அமெரிக்காவில் மினிசோட்டா பகுதியில் செயல்படும் சூதாட்ட விடுதி ஒன்று புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்த திட்டமிட்டது. இதற்காக பதப்படுத்திய பன்றி இறைச்சி, பாலாடைக் கட்டி ஆகியவையுடன் கூடிய ராட்சத “பர்கெர்” தயாரித்தனர்.இதன் சுற்றளவு 10 அடியாகவும், எடை 914 கிலோவாகும். இதை தயாரிக்க 4 மணி நேரத்தை செலவிட்டதாக நிறுவனம் கூறியது.
பின்பு இந்த பர்கெர் விடுதிக்குவந்த வாடிக்கையாளர்களுக்கு உணவாக வழங்கப்பட்டது. இதனை பார்வையிட வந்த கின்னஸ் குழுவை சேர்ந்த பிலிப் கூறுகையில், “இது அரிய சாதனை முயற்சி. சாப்பிடுவதற்கும் இந்த பர்கெர் நல்ல சுவையுடன் இருந்தது” என குறிப்பிட்டார்.
இதற்கு முன்பு 400 கிலோ எடை கொண்ட பர்கெர் தான் சாதனையாக இருந்தது. தற்போது அதை இந்த புதிய பர்கெர் முறியடித்திருக்கிறது.




