சீனாவில் உள்ள ஹுபி மாகாணத்தில் யூஷான் என்ற மலைவாசி கிராமம் ஒன்று உள்ளது. இது உலகிலேயே மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமமாக விளங்குகிறது.இந்த கிராமத்துக்கு சாலை வசதி கிடையாது. ஒற்றையடிப்பாதை வழியாக பக்கத்து கிராமத்துக்கு செல்ல வேண்டுமானால் பல நாட்கள் நடக்க வேண்டியிருக்கும்.
இதனால் இந்த கிராமத்தில் வசிக்கும் 200 மக்களுக்காக இரு மலைகளின் உச்சியை இணைத்து “ரோப்வே” ஒன்றை அமைத்து கொடுத்திருக்கிறார்கள். சிறிய பெட்டியை கொண்டு நகர்ந்து செல்லும் இந்த ரோப்வே தரையில் இருந்து 1,200 அடி உயரத்தில் (400 மீற்றர்) அந்தரத்தில் செல்கிறது.
மலைகளுக்கு இடையேயான தூரம் 1,000 மீற்றர் ஆகும். டீசல் என்ஜின் உதவியுடன் இந்த ரோப்வே இயக்கப்படுகிறது. இது மிகவும் அபாயகரமான பயணம் தான் என்று இதை பராமரிக்கும் ஊழியர் ஷியாங் கூறுகிறார்.

