சென்னையில் 4 மணிக்கு ஆரம்பித்து 5 மணி வரை வெளுத்து வாங்கிய மழை..


  Heavy Rain Cools Hot Chennai An Hour  சென்னை: சென்னையில் இன்று மாலை சுமார் ஒரு மணி நேரம் கன மழை கொட்டித் தீர்த்து விட்டது. காற்று இல்லை, இடி மின்னல் இல்லை... இதெல்லாம் இல்லாமல் படு அழகாக பெய்த அந்த பேய் மழையால் நகரின் பல பகுதிகள் குறிப்பாக புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாகி விட்டன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி வாகனப் போக்குவரத்து வெகுவாக தடைபட்டது.

சென்னையில் கடந்த சில தினங்களாக இரவில் மழை பெய்து வருகிறது. பகல் முழுக்க வாட்டி வதைக்கும் வெயில், இரவில் கொஞ்ச நேரம் மழை என்று ரேஞ்சில் இருந்து வந்த நிலையில் இன்று மாலை கன மழை புரட்டிப் போட்டு விட்டது.
மாலை 4 மணியளவில் லேசாக ஆரம்பித்த இந்த மழை போகப் போக வெளுத்து வாங்கியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த இந்த கன மழையால் சென்னை நகரின் பல பகுதிகள் ஸ்தம்பித்தன. குறிப்பாக புறநகர்ப் பகுதிகள் முடங்கிப் போயின.
பள்ளி கல்லூரிகளை விட்டு வந்த மாணவர்கள், வேலை பார்த்து திரும்புவோர் என சகலரும் மழையில் சிக்கிக் கொண்டனர். தாம்பரம், ஆவடி, மேடவாக்கம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் மழை பலமாக பெய்து தீர்த்தது.
இடி மின்னல், காற்று அவ்வளவாக இல்லாததால் மழை விடாமல் பெய்ததது. இந்த கன மழையால் முக்கியச் சாலைகளில் நீர் வெள்ளம் போல ஓடியது. 

  

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: