தொடர் மின்வெட்டு: பொன்னேரி மின்வாரிய அதிகாரிகளுக்கு தர்ம அடி!

 Power Cut Eb Office Ransacked பொன்னேரி: தமிழக மக்களை வாட்டி வதைக்கும்மின்வெட்டின் உச்சகட்ட விளைவு என்ன என்பதை பொன்னேரிவாசிகள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொன்னேரி மின்வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் அடித்து உதைத்துள்ளனர்.
பொன்னேரில் மின்வெட்டைக் கண்டித்து இன்று காலையில் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின் போது ஆத்திரத்திலும் வெறுப்பிலும் இருந்த பொதுமக்கள் சிலர் அங்குள்ள மின்வாரியம் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்த மேசை, நாற்காலிகளை தூக்கி எறிந்து தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். இருப்பினும் ஆத்திரம் அடங்காததால் கண்ணில்பட்ட மின்வாரிய அதிகாரிகளையும் அடித்து உதைத்து தாக்கியிருக்கின்றனர்.
இதனால் அலறிப்போன மின்வாரிய அதிகாரிகளும் பணியாளர்களும் உயிர்தப்பினால் போதும் என்று ஓட்டம் பிடித்தனர். மின்வெட்டுக்கான எதிர்வினை என்ன என்பது பொன்னேரியில் தொடங்கியிருக்கிறது என்றே கூறப்படுகிறது.

சில நோய்களுக்கான ஈஸியான வீட்டு மூலிகை மருந்துகள்!!!

herbal remedies diseases உடல் நலம் சரியில்லை என்றால் நிறைய பேர் உடனே மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஒருசிலர் நமது பாரம்பரிய மருந்துகளை பின்பற்றுவார்கள். ஏனெனில் நமது பாரம்பரிய வீட்டு மருந்துகளின் அருமை அவர்களுக்கு நன்கு தெரிந்திருப்பதே ஆகும். ஆனால் சிலருக்கு அதன் அருமை, அதனைப் பற்றிய ஒரு நன்மைகள் சரியாக தெரியவில்லை. மேலும் நிறைய மக்கள் கெமிக்கல் உள்ள மருந்துகளை பயன்படுத்துதைவிட, மூலிகை மருத்துவமான ஆயுர்வேதத்தை தான் பின்பற்றுகிறார்கள். ஆகவே அத்தகைய ஆயுர்வேத மருத்துவத்தில் நீரிழிவு, சளி, இருமல் மற்றும் ஜலதோஷம் போன்றவற்றிற்கு எந்த மூலிகைகளை பயன்படுத்தினால் நல்லது என்பதைப் பற்றி பார்ப்போமா!!!

நீரிழிவிற்கு...

கறிவேப்பிலை: உணவுகள் அனைத்திலும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலை ஒரு சூப்பரான மருத்துவகுணம் கொண்டது. அதிலும் நீரிழிவிற்கு நல்லது. ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மூன்று மாதம் தினமும் 8-10 இலைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைத்துவிடும்.
இலவங்கப்பட்டை: இது பெரும்பாலும் பிரியாணிக்கு பயன்படுத்துவார்கள். இத்தகைய இலவங்கப்பட்டையை தினமுத் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு குறைந்துவிடும். மேலும் சில காரத்திற்கு பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பே இலைகள், மஞ்சள் மற்றும கிராம்பு போன்றவையும் நீரிழிவை சரிசெய்யும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய் சாப்பிட்டால், கூந்தல் நன்கு வளரும் என்று அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய நெல்லிக்காய் ஒரு சிறந்த மூலிகைப்பொருள். இதனால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அதற்கு இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாகற்காய் ஜூஸ் உடன் கலந்தும் சாப்பிடலாம். மேலும் இந்த நெல்லிக்காயை தொடர்ந்து 2-3 மாதத்திற்கு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

இருமல் மற்றும் சளிக்கு...
துளசி: உடலில் அதிக குளிர்ச்சியின் காரணமாக வரும் சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு துளசி இலைகளை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது துளசி டீ-யாகவோ செய்து சாப்பிட்டால், நல்லது.
இஞ்சி: சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி மற்றொரு சிறந்த மூலிகைப் பொருள். ஆகவே சளி அல்லது இருமல் ஏற்படும் போது ஒரு துண்டு இஞ்சியை தேனுடன் தொட்டு சாப்பிடலாம். இல்லையெனில் அதனை இஞ்சி டீ போட்டும் குடிக்கலாம்.
ஏலக்காய்: உணவுகளில் நறுமணத்திற்கு சேர்க்கும் ஏலக்காயும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. ஆகவே இதனை டீ செய்து குடித்தால், இருமலால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.
எலுமிச்சை: வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு கலந்து குடித்தால், சளி மற்றும் இருமல் சரியாகும். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம்.

எந்தவித தாக்குதலிலும் இருந்து ஈரான் தன்னை காத்துக்கொள்ளும்: அதிபர் அகமதிநிஜாத்


நியூயார்க்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஈரான் அதிபர் மகமூத் அகமதிநிஜாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள முஸ்லிம்கள் யூதர்கள், கிறிஸ்தவர்களை மணப்பதில் தங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,
மக்களின் மதத்தை மற்றும் உணர்வுகளை பாதிக்கும் எதுவுமே கண்டனத்திற்குரியது. நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியுள்ளது(இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்) அழகில்லை. இதற்கும் சுதந்திரம் மற்றும் பேச்சுரிமைக்கும் தொடர்பில்லை. கூறப்போனால் இது சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும். பல இடங்களில் இது குற்றமாகும்.
இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் எங்கள் நாட்டை காத்துக் கொள்ளும் உரிமை எங்களுக்கு உண்டு. ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்று நினைப்பதால் அதை தாக்கப் போகிறோம் என்று இன்னொரு நாடு கூறுகிறது.
ஓரினச் சேர்க்கையால் யாராவது குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? முறையான கல்வி கொடுக்கப்பட வேண்டும். கல்வி முறையை மறுசீரமைக்க வேண்டும். அதேபோன்று அரசியல் அமைப்பையும் புதுப்பிக்க வேண்டும்.
உங்கள் குழந்தைகளில் யாராவது ஒருவர் யூதரை டேட் செய்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, அந்த யூத ஆண் அல்லது பெண் யார் என்று பார்க்க விரும்புவேன். மக்கள் காதலிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஈரானில் வாழும் பல யூதர்கள் எங்களுக்கு நெருக்கமானவர்களாக உள்ளனர். சில முஸ்லிம்கள் யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களை மணக்கின்றனர். அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.
ஈரான் அணு ஆயுத திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது இஸ்ரேலுக்கு கவலையாக உள்ளது. அதனால் ஈரானில் உள்ள அணு ஆயுத நிலையங்களை அழிக்கப் போவதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் தாக்கினால் தக்க வழியில் பதிலடி கொடுப்பதில் ஈரானும் முனைப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'லைட்' போடாமல் இருந்தால் பற்றாக்குறையை சமாளிக்கலாம்... மின்வாரியத்தின் பலே யோசனை!

சென்னை: மாலை நேரங்களில் ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் மின்சாரத்தை சேமிக்கும் வகையில், விளம்பரப் பலகைகளில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளைப் பொருத்தாமல் இருக்க முன்வர வேண்டும். இதன் மூலம் மின்சாரப் பற்றாக்குறையை குறைத்து மின்விநியோகத்தை சீரமைக்க முடியும் என்று தமிழ்நாடுமின்சார வாரியம் கூறியுள்ளது.
மேலும் மாலை 6 மணிக்கு மேல் ஸ்டார் ஹோட்ல்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றில் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் மின்வாரியமான, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தற்போது மின்சார உற்பத்திக்கும், மின்சார தேவைக்கும் இடையே 4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை இருக்கிறது. அதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் தேவைக்கேற்றவாறு அறிவிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக மின்சார வெட்டு அமல்படுத்தவேண்டியுள்ளது.
இந்நிலையை ஓரளவுக்கு சரிசெய்வதற்கு அனைத்து தரப்பு மின்நுகர்வோர்களின் உதவியும் தேவைப்படுகிறது.
அனைத்து நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவகங்கள்(ஸ்டார் ஓட்டல்) அவர்களது பங்களிப்பாக அக்டோபர் மாத இறுதி வரை மாலை 6 மணி முதல் தங்களது சொந்த ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்தேவையை நிறைவு செய்துகொள்வதோடு அறை குளிர்விப்பான்களின் வெப்பநிலையை சீராக 26 டிகிரியில் நிலை நிறுத்தி, உபயோகித்து மின்சார சேமிப்பு செய்ய தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு சேமிக்கப்படும் மின்சாரத்தை கொண்டு, தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அடிப்படைதேவைக்கான மின்சாரத்தை விநியோகம் செய்ய ஏதுவாக இருக்கும் எனத்தெரிவித்து கொண்டு இந்நிலையில் தகுந்த ஒத்துழைப்பு அளிக்கும்படி வேண்டப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழத்தில் தற்போது சென்னையில் மட்டுமே மிகக் குறைந்த அளவிலான மின்தடை உள்ளது. அதாவது அதிகாரப்பூர்வமாக 1 மணி நேரம் கரண்ட் கட் செய்யப்படுகிறது. இருப்பினும் பல பகுதிகளில் இதையும் தாண்டி கரண்ட்டை அவ்வப்போது பிடுங்கி விடுவதாக மக்கள் சொல்கிறார்கள்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் குறைந்தது 12 மணி நேரம் முதல் அதிகபட்சம் 16 மணி நேரம் வரை மின்சாரம் இல்லை என்று மக்கள் குமுறுகிறார்கள். இதனால் அன்றாடப் பணிகளான மிக்ஸி, கிரைண்டர்களை இயக்க முடியவில்லை. பிரிட்ஜ் ரிப்பேராகி விடுகிறது. மின்விசிறிகளை இயக்க முடியவில்லை. இதனால் தினசரி வாழ்க்கை கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போயுள்ளது.
என்ன செய்வது, எங்கு போய் முட்டிக் கொள்வது என்று தெரியாமல் தமிழக மக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் பெரும் குமுறலில் உள்ளனர்.
மாணவர்கள் படிக்க முடியவில்லை. தொழில் நிறுவனங்கள் வேலை செய்ய முடியில்லை. இரவில் கொசுக்கடியுடன் மின்தடையும் சேர்ந்து மக்களை கொன்று வருகிறது.
இந்த பிரச்சினை குறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஒரு பக்கம் காற்றாலை மின்சாரம் கைகொடுக்கவில்லை. இன்னொரு பக்கம் மின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடைவெளி அதிகரித்தபடி உள்ளது. இதனால்தான் வேறு வழியில்லாமல் மின் வெட்டை பல மணி நேரம் அதிகரிக்க வேண்டி உள்ளது.
சென்னையில் சாதாரண கடைகளில் கூட இப்போது ஏராளமான அலங்கார விளக்குகள் போடப்படுகின்றன. இதனால் அதிக அளவில் மின்சாரத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். மாலை நேரங்களில் இந்த அலங்கார லைட்டுகளைப் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
எனவே இப்படிப்பட்டவர்கள் சற்று ஒத்துழைப்பு கொடுத்தால் பற்றாக்குறையை சற்று கணிசமான அளவில் குறைத்து விநியோகத்தை அதிகரிக்க முடியும் என்றார்.

ஒரே ஒரு வெங்காயம் 8 கிலோ எடை இருக்குமா?

இங்கிலாந்து நாட்டிலுள்ள கிரேட் யார்க்ஷேரியில் விவசாய உற்பத்தி பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த அதிசய காய்கறிகளை கொண்டு வந்து காட்சிக்கு வைத்தார்கள்.
இதில் அமெரிக்காவில் நியூஜெர்சி பகுதியிலுள்ள நிவார்க் என்ற ஊரை சேர்ந்த கிளேஸ்பெர்க்(வயது 68) என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த 8.2 கிலோ (18 பவுண்ட்) எடை கொண்ட ராட்சத வெங்காயத்தை காட்சிக்கு வைத்தார். இது புதிய உலக சாதனையாகும்.
இதை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கப்பட்டது. இதற்கு முன்பும் இவர் 18.5 அடி நீளம் கொண்ட முள்ளங்கியை உற்பத்தி செய்து சாதனை படைத்தவர் ஆவார். தற்போது ராட்சத வெங்காயத்தை உற்பத்தி செய்து 2-வது சாதனை புரிந்துள்ளார்.


இருபத்தைந்து நிமிடத்திற்குள் இத்தனை பிரம்மாண்டமா?

மிகவும் தத்துரூபமான ஓவியங்களைப் படைப்பதற்கு பொதுவாக அதிக நேரம் தேவைப்படும். ஆனால் கிரேஹரி யூகிளைட் எனும் அமெரிக்கவாசி ஒருவர் தனது வேலை செய்யும் இடத்தில் மதிய நேர உணவு இடைவேளையின் போது அசத்தலான ஓவியங்களை வரைந்து பிரமிப்பூட்டியுள்ளார். அவரின் கைவண்ணத்தில் உருவான சில புகைப்படங்களின் தொகுப்பே இதுவாகும்.







நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படமெடுத்த அமெரிக்கர் தலைக்கு 1 லட்சம் டாலர்: பாக். அமைச்சர்

 Pakistani Minister Offers Bounty Over Anti Islam Video இஸ்லாமாபாத்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் விதமாக படத்தை வெளியிட்ட அமெரிக்கரை கொலை செய்வோருக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் குலாம் அகமது பிலோர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் தாக்குதலுக்குள்ளாகின. பாகிஸ்தானிலும் பல்வேறு நகரங்களில்தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறைகளாக வெடித்ததில் மொத்தம் 23 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் குலாம் அகமது பிலோர், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்த அமெரிக்கரை கொலை செய்தால் 1 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப் போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக குலாம் அகமது பிலோர் கூறுகையில். நபிகள் நாயகத்தை இழிவு படுத்தி படம் தயாரித்து வெளியிட்ட அமெரிக்கரை கொல்பவருக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு தொகை வழங்கப்படும். பொது மக்கள் தவிர பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தலிபான் மற்றும் அல்- கொய்தா தீவிரவாதிகள் அவரை கொலை செய்தால் கூட அவர்களுக்கும் இந்த பரிசு தொகை பொருந்தும். , ஒருவரை கொலை செய்யும்படி பொது மக்களை தூண்டி விடுவது கிரிமினல் குற்றம்தான். எந்த நீதிமன்றத்திலும் என் மீது வழக்குத் தொடர்ந்தாலும் கவலை கிடையாது என்றார்.

கணவனாக குடும்பம் நடத்தியது தன்னுடைய அப்பா உண்மையறிந்த பெண் அதிர்ச்சி

கணவனாக குடும்பம் நடத்தியது தன்னுடைய அப்பா உண்மையறிந்த பெண் அதிர்ச்சிஅமெரிக்காவில் தன்னுடன் குடும்பம் நடத்திய கணவன், உண்மையில் தன்னுடைய தந்தை என்று அறிந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் உள்ளது டாய்லஸ்டவுண். மிகச்சிறிய கிராமம். இங்கு 3 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர் வேலரி ஸ்புரில் (60). இவருடைய கணவர் பெர்சி ஸ்புரில். இவர்களுக்கு 3 குழந்தைகள், 8 பேரக் குழந்தைகள் உள்ளனர். 1998ம் ஆண்டு பெர்சி இறந்து விட்டார். அவர் இறந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு, அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வேலரிக்கு கிடைக்கிறது. இவருடன் பல ஆண்டுகள் குடும்பம் நடத்திய பெர்சி உண்மையிலேயே அவரது தந்தை என்பதுதான் அந்த அதிர்ச்சித் தகவல். இதை உண்மையை அவரது மாமாதான் தெரிவித்தார். முதலில் வேலரியும் இதை நம்ப மறுத்தார். டிஎன்ஏ பரிசோதனையில் உண்மை தெரியவந்தது. வேலரி 3 வயது குழந்தையாக இருந்தபோது, அவரை பாட்டியிடம் கொடுத்துவிட்டார் வேலரியின் தாய். அப்போதிருந்து பாட்டியிடமே வளர்ந்தார் வேலரி. கிறிஸ்டினா என்ற பெண் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அவர்தான் வேலரியின் உண்மையான தாயாக இருக்கக் கூடும் என்றும் நம்புகிறார். இவர் இரவு நேர கிளப்களில் வேலை புரிந்து வந்தவர். பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தார் என்றும் கூறுகின்றனர்.

இதுகுறித்து வேலரி கூறியதாவது: மிகமிக இக்கட்டான நிலை எனக்கு வந்துள்ளது. இதில் இருந்து மீண்டு வர முயற்சிக்கிறேன். எந்த பிரச்னையில் இருந்தும் மீண்டு வர முடியும் என்பதற்கு என் வாழ்க்கை ஒரு உதாரணம். மற்றவர்கள் இதை உணர வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறேன். நான் எந்தளவு மனமொடிந்துள்ளேன் என்பதை வார்த்தையால் சொல்ல முடியவில்லை. கடவுளுக்கு தெரியும். பெர்சிக்கு நான் மகள் என்று பின்னாளில் தெரிந்திருக்கலாம். பயந்து போய் உண்மையை சொல்லாமல் இருந்திருக்கலாம். எனவே, அவரை (கணவன்/தந்தை) நான் வெறுக்கவில்லை. வெறுப்புணர்வு கொண்டவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. என் வாழ்க்கையில் நடந்த உண்மைகளை என் குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த உண்மை அவர்களை காயப்படுத்தும் என்பதை அறிவேன். எனினும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு பெரிய அதிர்ச்சியை கேட்ட பிறகும் நான் உயிர் வாழ்வதற்கு காரணம் இருப்பதாக நினைக்கிறேன். இவ்வாறு வேலரி கூறியுள்ளார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேலரி, அக்ரான் பீகன் என்ற இதழுக்கு துணிந்து தன்னுடைய வாழ்க்கை ரகசியங்களை சொல்லி உள்ளார். தந்தை பெர்சிக்கும் தாய்க்கும் எத்தனை குழந்தைகள் பிறந்தன என்பதுகூட வேலரிக்கு தெரியவில்லை. ஆனால், 6 சகோதரர்கள் இருக்கலாம் என்கிறார். மன அழுத்த பாதிப்புக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் வேலரி.

முதல் நாளே 'பல் இளித்த' ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் விமானம்!

 Air India S Dreamliner Develops Technical Snag டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ள புதிய போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் தனது சேவையைத் துவங்கிய முதல் நாளே பழுதானது.
ஏர் இந்தியா நிறுவனம் அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை வாங்கியது. கடந்த புதன்கிழமை இந்த விமானம் தனது சேவையைத் துவங்கி டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தது. பிறகு சென்னையில் இருந்து கிளம்பி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அடைந்தது.
அதன் பிற்கு பெங்களூருக்கு கிளம்ப இருந்த நேரத்தில் விமானத்தில் உள்ள குளிரூட்டும் யூனிட் பழுதானது. இதையடுத்து அந்த கோளாறு சரி செய்த பிறகு 40 நிமி்டம் தாமதாக புறப்பட்டுச் சென்றது.
ட்ரீம்லைனரை ஏர் இந்தியா டெலிவரி எடுக்கும் முன்பு அமெரிக்காவில் தற்போது கோளாறு ஏற்பட்ட அதே பகுதி 2 முறை மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தவிர ஆக்டுவேட்டர் என்ற எலக்ட்ரிக் பாகத்திலும் கோளாறு ஏற்பட்டு அது மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
எரிபொருள் நிரப்ப வேண்டி இருந்ததால் தான் விமானம் தாமதமாகப் புறப்பட்டது. அதன் கூலிங் யூனிட்டில் கோளாறு ஏற்பட்டது. அந்த பாகம் மாற்றப்பட்டதையடுத்து மீண்டும் எரிபொருள் நிரப்ப முடிவு செய்யப்பட்டது என்றார்.
இந்த விமானம் படுத்திருக்கும் ஏர் இந்தியாவை தூக்கி நிறுத்தும் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் முதல் நாளே மக்கர் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை- 23 பேர் பலி


இஸ்லாமாபாத்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் விதமாக அமெரிக்கர் எடுத்த திரைப்படத்துக்கு எதிரான போராட்டம் பாகிஸ்தான் நாட்டை உலுக்கியுள்ளது.
அமெரிக்காவின் இன்னோஷன்ஸ் ஆப் முஸ்லிம் திரைப்படம் உலகை உலுக்கி வருகிறது. எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் தொடங்கிய போராட்டம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. பாகிஸ்தானில் நேற்று இந்தப் படத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு பிரம்மாண்டமான பேரணிகளையும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.
23 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இஸ்லாமியர்கள் நடத்தப்பட்ட பேரணி பெரும் வன்முறையில் முடிவடைந்தது. 2 போலீசார் உட்பட 17 பேர் பலியாகினர். இதேபோல் பாகிஸ்தானின் மற்றொரு நகரமான பெஷாவரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமும் வன்முறையில் முடிந்தது. பெஷாவர் போராட்டத்தில் வெடித்த வன்முறைக்கு 6 பேர் உயிரிழந்தனர்.
200 பேர் படுகாயம்
இதேபோல் லாகூர், இஸ்லாமாபாத் போன்ற பல இடங்களில் நடைபெற்ற பேரணிகளில் மொத்தம் 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கின்றனர். கராச்சி நகரில் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி குடும்பத்தினருக்கு சொந்தமானதாக இருந்த திரையரங்கம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
பாகிஸ்தான் நாட்டு ஊடகங்களும் இந்த பேரணி மற்றும் உயிரிழப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளன.

உலகின் சிறந்த 10 நகரங்கள்


உலகின் சிறந்த 10 நகரங்கள்


Melbourne, Australia
Vienna, Austria
Vancouver, Canada
Toronto, Canada
Calgary, Canada
Adelaide, Australia

Sydney, Australia
Helsinki, Finland
Perth, Australia
Auckland, New Zealand

தமிழகத்தில் கடைகள் அடைப்பு- திருப்பூர், கோவையில் முழு ஸ்டிரைக்

 Normalcy Not Affected Tn Due Bharath Bandh சென்னை: பாரத் பந்த் தமிழகத்தில் பெரிய ஆதரவைத் தரவில்லை. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல ஆட்டோக்கள் ஓரளவு ஓடவில்லை. மற்றபடி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின. அரசுப் பேருந்துகளும் கிட்டத்தட்ட முழுமையான அளவில் ஓடியதால் இயல்பு வாழ்க்கைப் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.
டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர்களுக்குக் கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடுகள் அனுமதி ஆகியவற்றைக் கண்டித்து இந்தியா முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆதரவுக் கட்சிகளும் பிற எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்த பந்த்துக்கு தமிழகத்தில் பெரிய அளவில் ஆதரவில்லை. ஓரிரு பகுதிகளில்தான் பந்த் முழு அளவில் இருந்தது.
பஸ்கள் ஓடின
தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் வழக்கமாக ஓடின. நகரப் பேருந்துகளும், வெளியூர்ப் பேருந்துகளும் ஓடின. இருப்பினும் சில பகுதிகளில் பேருந்துகள் குறைவாக ஓடியதாக தகவல்கள் தெரிவித்தன.
பேருந்துகள் அதிக அளவில் ஓடாமல் இருக்குமோ என்ற எண்ணத்தில் பலர் மின்சார ரயில்களை நாடி வந்ததால் சென்னையில் மின்சார ரயில்களில் வழக்கத்தை விட சற்று கூடுதலாக கூட்டம் காணப்பட்டது.
கடைகள் அடைப்பு
தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிறிய கடைகள் முதல் ஹோட்டல்கள், மெக்கானிக் ஷாப்புகள், டீக்கடைகள் என சகலவிதமான கடைகளும் பெருமளவில் மூ்டப்பட்டிருந்தன. இருப்பினும் பல பகுதிகளில் சில கடைகள் திறக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.
ஆட்டோக்கள் ஓடவில்லை
தமிழகத்தில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆனால் அதிமுகவைச் சேர்நதவர்களின் ஆட்டோக்கள் ஓடின. எங்களது கட்சி பந்த்துக்கு ஆதரவு தரவில்லை எனவே நாங்கள் ஆட்டோக்களை ஓட்டுவதாக டிரைவர்கள் கூறினர்.
தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை
பந்த் காரணமாக பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் அவை செயல்படவில்லை. மற்றபடி அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டன. அரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகளும் செயல்பட்டன.
கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது
சென்னை கோயம்பேட்டில் உள்ள மொத்த மார்க்கெட் மூ்டப்பட்டிருந்தது. அங்குள்ள வியாபாரிகளும், போராட்டத்தில் குதித்ததால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
காய்கறிக் கடைகள், பழக் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மூ்டப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 1300க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
லாரிகள் ஓடவில்லை
இதேபோல தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 5 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்றதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்தது. டீசல் விலையை அரசு 30 நாட்களுக்குள் குறைக்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரயில்கள் ஓடின
தமிழகம் முழுவதும் ரயில் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை. இதனால் அவை வழக்கம் போல ஓடின. இருப்பினும் ஆங்காங்கு ரயில் மறியல் போராட்டங்கள் நடந்ததால் போக்குவரத்தில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. மற்றபடி ரயில்கள் போக்குவரத்தில் தாமதமோ, தடங்கலோ ஏற்படவில்லை.
பந்த்திலிருந்து மருத்துவமனைகள், மருந்துக் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதால் அவை அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டன.
திருப்பூர், கோவையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஸ்டிரைக்
கோவை, திருப்பூரில் கிட்டத்தட்ட ஸ்டிரைக் முழு அளவில் இருந்தது. திருப்பூரில் 10,000 தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்குப் போகவில்லை.
இதேபோல கோவையிலும் மின்னணு நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்நிறுவனங்கள் இயங்கவில்லை. அங்கும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைக்குப் போகாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தனர்.
சேலத்தில் ரயில் மறியல் -200 பேர் கைது
பந்த்தின் ஒரு பகுதியாக சேலத்தில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.
சேலம் மார்க்கெட் ரயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 200 பேர் கூடி சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்துக் கோஷமிட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த சேலம் - விருதாச்சலம் ரயிலை மறித்துப் போராட்டம்நடத்தினர். இதையடுத்து 200 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

ஒரு அமெரிக்க தூதரகத்தையும் விடாமல் தாக்குங்கள்.. அல் கொய்தா அழைப்பு

 Qaeda Calls Fresh Attacks Us Pulls Some Embassy Staff துபாய்: அரபு நாடுகளிலும், மேற்கத்திய நாடுகளிலும் உலகின் பிற நாடுகளிலும் உள்ள அமெரிக்க தூதரங்களைத் தாக்குவோம். இதை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும் என்று அல் கொய்தா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்ரேலிய அமெரிக்கர் ஒருவர் எடுத்த படத்தால் இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது அமெரிக்கா. நபிகள் நாயகத்தையும், இஸ்லாமையும் கடுமையாக விமர்சித்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தால் உலக நாடுகள் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. லிபியாவில் அமெரிக்க தூதர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், தாக்குதல் தொடரும் என்று அல் கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் அரபுப் பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கையில், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களைத் தாக்குவோம். ஒரு தூதரகத்தையும் விட மாட்டோம்.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்கள் இதைச் செய்யவேண்டும். செய்வார்கள் என்று அது எச்சரித்துள்ளது.
இதையடுத்து உலக நாடுகளில் உள்ள தனது தூதரங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கையாக சூடான், துனிஷியா நாடுகளில் உள்ள தனது தூதரகங்களில் பணியாற்றி வரும் முக்கியத்துவம் உள்ள ஊழியர்களை அமெரிக்கா திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது அமெரிக்க அரசு.

தயவு செய்து சரணடையாதீர்கள்: உதயகுமாருக்கு கெஜ்ரிவால் கோரி்க்கை

 Kejriwal Urges Udhayakumar Not Surrender கூடங்குளம்: கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை சரணடைய வேண்டாம் என்று சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
கூடங்குளம், இடிந்தகரையில் கடந்த திங்கட்கிழமை வன்முறை வெடித்ததையடுத்து போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தலைமறைவானார். இந்நிலையில் நேற்று மாலை இடிந்தகரை திரும்பிய அவர் இரவு நேரத்தில் ஒரு தேசிய தலைவர் முன்னிலையில் கூடங்குளம் காவல் நிலையத்தில் சரணடையப் போவதாக அறிவித்தார். அவர் தேசிய தலைவர் என்று குறிப்பிட்டது சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு 9 மணிக்கு இடிந்தகரை வந்தார்.
ஆனால் சரணடைய தயாராக இருந்த உதயகுமாரை 50 இளைஞர்கள் குண்டுகட்டாக தூக்கிக் கொண்டுபோய் படகில் வைத்து கடலுக்குள் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எனது குழுவினர் முழு ஆதரவு அளிப்பார்கள். நான் ஊழலுக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்தவன். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் செய்ய நாங்கள் தயார். செர்னோபில் அணு மின் நிலைய விபத்துக்கு பிறகு ரஷ்யா தனது நாட்டில் ஒரு அணு மின் நிலையத்தைக் கூட கட்டவில்லை. அப்படி இருக்கையில் ரஷ்ய கூட்டமைப்புடன் கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அரசு எப்படி கூறலாம்?
உதயகுமாரை சரணடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர் சரணடைந்துவிட்டால் அது இயக்கத்தை பெரிதும் பாதிக்கும். உதயகுமார் மீதான வழக்குகளை அதிகாரிகள் உடனே வாபஸ் பெற வேண்டும் என்றார்.

ஒசாமாவைக் காட்டிக் கொடுத்த டாக்டர் அப்ரிதியை நாயைப் போன்று சாப்பிட வைத்த ஐஎஸ்ஐ

பெஷாவர்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனைக் காட்டிக் கொடுத்த பாகிஸ்தான் டாக்டரை ஐஎஸ்ஐ அதிகாரிகள் சிகரெட்டால் சுட்டு கொடுமைப்படுத்தியதுடன் நாய் போன்று சாப்பிட வைத்துள்ளனர்.
அப்போத்தாபாத்தில் பதுங்கியிருந்த அல் கொய்தா தலைவர் ஒசாமாவை அமெரிக்காவிடம் காட்டிக் கொடுத்தவர் பாகிஸ்தான் டாக்டர் ஷகில் அப்ரிதி. அவர் சிஐஏவுக்கு உளவாளியாக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம். முன்னதாக பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ பிடியில் கடந்த மே மாதம் 23ம் தேதி ஹயாத்தாபாத்தில் இருந்தபோது தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து அப்ரிதி தற்போது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஐஎஸ்ஐ ஆட்கள் எனது ஆடைகளை கழற்றச் செய்தனர். அதன் பிறகு ஒரு பழைய கந்தலான ஆடையை அணியும்படி மேஜர் ஒருவர் என்னை வற்புறுத்தினார். நானும் வேறு வழியில்லாமல் அணிந்தேன். உணவு உண்ணக் கூட கடினமாக இருந்தது. நான் மண்டியிட்டு நாய் போன்று உணவு உண்டேன். தரையில் அமர்ந்தேன். அவர்கள் சிகரெட் துண்டுகளை வைத்து எனக்கு சூடுபோட்டனர்.
ஐஎஸ்ஐ எனது வங்கிக் கணக்கில் இருந்த கோடிக்கணக்கான ரூபாயை எடுத்துக் கொண்டது. நான் கோடிக் கணக்கில் சம்பாத்தித்து எனது குடும்பத்தையும், எனது சகோதரரின் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டேன். தற்போது அந்த பணம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டனர் என்றார்.

இந்த வண்டிக்கு இப்படிப்பட்ட அலங்காரம் ஏன் தெரியுமா?


இந்த வண்டியின் பெயர் Harrod Blank கமெரா வண்டி ஆகும். சுற்றுப்புறத்தையும், இந்த வண்டியை வந்து பார்க்கும் மக்களின் வெளிப்பாட்டையும் புகைப்படம் எடுக்கும் எண்ணத்தோடு வண்டி முழுவதையும் புகைப்பட கருவிகளால் நிரப்பியுள்ளார் Harrod Blank என்பவர்.

இந்த வண்டியினை மேலிருந்தோ அல்லது உயரமான கட்டிடங்களின் இருந்து பார்க்கும் மக்களை கவருவதற்காக வண்டியின் மேல்புறத்தில் SMILE எனும் ஆங்கில வார்த்தையை கமெராக்களை கொண்டு பொரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாதி இதயத்துடன் உயிர் வாழும் அதிசய குழந்தை


இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரை சேர்ந்தவர் பீட்டர்(வயது 30). இவரது மனைவி நிகோலா(வயது 28). பள்ளி ஆசிரியையான நிகோலாவுக்கு, 2 குழந்தைகள் உள்ளனர்.
மூத்தவன் நதானியல்(வயது 2). இரண்டாவதாக பெண் குழந்தை ஸ்கார்லட் டாகன் பிறந்து நான்கரை மாதங்கள் ஆகின்றன.
இந்நிலையில் ஸ்கார்லட் டாகனுக்கு திடீர் திடீரென மூச்சு வாங்க ஆரம்பித்தது. உடனே இடைவிடாமல் அழுவாள். இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பாள்.
நரக வேதனையில் அவள் துடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிகோலா மகளை யார்க்ஹில் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதித்து பார்த்த போது பாதி இதயம் மட்டுமே இருப்பது தெரியவந்தது.
தற்போது நன்றாக இருக்கும் இந்த குழந்தை 15 வயதை அடையும் போது, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது என்னவென்று கண்டுபிடிங்க பார்க்கலாம்!


இது என்னவென்று கண்டுபிடிங்க பார்க்கலாம்!