தமிழகத்தில் கடைகள் அடைப்பு- திருப்பூர், கோவையில் முழு ஸ்டிரைக்

 Normalcy Not Affected Tn Due Bharath Bandh சென்னை: பாரத் பந்த் தமிழகத்தில் பெரிய ஆதரவைத் தரவில்லை. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல ஆட்டோக்கள் ஓரளவு ஓடவில்லை. மற்றபடி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின. அரசுப் பேருந்துகளும் கிட்டத்தட்ட முழுமையான அளவில் ஓடியதால் இயல்பு வாழ்க்கைப் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர்களுக்குக் கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடுகள் அனுமதி ஆகியவற்றைக் கண்டித்து இந்தியா முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆதரவுக் கட்சிகளும் பிற எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்த பந்த்துக்கு தமிழகத்தில் பெரிய அளவில் ஆதரவில்லை. ஓரிரு பகுதிகளில்தான் பந்த் முழு அளவில் இருந்தது.
பஸ்கள் ஓடின
தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் வழக்கமாக ஓடின. நகரப் பேருந்துகளும், வெளியூர்ப் பேருந்துகளும் ஓடின. இருப்பினும் சில பகுதிகளில் பேருந்துகள் குறைவாக ஓடியதாக தகவல்கள் தெரிவித்தன.
பேருந்துகள் அதிக அளவில் ஓடாமல் இருக்குமோ என்ற எண்ணத்தில் பலர் மின்சார ரயில்களை நாடி வந்ததால் சென்னையில் மின்சார ரயில்களில் வழக்கத்தை விட சற்று கூடுதலாக கூட்டம் காணப்பட்டது.
கடைகள் அடைப்பு
தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிறிய கடைகள் முதல் ஹோட்டல்கள், மெக்கானிக் ஷாப்புகள், டீக்கடைகள் என சகலவிதமான கடைகளும் பெருமளவில் மூ்டப்பட்டிருந்தன. இருப்பினும் பல பகுதிகளில் சில கடைகள் திறக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
ஆட்டோக்கள் ஓடவில்லை
தமிழகத்தில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆனால் அதிமுகவைச் சேர்நதவர்களின் ஆட்டோக்கள் ஓடின. எங்களது கட்சி பந்த்துக்கு ஆதரவு தரவில்லை எனவே நாங்கள் ஆட்டோக்களை ஓட்டுவதாக டிரைவர்கள் கூறினர்.
தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை
பந்த் காரணமாக பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் அவை செயல்படவில்லை. மற்றபடி அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டன. அரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகளும் செயல்பட்டன.
கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது
சென்னை கோயம்பேட்டில் உள்ள மொத்த மார்க்கெட் மூ்டப்பட்டிருந்தது. அங்குள்ள வியாபாரிகளும், போராட்டத்தில் குதித்ததால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
காய்கறிக் கடைகள், பழக் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மூ்டப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 1300க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
லாரிகள் ஓடவில்லை
இதேபோல தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 5 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்றதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்தது. டீசல் விலையை அரசு 30 நாட்களுக்குள் குறைக்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில்கள் ஓடின
தமிழகம் முழுவதும் ரயில் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை. இதனால் அவை வழக்கம் போல ஓடின. இருப்பினும் ஆங்காங்கு ரயில் மறியல் போராட்டங்கள் நடந்ததால் போக்குவரத்தில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. மற்றபடி ரயில்கள் போக்குவரத்தில் தாமதமோ, தடங்கலோ ஏற்படவில்லை.
பந்த்திலிருந்து மருத்துவமனைகள், மருந்துக் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதால் அவை அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டன.
திருப்பூர், கோவையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஸ்டிரைக்
கோவை, திருப்பூரில் கிட்டத்தட்ட ஸ்டிரைக் முழு அளவில் இருந்தது. திருப்பூரில் 10,000 தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்குப் போகவில்லை.
இதேபோல கோவையிலும் மின்னணு நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்நிறுவனங்கள் இயங்கவில்லை. அங்கும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைக்குப் போகாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தனர்.
சேலத்தில் ரயில் மறியல் -200 பேர் கைது
பந்த்தின் ஒரு பகுதியாக சேலத்தில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.
சேலம் மார்க்கெட் ரயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 200 பேர் கூடி சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்துக் கோஷமிட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த சேலம் - விருதாச்சலம் ரயிலை மறித்துப் போராட்டம்நடத்தினர். இதையடுத்து 200 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: