ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இருமுறை நில அதிர்வு உணரப்பட்டது.
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்களில் இன்று அதிகாலை அடுத்தடுத்து லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலடுக்கமானது சுமார் 9 வினாடிகள் வரை நீடித்தது.
ரிக்டர் அளவுகோலில் 5.2, 3.7 அலகுகளாக பதிவாகி இருந்தது. இந் நிலஅதிர்வில் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
பஞ்சாப், ஹிமாச்சல், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்றும் கூட இதேபோல் நிலநடுக்கம் உணரப்பட்டது.