இந்தூர்: வட இந்தியாவில் 350 க்கும் மேற்பட்ட இடங்களில ஆசிரமம் கொண்டுள்ள ஆசாராம் சாமியார் மீது இளம்பெண் ஒருவர் கொடுத்துள்ள செக்ஸ் புகார் காரணமாக இவரை கைது செய்ய ராஜஸ்தான் போலீசார் பல குழுக்கள் அமைத்துள்ளனர். நேற்று வரை எங்கு இருக்கிறார், எங்கு செல்கிறார் என தெரிந்து இருந்த நேரத்தில் இன்று முதல் இவர் எங்கே இருக்கிறார் என தெரியாமல் போலீசார் குழம்பி போயுள்ளனர்.
ராஜஸ்தான் , குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் ஆசிரமம் நடத்தி வரும் புகழ் பெற்ற சாமியார் ,ஆசாராம் . பல தொண்டர்களை கொண்டவராக இந்த ஆசிரம சாமியார் ஆசாராம் இருந்து வருகிறார் என்றால் அவரை பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இவரது பேச்சை கேட்க திரளானவர்கள் ஆர்வமாக கூடுவதை பார்க்க முடியும். சமீப காலமாக சில புகார்கள் வந்தாலும் இவர் மீது பெரும் அளவில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. குறிப்பாக கொலை , நில அபகரிப்பு, மோசடியாளர்களுக்கு தஞ்சம் புக இடம் கொடுத்தல் உள்ளிட்ட புகார்கள் வந்துள்ளன. ஆனால் இவர் எதிலும் இதுவரை சிக்கவில்லை.