சகோதரத்துவத்துடன் வாழ்வோம்… இஸ்லாமியர்களுக்கு ஜெ. ரம்ஜான் வாழ்த்து

கொடநாடு: நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளில் கூறியுள்ளபடி அனைவரும் சகோதரத்துவடன் வாழவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: "ஈகை திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 

புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் முப்பது நாட்கள் நோன்பிருந்து இறை உணர்வோடு எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி ஏழை எளியோரின் ஏழ்மையை போக்கிட உணவும், செல்வமும் வழங்கி, சிறப்புத் தொழுகைகள் செய்து இறைவனை வழிபட்டு ரம்ஜான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவார்கள். 

அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி, தன்னால் இயன்றதை பிறருக்கு தருமம் செய்து, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை அனைவரும் பின்பற்றி வாழ்வில் உயர்ந்திட உறுதியேற்போம். 

இந்தப் புனித ரம்ஜான் பெருநாளில் எல்லா துறைகளிலும் தமிழகம் சிறப்பு எய்திட நாம் அனைவரும் ஒற்றுமையோடு உழைத்திடுவோம் என்று கூறி எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: