நாகப்பட்டினத்திலிருந்து ஈசிஆர் சாலை வழியாக அதிரையை கடந்து செல்லும் போது எதிரே வந்த நாய் குறுக்கே புகுந்ததால் திடிரென்று பிரேக் போடும் போது வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஆறு மாதமே ஆன பெண் குழந்தை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். வாகனத்தில் பிரயாணம் செய்த மற்ற நால்வர்களும் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்தவர்கள் ஆவார்.
தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடல்களை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இந்தப்பகுதி முழுவதும் பரப்பரப்புடன் காணப்பட்டது.
நாகப்பட்டினத்திலிருந்து கோவில் வழிபாட்டை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் ஏற்பட்ட கொடூர விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.



