந்து ஈரான் தன்னை காத்துக்கொள்ளும்: அதிபர் அகமதிநிஜாத்


நியூயார்க்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஈரான் அதிபர் மகமூத் அகமதிநிஜாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள முஸ்லிம்கள் யூதர்கள், கிறிஸ்தவர்களை மணப்பதில் தங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,
மக்களின் மதத்தை மற்றும் உணர்வுகளை பாதிக்கும் எதுவுமே கண்டனத்திற்குரியது. நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியுள்ளது(இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்) அழகில்லை. இதற்கும் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமைக்கும் தொடர்பில்லை. கூறப்போனால் இது சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும். பல இடங்களில் இது குற்றமாகும்.
இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் எங்கள் நாட்டை காத்துக் கொள்ளும் உரிமை எங்களுக்கு உண்டு. ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று நினைப்பதால் அதை தாக்கப் போகிறோம் என்று இன்னொரு நாடு கூறுகிறது.
ஓரினச் சேர்க்கையால் யாராவது குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? முறையான கல்வி கொடுக்கப்பட வேண்டும். கல்வி முறையை மறுசீரமைக்க வேண்டும். அதேபோன்று அரசியல் அமைப்பையும் புதுப்பிக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளில் யாராவது ஒருவர் யூதரை டேட் செய்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, அந்த யூத ஆண் அல்லது பெண் யார் என்று பார்க்க விரும்புவேன். மக்கள் காதலிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஈரானில் வாழும் பல யூதர்கள் எங்களுக்கு நெருக்கமானவர்களாக உள்ளனர். சில முஸ்லிம்கள் யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களை மணக்கின்றனர். அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.
ஈரான் அணு ஆயுத திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இஸ்ரேலுக்கு கவலையாக உள்ளது. அதனால் ஈரானில் உள்ள அணு ஆயுத நிலையங்களை அழிக்கப் போவதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் தாக்கினால் தக்க வழியில் பதிலடி கொடுப்பதில் ஈரானும் முனைப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: