இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து: 18 வீரர்கள் பலி

இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து: 18 வீரர்கள் பலிமும்பை: மும்பையில் ஐ.என்.எஸ். சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தில் 18 வீரர்கள் உயிரிழந்து விட்டதாக கடற்படை தளபதி அட்மிரல் ஜோஷி தெரிவித்துள்ளார். 

நேற்று நள்ளிரவு தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் திடீர் என பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 16 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

நீர் மூழ்கியில் இருந்து தப்பிக்க பல வீரர்கள் நீரில் குதித்ததனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
.இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து: 18 வீரர்கள் பலி
மேலும், இந்த விபத்தில் 3 அதிகாரிகள் உள்பட 18 வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. ஆனால், இவர்கள் அனைவரும் பலியாகிவிட்டதாக கடற்படை தளபதி அட்மிரல் ஜோஷி தெரிவித்துள்ளார். விபத்து நேரிட்ட நீர்மூழ்கிக் கப்பலை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர்மூழ்கிக் கப்பலில் அடுத்தடுத்து இரண்டு வெடி விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து கடல் நீர் உள்ளே புகுந்துள்ளது.

இதில் 18 வீரர்களும் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில் ஏன் வெடிவிபத்து ஏற்பட்டது? எப்படி தீப்பிடித்தது? என்பதற்கான எந்த பதிலும் இல்லை. முதலில் ஒரு சிறு வெடிவிபத்து ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்தே 2வது விபத்தும் நிகழ்ந்திருக்கிறது. 

இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து: 18 வீரர்கள் பலி

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. கடந்த மாதம்தான் நீர்மூழ்கிக் கப்பல் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. தற்போதைய நிலையில் யாரையும் குறை கூறும் நிலையில் இல்லை. கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் நீர்மூழ்கிக் கப்பலின் பேட்டரிகள் மாற்றப்பட்டுள்ளன. 

இதனால் ஹைட்ரஜன் வாயு கசிவுக்கான வாய்ப்பு இல்லை என்றே கூறலாம். 2010ம் ஆண்டு இதில் நடந்த விபத்துக்குப் பிறகு நீர்மூழ்கிக் கப்பல் முழுமையாக சீரமைக்கப்பட்டுவிட்டது. அதனால் அந்த சம்பவத்துக்கும் தற்போதைய தீ விபத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

முதல் கட்டமாக இந்த விபத்துக்கு சதிச் செயல் காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது என்றார். 
இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து: 18 வீரர்கள் பலி

அருகில் இருந்த நீர்மூழ்கியும் சேதம்: வெடிவிபத்தில் சிந்து ரக்சக் நீர்மூழ்கிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் சிந்து ரத்னா நீர்மூழ்கியும் சேதமடைந்துள்ளது. 

இந்த விபத்தையடுத்து அந்தப் பகுதி முழுவதும் நீர்மூழ்கியின் பாகங்களும், ஏவுகணைகளின் பாகங்களும் சிதறிக் கிடக்கின்றன. 

இதன் பேட்டரியில் ஏற்பட்ட பிரச்சனையால் வெடிவிபத்து ஏற்பட்டதாகவும், ஏவுகணை வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் மாறுபட்ட தகவல்கள் வருகின்றன. இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: