குடிமகன்களுக்கு செம ஆப்பு... சரக்கு விலைகள் அதிரடி உயர்வு

சென்னை: தமிழக அரசின் மதுபானக் கடைகளான டாஸ்மாக்கில் இன்று முதல் மதுபான விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய உயர்வின் மூலம் தமிழக அரசுக்கு ரூ800 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு, ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில்டாஸ்மாக் வருமானம் முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிலையில், மது பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இன்று முதல் மது வகைகள் பாட்டிலுக்கு ரூ.5 விலை உயர்த்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, ரம், பிராந்தி, விஸ்கி போன்ற மது வகைகள் (சாதாரண ரகம்), குவாட்டர் பாட்டில் ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று முதல் ரூ.5 விலை உயர்ந்து, ரூ.70-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல், ரம், பிராந்தி, விஸ்கி போன்றவற்றின் நடுத்தர ரகம் ரூ.75-ல் இருந்து ரூ.80 ஆகவும் விலை அதிகரிக்கப்படுகிறது. பிரீமியம் ரக வகைகளும் இதேபோல், ரூ.5 விலை உயர்த்தப்படுகிறது. இதேபோல், அரை மற்றும் முழு பாட்டில் மது விலைகள் ரூ.45 வரை உயர்த்தப்படுகிறது. சாதாரண ரக அரை பாட்டில் விலை தற்போது ரூ.125, ரூ.130 மற்றும் ரூ.135 ஆக உள்ளது. இனி இந்த வகைகள் அனைத்தும் ரூ.140 ஆக உயர்த்தப்படுகிறது. இதில் நடுத்தர ரகங்கள் தற்போது ரூ.145, ரூ.155 ஆக உள்ளது. இந்த வகைகள் அனைத்தும் இனி ரூ.165 ஆக உயரும். பிரீமியம் ரக அரை பாட்டில் விலை தற்போது ரூ.155, ரூ.160 ஆக உள்ளது. இவற்றின் விலை இனி ரூ.180 ஆக உயரும்.முழு பாட்டில் சாதாரண ரகத்தின் விலை தற்போது ரூ.235, ரூ.245, ரூ.255 ஆக உள்ளது. இனி இந்த ரகங்கள் அனைத்தும் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.280க்கு விற்கப்படும். முழு பாட்டில் நடுத்தர ரகங்களின் விலை தற்போது ரூ.280, ரூ.295க்கு ஆக உள்ளது. இனி ரூ.320 ஆக இவற்றின் விலை உயர்த்தப்படும். பிரீமியம் ரக முழு பாட்டில் விலை தற்போது ரூ.315, ரு.320, ரூ.360 ஆக இருந்தது,. இனி இவற்றின் விலை ரூ.360 ஆக உயர்த்தப்படும். ஆனால், பீர் வகைகள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: