கணவனாக குடும்பம் நடத்தியது தன்னுடைய அப்பா உண்மையறிந்த பெண் அதிர்ச்சி

கணவனாக குடும்பம் நடத்தியது தன்னுடைய அப்பா உண்மையறிந்த பெண் அதிர்ச்சிஅமெரிக்காவில் தன்னுடன் குடும்பம் நடத்திய கணவன், உண்மையில் தன்னுடைய தந்தை என்று அறிந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் உள்ளது டாய்லஸ்டவுண். மிகச்சிறிய கிராமம். இங்கு 3 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர் வேலரி ஸ்புரில் (60). இவருடைய கணவர் பெர்சி ஸ்புரில். இவர்களுக்கு 3 குழந்தைகள், 8 பேரக் குழந்தைகள் உள்ளனர். 1998ம் ஆண்டு பெர்சி இறந்து விட்டார். அவர் இறந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு, அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வேலரிக்கு கிடைக்கிறது. இவருடன் பல ஆண்டுகள் குடும்பம் நடத்திய பெர்சி உண்மையிலேயே அவரது தந்தை என்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல். இதை உண்மையை அவரது மாமாதான் தெரிவித்தார். முதலில் வேலரியும் இதை நம்ப மறுத்தார். டிஎன்ஏ பரிசோதனையில் உண்மை தெரியவந்தது. வேலரி 3 வயது குழந்தையாக இருந்தபோது, அவரை பாட்டியிடம் கொடுத்துவிட்டார் வேலரியின் தாய். அப்போதிருந்து பாட்டியிடமே வளர்ந்தார் வேலரி. கிறிஸ்டினா என்ற பெண் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அவர்தான் வேலரியின் உண்மையான தாயாக இருக்கக் கூடும் என்றும் நம்புகிறார். இவர் இரவு நேர கிளப்களில் வேலை புரிந்து வந்தவர். பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தார் என்றும் கூறுகின்றனர்.

இதுகுறித்து வேலரி கூறியதாவது: மிகமிக இக்கட்டான நிலை எனக்கு வந்துள்ளது. இதில் இருந்து மீண்டு வர முயற்சிக்கிறேன். எந்த பிரச்னையில் இருந்தும் மீண்டு வர முடியும் என்பதற்கு என் வாழ்க்கை ஒரு உதாரணம். மற்றவர்கள் இதை உணர வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன். நான் எந்தளவு மனமொடிந்துள்ளேன் என்பதை வார்த்தையால் சொல்ல முடியவில்லை. கடவுளுக்கு தெரியும். பெர்சிக்கு நான் மகள் என்று பின்னாளில் தெரிந்திருக்கலாம். பயந்து போய் உண்மையை சொல்லாமல் இருந்திருக்கலாம். எனவே, அவரை (கணவன்/தந்தை) நான் வெறுக்கவில்லை. வெறுப்புணர்வு கொண்டவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. என் வாழ்க்கையில் நடந்த உண்மைகளை என் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த உண்மை அவர்களை காயப்படுத்தும் என்பதை அறிவேன். எனினும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு பெரிய அதிர்ச்சியை கேட்ட பிறகும் நான் உயிர் வாழ்வதற்கு காரணம் இருப்பதாக நினைக்கிறேன். இவ்வாறு வேலரி கூறியுள்ளார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேலரி, அக்ரான் பீகன் என்ற இதழுக்கு துணிந்து தன்னுடைய வாழ்க்கை ரகசியங்களை சொல்லி உள்ளார். தந்தை பெர்சிக்கும் தாய்க்கும் எத்தனை குழந்தைகள் பிறந்தன என்பதுகூட வேலரிக்கு தெரியவில்லை. ஆனால், 6 சகோதரர்கள் இருக்கலாம் என்கிறார். மன அழுத்த பாதிப்புக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் வேலரி.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: