ஒசாமாவைக் காட்டிக் கொடுத்த டாக்டர் அப்ரிதியை நாயைப் போன்று சாப்பிட வைத்த ஐஎஸ்ஐ

பெஷாவர்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனைக் காட்டிக் கொடுத்த பாகிஸ்தான் டாக்டரை ஐஎஸ்ஐ அதிகாரிகள் சிகரெட்டால் சுட்டு கொடுமைப்படுத்தியதுடன் நாய் போன்று சாப்பிட வைத்துள்ளனர்.
அப்போத்தாபாத்தில் பதுங்கியிருந்த அல் கொய்தா தலைவர் ஒசாமாவை அமெரிக்காவிடம் காட்டிக் கொடுத்தவர் பாகிஸ்தான் டாக்டர் ஷகில் அப்ரிதி. அவர் சிஐஏவுக்கு உளவாளியாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம். முன்னதாக பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ பிடியில் கடந்த மே மாதம் 23ம் தேதி ஹயாத்தாபாத்தில் இருந்தபோது தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து அப்ரிதி தற்போது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஐஎஸ்ஐ ஆட்கள் எனது ஆடைகளை கழற்றச் செய்தனர். அதன் பிறகு ஒரு பழைய கந்தலான ஆடையை அணியும்படி மேஜர் ஒருவர் என்னை வற்புறுத்தினார். நானும் வேறு வழியில்லாமல் அணிந்தேன். உணவு உண்ணக் கூட கடினமாக இருந்தது. நான் மண்டியிட்டு நாய் போன்று உணவு உண்டேன். தரையில் அமர்ந்தேன். அவர்கள் சிகரெட் துண்டுகளை வைத்து எனக்கு சூடுபோட்டனர்.
ஐஎஸ்ஐ எனது வங்கிக் கணக்கில் இருந்த கோடிக்கணக்கான ரூபாயை எடுத்துக் கொண்டது. நான் கோடிக் கணக்கில் சம்பாத்தித்து எனது குடும்பத்தையும், எனது சகோதரரின் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டேன். தற்போது அந்த பணம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டனர் என்றார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: