டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை

டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைடெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்து மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு 3 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

2012 டிசம்பர் மாதம் 16-ந் தேதியன்று ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஒருவன் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டான். எஞ்சிய 5 பேரில் ஒருவன் சிறுவன் என்பதால் அது தொடர்பான விசாரணை சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில் தீர்ப்பு அளிப்பதை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு அண்மையில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று சிறார் குற்றவாளிக்கான தண்டனை என்ன என்ற தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இன்று பிற்பகல் நடைபெற்ற விசாரணையின் போது பலாத்கார வழக்கில் சிறுவன் குற்றவாளி என்றும் அவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

மேல்முறையீடு செய்ய முடிவு! 

ஆனால் இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்று மருத்துவ மாணவியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 2 விடுதலைப் புலிகள் கைது- போலீஸ் தகவல்

சென்னையில் 2 விடுதலைப் புலிகள் கைது- போலீஸ் தகவல்சென்னை: சென்னை சேலையூரில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

சென்னையில் வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டதாக தொடர்ப்பட்ட வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் இருவரை தேடிவந்ததாகவும் அவர்கள் இருவரும் சேலையூரில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டதாகவும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்றும் சென்னை போலீசார் கூறியுள்ளனர். அவர்கள் இருவரிடமும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா தாக்குதலுக்கு ஏதுவாக சிரியாவை விட்டு வெளியேறியது ஐ.நா. குழு!

டமாஸ்கஸ்; ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழு சிரியாவை விட்டு வெளியேறிவிட்டது. இதனால் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான ஏதுவான சூழல் உருவாகியுள்ளது. 

பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை சிரியா ராணுவம் வீசித் தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புகார் கூறின. இதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் குழு, ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய சிரியா வந்தது. 

இந்த நிலையில் சிரியா மீது சிறிய அளவிலாவது ராணுவ தாக்குதலை நடத்திவிடுவது என்ற முடிவில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அனேகமாக அடுத்த ஓரிரு நாட்களில் இத்தாக்குதல் நடைபெறக் கூடும் எனக் கூறப்படுகிறது. 

மேலும் ஐ.நா. குழு முகாமிட்டு ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் தாக்குதல் நடத்துவதை தவிர்க்கவும் அமெரிக்கா முடிவு செய்திருந்தது. தற்போது ஐ.நா. ஆய்வுக் குழு சிரியாவை விட்டு வெளியேறியுள்ளதால் அமெரிக்கா தாக்குதல் நடத்த ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சாமியார் எங்கே ? போலீஸ் தேடுகிறது

இந்தூர்: வட இந்தியாவில் 350 க்கும் மேற்பட்ட இடங்களில ஆசிரமம் கொண்டுள்ள ஆசாராம் சாமியார் மீது இளம்பெண் ஒருவர் கொடுத்துள்ள செக்ஸ் புகார் காரணமாக இவரை கைது செய்ய ராஜஸ்தான் போலீசார் பல குழுக்கள் அமைத்துள்ளனர். நேற்று வரை எங்கு இருக்கிறார், எங்கு செல்கிறார் என தெரிந்து இருந்த நேரத்தில் இன்று முதல் இவர் எங்கே இருக்கிறார் என தெரியாமல் போலீசார் குழம்பி போயுள்ளனர்.

ராஜஸ்தான் , குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் ஆசிரமம் நடத்தி வரும் புகழ் பெற்ற சாமியார் ,ஆசாராம் . பல தொண்டர்களை கொண்டவராக இந்த ஆசிரம சாமியார் ஆசாராம் இருந்து வருகிறார் என்றால் அவரை பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். இவரது பேச்சை கேட்க திரளானவர்கள் ஆர்வமாக கூடுவதை பார்க்க முடியும். சமீப காலமாக சில புகார்கள் வந்தாலும் இவர் மீது பெரும் அளவில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. குறிப்பாக கொலை , நில அபகரிப்பு, மோசடியாளர்களுக்கு தஞ்சம் புக இடம் கொடுத்தல் உள்ளிட்ட புகார்கள் வந்துள்ளன. ஆனால் இவர் எதிலும் இதுவரை சிக்கவில்லை.

டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை


டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை










டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்து மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு 3 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

2012 டிசம்பர் மாதம் 16-ந் தேதியன்று ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஒருவன் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டான். எஞ்சிய 5 பேரில் ஒருவன் சிறுவன் என்பதால் அது தொடர்பான விசாரணை சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில் தீர்ப்பு அளிப்பதை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு அண்மையில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று சிறார் குற்றவாளிக்கான தண்டனை என்ன என்ற தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இன்று பிற்பகல் நடைபெற்ற விசாரணையின் போது பலாத்கார வழக்கில் சிறுவன் குற்றவாளி என்றும் அவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் சிறார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது








மருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத 6 நோய்கள்!!!

வியாதிகள் இல்லாதவர்களே இருக்க முடியாது. அத்தகைய சரியான வியாதியை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சையை பெற்றால் சீக்கிரம் குணமாகும் வாய்ப்பு உள்ளது. உங்கள் மருத்துவர் பெரிய அறிவு ஜீவியாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் தவறு செய்வதில்லை என்று சொல்ல முடியாது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், முக்கியமானது அல்ல என்று நினைத்து ஏதாவது ஒரு விஷயத்தை மருத்துவர்களிடம் சொல்ல மறைத்தால், மருத்துவரால் நோய்க்கான காரணங்களை முழுமையாக அறிய முடியாமல் போகலாம். 

சொல்லப்போனால், உண்மையான பலம் உண்மையை மறைப்பதால் வருவதில்லை. உண்மையை சந்திப்பதால் மட்டுமே கிடைக்கும். ஆகவே மருத்துவரிடம் எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ள படி கூறி, நீண்ட ஆயுளை பெற்று 100 வருடங்களுக்கு மேலாக ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள். 

இப்போது மருத்துவரால் கண்டுபிடிக்க முடியாத சில நோய்களைப் பார்ப்போம்....

நாசியழற்சி (Vasomotor Rhinitis)

நாசியழற்சியின் அறிகுறிகளை பார்க்கும் போது சாதாரண அழற்சியின் அறிகுறிகளை போலத் தான் இருக்கும். இதனை அறியாமல் மருத்துவர் அதற்குண்டான வைத்தியத்தை பார்க்காமல், வேறு சிகிச்சையை அளித்து வந்தால் நிலைமை மோசமாகத் தான் செய்யும். மேலும் பிரச்சனைக்கான அறிகுறிகளை மருத்துவரிடம் மறைப்பதாலும், இப்பிரச்சனை ஏற்படுவதுண்டு. வாசனை திரவியம், சில உணவுகள் போன்றவைகளால் அலர்ஜி ஏற்பட்டு நாசி அடைப்பு, கண்ணில் நீர் வழிதல், தொடர்ச்சியாக மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனால் முதல் வேலையாக முறையான அலர்ஜி சோதனையை செய்துக் கொள்ள வேண்டும்.

உடற்குழி நோய் (Celiac Disease)

உடற்குழி நோய் என்ற உடல்நல கோளாறு, செரிமான பிரச்சனைகளால் ஏற்படும். சிலருக்கு க்ளுடென் (Gluten) உட்கொள்வதால் இப்பிரச்சனை அதிகரிக்கும். இந்த நோயால் அவஸ்தைப்படுபவர்களுக்கு அவர்கள் உண்ணும் உணவுகளின் ஊட்டச்சத்து, உடலில் போய் சேர்வதில்லை. அதற்கு காரணம் அவர்களின் சிறுகுடல் பாதிப்படைந்திருப்பதே ஆகும். வயிற்றுப் போக்கு, அடிக்கடி ஏப்பம், வயிறு வீங்குதல், மலச்சிக்கல் போன்றவைகளே இதற்கான அறிகுறிகள். ஆகவே இத்தகைய அறிகுறிகளை மருத்துவரிடம் வெளிப்படையாக சொல்ல வேண்டும். இல்லாவிட்டால், அவர்களால் கண்டறிவது கஷ்டமாகிவிடும்.

தைராய்டு ஒழுங்கின்மை (Thyroid Disorders)

தைராய்டு ஒழுங்கின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், முதலில் சந்திக்கும் பிரச்சனை நெஞ்சு வலியும், நெஞ்சு படபடப்பும் தான். இது போக ஆக்கச்சிதைவு ஒழுங்கின்மை, தசைகள் மற்றும் மூட்டு வலி மற்றும் வளர்ச்சி பிரச்சனைகள் போன்ற பிற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். மருத்துவரும் சரி நோயாளிகளும் சரி, தைராய்டு பிரச்சனையை மன அழுத்தம் என்று தவறாக நினைக்க வாய்ப்பு உள்ளது.

புற்றுநோய் (Cancer)

புற்றுநோய் அறிகுறிகளை சளிக்கான அறிகுறிகள் என்று பெரிய தவறை மருத்துவர்கள் செய்ய வாய்ப்புள்ளது. கொடிய அணுக்களின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சியினால் ஏற்படும் புற்றுநோயின் அறிகுறிகள். ஒவ்வொரு நோயாளிகளை பொறுத்து மாறுபடும். பசியின்மை, அதிகப்படியான வியர்வை, கடும் காய்ச்சல் போன்ற பல அறிகுறிகளை புற்றுநோய் ஏற்படுத்தும். புற்றுநோயால் அவதிப்படுபவர் அதனை கவனிக்காமல் விடும் போது, அதிக அளவில் எடை குறைவும் ஏற்படும்.

நெஞ்சு வலி (Heart Attacks)

ஹார்ட் அட்டாக் ஏற்படும் போது மரணம் அல்லது மரணம் ஏற்படும் வகையில் ஆபத்து வருவது அனைவரும் அறிந்ததே. தமனி இரத்தக் குழாய்கள் அடைத்துக் கொள்வதால், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் சோர்வு, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி போன்றவைகள் ஏற்படும். இவை அனைத்தும் இதற்கான அறிகுறிகள் ஆகும். இதை பொதுவாக மன அழுத்தம் என்று தவறாக நினைக்க வாய்ப்புள்ளது.

பாக்டீரியா மூளை உறையழற்சி (Bacterial Meningitis)

இந்த பிரச்சனை ஏற்படும் போது, முதுகு தண்டு வீங்கும். மேலும் மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்கள் பாதிப்படையும். சொறி, காய்ச்சல், இறுகிய கழுத்து என்பதே இதன் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் சளிக்கானது என்று தவறாக நினைக்க வைக்கும். இது மரணத்தை கூட ஏற்படுத்தும். ஆகவே மருத்துவர்கள் நோய்க்கான காரணத்தை தவறாக புரிந்துக் கொள்ளாமல் இருப்பதற்கு, உங்களுக்கு ஏற்படும் அனைத்து அறிகுறிகளையும் உங்கள் மருத்துவரிடம் மறைக்காமல் தெரிவியுங்கள். உங்கள் மருத்துவரிடம் உங்களுக்கு பிடிப்பு ஏற்படவில்லை என்றால், மற்றொரு மருத்துவரை பார்ப்பதில் தவறு ஏதும் இல்லை.

இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து: 18 வீரர்கள் பலி

இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து: 18 வீரர்கள் பலிமும்பை: மும்பையில் ஐ.என்.எஸ். சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தில் 18 வீரர்கள் உயிரிழந்து விட்டதாக கடற்படை தளபதி அட்மிரல் ஜோஷி தெரிவித்துள்ளார். 

நேற்று நள்ளிரவு தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் திடீர் என பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 16 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

நீர் மூழ்கியில் இருந்து தப்பிக்க பல வீரர்கள் நீரில் குதித்ததனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
.இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து: 18 வீரர்கள் பலி
மேலும், இந்த விபத்தில் 3 அதிகாரிகள் உள்பட 18 வீரர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. ஆனால், இவர்கள் அனைவரும் பலியாகிவிட்டதாக கடற்படை தளபதி அட்மிரல் ஜோஷி தெரிவித்துள்ளார். விபத்து நேரிட்ட நீர்மூழ்கிக் கப்பலை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர்மூழ்கிக் கப்பலில் அடுத்தடுத்து இரண்டு வெடி விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து கடல் நீர் உள்ளே புகுந்துள்ளது.

இதில் 18 வீரர்களும் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில் ஏன் வெடிவிபத்து ஏற்பட்டது? எப்படி தீப்பிடித்தது? என்பதற்கான எந்த பதிலும் இல்லை. முதலில் ஒரு சிறு வெடிவிபத்து ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்தே 2வது விபத்தும் நிகழ்ந்திருக்கிறது. 

இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து: 18 வீரர்கள் பலி

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. கடந்த மாதம்தான் நீர்மூழ்கிக் கப்பல் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. தற்போதைய நிலையில் யாரையும் குறை கூறும் நிலையில் இல்லை. கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் நீர்மூழ்கிக் கப்பலின் பேட்டரிகள் மாற்றப்பட்டுள்ளன. 

இதனால் ஹைட்ரஜன் வாயு கசிவுக்கான வாய்ப்பு இல்லை என்றே கூறலாம். 2010ம் ஆண்டு இதில் நடந்த விபத்துக்குப் பிறகு நீர்மூழ்கிக் கப்பல் முழுமையாக சீரமைக்கப்பட்டுவிட்டது. அதனால் அந்த சம்பவத்துக்கும் தற்போதைய தீ விபத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

முதல் கட்டமாக இந்த விபத்துக்கு சதிச் செயல் காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது என்றார். 
இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து: 18 வீரர்கள் பலி

அருகில் இருந்த நீர்மூழ்கியும் சேதம்: வெடிவிபத்தில் சிந்து ரக்சக் நீர்மூழ்கிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் சிந்து ரத்னா நீர்மூழ்கியும் சேதமடைந்துள்ளது. 

இந்த விபத்தையடுத்து அந்தப் பகுதி முழுவதும் நீர்மூழ்கியின் பாகங்களும், ஏவுகணைகளின் பாகங்களும் சிதறிக் கிடக்கின்றன. 

இதன் பேட்டரியில் ஏற்பட்ட பிரச்சனையால் வெடிவிபத்து ஏற்பட்டதாகவும், ஏவுகணை வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் மாறுபட்ட தகவல்கள் வருகின்றன. இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புத்த கயா குண்டுவெடிப்பு வழக்கு: ஹிந்து சாமியார் 'பிரம்மச்சாரி கைது!

புத்த கயா குண்டுவெடிப்பு வழக்கு: ஹிந்து சாமியார் 'பிரம்மச்சாரி கைது!பாட்னா: பீகார் மாநிலம் புத்த கயா மகாபோதி வழிபாட்டுத் தலத்தில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக கருதப்படும் அரூப் பிரம்மச்சாரி என்ற ஹிந்து சாமியாரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். 

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அரூப் பிரம்மச்சாரி, புத்தகயாவில் தங்கியிருந்துள்ளார். கடந்த ஜூலை 7-ந் தேதி புத்தகயாவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இச்சம்பவத்திற்குப் பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார். குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி புத்த கயா கோயில் நிர்வாகிகள் உட்பட பலரிடமும் விசாரணை நடத்தியது.

மேலும் வினோத் மிஸ்திரி என்பவர் உட்பட 6 சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் புத்த கயாவில் தங்கியிருந்து குண்டுவெடிப்புக்குப் பின்னர் தலைமறைவாக இருந்த அரூப் பிரம்மச்சாரியை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று கைது செய்தனர். 

அவர் தற்போது ராம்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் 3000 தலைவா பட டிவிடிக்கள் பறிமுதல் - மூவர் கைது!l

சேலத்தில் 3000 தலைவா பட டிவிடிக்கள் பறிமுதல் - மூவர் கைது!சேலம்: விஜய் நடித்து தமிழகத்தில் மட்டும் இன்னும் வெளியாகாத தலைவா படத்தின் 3000 டிவிடிக்களை சேலம் போலீசார் பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நடிகர் விஜய், நடிகை அமலபால், சத்யராஜ் நடித்து இயக்குநர் விஜய் இயக்கியுள்ள தலைவா படம் இன்னும் தமிழ்நாட்டில் ரிலீசாகவில்லை. ஆனால் கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் வெளியாகியுள்ளது. 

வெளிநாடுகளில் இந்தப் படம் வெளியான இரண்டாவது நாளே டொரன்ட் உள்ளிட்ட தளங்களில் இந்தப் படம் வெளியாகி பார்வையாளர்களுக்கு இலவசமாகக் கிடைத்தது. 

இதனை டவுன்லோடு செய்து சிடியாக்கி சென்னை - புதுவை நகரங்களின் கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே தலைவா புதுப்பட டிவிடிக்கள் ரகசியமாக தயாரிக்கப்படுவதாக விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே விஜய் ரசிகர்கள் அந்த வீடியோ சி.டி.க்கள் தயாரித்த கட்டிடம் முன்பு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். 

3 பேர் கைது அப்போது அந்த வீட்டில் கம்ப்யூட்டர் மூலம் தலைவா டிவிடிகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து பேர்லேண்ட்ஸ் போலீசாருக்கு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் புதுப்பட சி.டி.க்கள் தயாரித்த கடைக்குச் சென்று விசாரணை நடத்தினர். 

அப்போது, நடிகர் விஜய் நடித்து இன்னும் வெளியாகாமல் உள்ள தலைவா படத்தை திருட்டுத்தனமாக சி.டி.க்களில் தயாரித்து கொண்டிருந்த கடையின் ஊழியர்கள் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த அருள்பிரபு (36), தர்மபுரியை சேர்ந்த முரளி (28), குமார் (27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும், சி.டி. தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் தலைவா, பட்டத்துயானை, மரியான் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட புதுப்பட சி.டி.க்கள் மற்றும் கவர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்த் இன்று அறிமுகம்

உள்நாட்டிலேயே கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்த் இன்று அறிமுகம்கொச்சி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ரந்த் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. 

கடற்படை திட்ட இயக்குனரகம் வடிவமைத்த, விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ரந்தின் கட்டுமானப் பணி 2006 நவம்பரில், கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் துவங்கியது. 260 மீட்டர் நீளம் மற்றும் 60 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலின் எடை 37, 500 டன். 

உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கிக் கப்பலின் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து கப்பலை ராணுவ அமைச்சர் அந்தோணி, அவரது மனைவி எலிசபெத், கப்பல் துறை அமைச்சர் வாசன் ஆகியோர் இன்று துவக்கி வைக்கின்றனர். இதன் பின் கப்பல் மீண்டும் கட்டுமானத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான கருவிகள் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணி நடைபெறும். 

வரும் 2016ல் கப்பலின் விரிவான சோதனை ஓட்டம் நடைபெறும்; 2018ம் ஆண்டில் கடற்படையில் சேர்க்கப்படும். மிக் - 29, காமோவ் - 31 மற்றும் இலகு ரக விமானங்கள், இந்த கப்பலில் இருந்து பறக்கவும், தரையிறங்கவும் முடியும். கப்பலை துவக்கி வைக்கும் விழா, "இந்திய கடற்படையின், உள்நாட்டு தொழில்நுட்பத்திற்கு மகுடம் சூட்டும் விழாவாக அமையும்' என கடற்படை துணைத் தளபதி ஆர்.கே.தோவன் கூறியுள்ளார். 

ஐ.என்.எஸ். விக்ரந்த் துவக்கி வைக்கப்படுவதன் மூலம், இதே போன்ற போர்க்கப்பல்கள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வரிசையில், இந்தியாவும் இடம்பெறும். 

'இஸ்லாம் ஒரு நாடு'… டிவியில் டங்க் சிலிப் ஆன வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகினார்

'இஸ்லாம் ஒரு நாடு'… டிவியில் டங்க் சிலிப் ஆன வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகினார்சிட்னி: இஸ்லாம் ஒரு நாடு, யூதர்கள் ஏசுவை வழிபட்டனர் என்று தப்புத்தப்பாக டிவி பேட்டியில் உளறிய பெண் வேட்பாளர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார். 

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில், குவின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள ஒரு தொகுதியில் "ஒன் நேஷன்' கட்சி சார்பில் வேட்பாளராக ஸ்டெஃபானி பானிஸ்டர் (27) அறிவிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், அவரை ஒரு டிவி சேனல் பேட்டி கண்டு, ஒளிபரப்பியது. அதில்,‘இஸ்லாம் ஒரு நாடு என்ற முறையில் அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், அவர்களின் சட்டங்கள் ஆஸ்திரேலியாவில் வரவேற்கத்தக்கவை அல்ல'' என்று பேட்டியில் அவர் கூறினார். 

இஸ்லாம் மதத்தை ஒரு நாடு என்று அவர் தவறாகக் குறிப்பிட்டார். அதேபோல தடை செய்யப்பட்டது என்ற பொருளைத் தரக்கூடிய "ஹராம்' என்ற வார்த்தையை அவர் குரான் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியிருந்தார். மேலும், யூதர்கள் இயேசுவை வழிபட்டதாகவும் தவறாகக் கூறியிருந்தார். இதற்காக, ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பானிஸ்டரைப் பலரும் கிண்டல் செய்திருந்தனர். 

இதைத் தொடர்ந்து, மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட ஒன் நேஷன் கட்சியின் தலைவர் ஜிம் சாவேஜ், ""பானிஸ்டருக்கு எங்கள் கட்சி செயற்குழுவின் ஆதரவு எப்போதும் உண்டு'' என்று தெரிவித்தார்.

இசைக் கல்லூரியை துவக்கினார் ஏ.ஆர். ரஹ்மான்! முகேஷ் அம்பானி திறந்து வைப்பு!!

இசைக் கல்லூரியை துவக்கினார் ஏ.ஆர். ரஹ்மான்!  முகேஷ் அம்பானி திறந்து வைப்பு!!சென்னை: திரைப்பட இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசைக் கல்லூரியை தொடங்கியுள்ளார். இதை தொழிலதிபர் முகேஷ் அம்பானி நேற்று திறந்து வைத்தார்.

இசைக் கல்லூரியை துவக்கினார் ஏ.ஆர். ரஹ்மான்!  முகேஷ் அம்பானி திறந்து வைப்பு!!

சென்னை அரும்பாக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம். இசை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை ரிலையன்ஸ் நிறுவன பொது மேலாளர் முகேஷ் அம்பானி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 
இசைக் கல்லூரியை துவக்கினார் ஏ.ஆர். ரஹ்மான்!  முகேஷ் அம்பானி திறந்து வைப்பு!!
இந்நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானியும் பங்கேற்றார். இசையில் டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளை வழங்க உள்ளது இக் கல்லூரி என்றார் ஏ.ஆர். ரஹ்மான்.

நாளை வெளியாகுமா தலைவா... தீராத குழப்பத்தில் தியேட்டர்கள்!

நாளை வெளியாகுமா தலைவா... தீராத குழப்பத்தில் தியேட்டர்கள்!சென்னை: தலைவா படம் தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பெரும் குழப்பத்தில் உள்ளன திரையரங்குகள். 

விஜய்யையும் அவர் தந்தையையும் முதல்வர் சந்திக்க மறுத்த தகவல் வெளியான பிறகு இந்தக் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது. 

முன்பதிவு இல்லை 

இந்த நிமிடம் வரை படத்துக்கான முன் பதிவும் எந்தத் திரையரங்கிலும் நடக்கவில்லை. 

முன்னணி திரையரங்குகளான சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ் போன்றவை Coming Soon என்ற பகுதியில் வைக்கப்பட்டிருந்த தலைவா பட ஸ்லைடுகளையும் அகற்றிவிட்டன. 

தலைவா படம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை மற்றும் உலகம் முழுவதிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படும் என்று சந்திர பிரகாஷ் ஜெயின் கூறினார். 

நேற்று காலை தியேட்டர்களில் முன்பதிவு துவங்க இருந்த நிலையில்தான் திடீரென்று தலைவா படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் மாணவர் புரட்சிப்படை என்ற பெயரில் தியேட்டர்களுக்கு வந்த மர்ம கடிதத்தில் தலைவா படத்தை திரையிட்டால் உங்கள் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. போன் மூலமும் மிரட்டல்கள் வந்தன. 

இதையடுத்து டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் தலைவா படம் திட்டமிட்டபடி நாளை ரிலீசாகுமா என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. 

இப்பிரச்சினை குறித்து விவாதிக்க தியேட்டர் அதிபர்கள் சங்கம் கூட்டம் நேற்று மாலை பிலிம்சேம்பரில் நடந்தது. சங்க தரைவர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார். இதில் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர். 

தயாரிப்பாளர்கள் அவசர கூட்டம் 

நள்ளிரவு வரை கூட்டம் காரசாராக நடந்தது. தலைவா படத்துக்கு மறு தணிக்கைக் குழு யு சான்றிதழ் அளித்துள்ளது. வரி விலக்கு குழுவினருக்கு படத்தை திரையிட்டு காட்டி வரி விலக்கு பெற்று தர வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டது. அதன்படி இன்று போர்பிரேம்ஸ் திரையரங்கில் அரசு அதிகாரிகளும் வரிவிலக்கு பரிந்துரைக் குழுவினரும் படம் பார்த்தனர். 

வரி விலக்குச் சான்றிதழ் நகல் அளிக்கப்பட்டால் மட்டுமே படத்தைத் திரையிட முடியும் என தியேட்டர் உரிமையாளர்கள் உறுதியாக உள்ளனர். இன்று இரவுக்குள் எப்படியும் வரி விலக்கு சான்றிதழ் கிடைத்துவிடும் என தயாரிப்பாளர் தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், விஜய்யையும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரையும் சந்திக்க மறுத்து முதல்வர் திருப்பியனுப்பிய செய்தி திரையரங்க உரிமையாளர்களை எந்த முடிவுக்கும் வரவிடாமல் செய்துள்ளது. 

இந்தப் படத்தின் பிரச்சினைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உணர்த்தவே முதல்வர் ஜெயலலிதா அவர்களைச் சந்திக்க மறுத்துள்ளார். மற்றபடி நாளை படம் வெளியாவது உறுதி என இயக்குநர் விஜய் தரப்பில் கூறி வருகின்றனர்.

ஜெ.வை சந்தித்து சமாதானப்படுத்த கொடநாடு சென்று ஏமாந்த விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்!

கோவை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தலைவா படம் தொடர்பாக பேச முயன்றுள்ளனர் நடிகர் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும். ஆனால் முதல்வர் தரப்பிலிருந்து அனுமதி கிடைக்காததால் இருவரும் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டதாம். 

தலைவா படம் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. விஸ்வரூபத்திற்கு ஏற்பட்டது போன்ற சிக்கல் இப்படத்திற்கு ஏற்பட்டுள்ளது. 

இதனால் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் கடும் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் மூழ்கியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவை சரணடைந்து சமரசமாகப் போக இருவரும் தற்போது முயற்சித்து வருகின்றனராம்.

முதல்வர் ஜெயலலிதா தற்போது கொடநாட்டில் ஓய்வு மற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரைச் சந்திக்க விஜய்யும், சந்திரசேகரும் அங்கு விரைந்தனராம்.

முதல்வரைச் சந்திக்க வேண்டும், தலைவா படம் குறித்துப் பேச வேண்டும் என்று நேரம் கேட்டு அணுகினராம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லையாம்.

ஆனால் முதல்வரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். முதல்வரைப் பார்க்க முடியாததால் விஜய்யும், அவரது தந்தையும் தற்போது திரும்பி விட்டனராம்.

விஜய்யும், சந்திரசேகரும் முதல்வரைப் பார்ப்பதற்காக வந்தபோது கெரடாமட்டம் என்ற சோதனைச் சாவடியோடு அவர்களை காவலர்கள் நிறுத்தி விட்டனராம். பாதியிலேயே நிறுத்தி தங்களை முதல்வர் தரப்பு திருப்பி அனுப்பி விட்டதால் பெருத்த ஏமாற்றத்துடன் இருவரும் திரும்பியுள்ளனராம்.

எரியும் குழந்தை ... பெற்றோரை ஊரை விட்டு ஒதுக்கிய கொடுமை: மருத்துவக்குழு ஆய்வு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperதிண்டிவனம்: திண்டிவனம் அருகே பிறந்து 2 மாதமே ஆன கைக்குழந்தை ஒன்று அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் குழந்தையின் பெற்றோர்களை குடும்பத்தோடு ஊரை விட்டு ஒதுக்கியுள்ளனர் கிராமத்தினர். 

குழந்தையின் உடலில் ஏற்படுவதாக கூறப்படும் தீயிற்கான காரணத்தை அறிய இன்று மருத்துவக்குழுவினர் சோதனை நடத்தவுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே டி.பரங்கணி கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன்(வயது 26). இவர் கடந்த 2010-ம் ஆண்டு செங்கல்பட்டில் உள்ள சிமெண்டு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்த போது அங்கு வேலை பார்த்த மயிலம் அருகே நெடிமோழியனூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி(23) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். 

இந்த திருமணத்திற்கு ராஜேஸ்வரியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கர்ணனின் பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் 2 பேரும் டி.பரங்கிணியில் வசித்து வந்தனர். ராஜேஸ்வரிக்கு பெண் குழந்தை பிறந்த உடன் அவர்களது திருமணத்தை ராஜேஸ்வரியின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். 

அழகான ஆண்குழந்தை 

இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமுற்ற ராஜேஸ்வரி பிரசவத்துக்காக நெடிமோழியனூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அங்கு அவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ராகுல் என பெயர் வைத்தனர்.  

தீயில் எரிந்த குழந்தை குழந்தை

பிறந்த 8-வது நாளில் நடுவீட்டில் குழந்தை ராகுல் தூங்கி கொண்டிருந்தது. அந்த குழந்தையின் உடலை ராஜேஸ்வரி துணி போட்டு மூடியிருந்தார். சிறிதுநேரத்தில் அந்த துணி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி அந்த துணியை அகற்றிவிட்டு, கைக்குழந்தையுடன் வெளியே ஓடிவந்தார். சிறிது நேரத்தில் அந்த குழந்தை படுத்திருந்த குடிசை வீடும் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அடிக்கடி தீ விபத்து 

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதே நெடிமோழியனூர் கிராமத்தில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஏராளமான குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. இதற்கான காரணம் தெரியாமல் கிராம மக்கள் பீதியடைந்தனர். 

இதையொட்டிதொடர்ந்து 2 மாதங்கள் தீயணைப்பு படையினர் அங்கேயே முகாமிட்டிருந்தனர். அதன்பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளாக அத்தகைய தீ விபத்து சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.. 

குழந்தையின் உடலில் 

இந்த நிலையில் சமீபத்தில் நெடிமோழியனூரில் ராஜேஸ்வரியின் கைக்குழந்தையின் உடல் திடீரென தீப்பற்றி எரிந்து காயமேற்பட்டது. இதனையடுத்து 15 நாட்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முழு குணமடைந்தவுடன் ராஜேஸ்வரி தனது குழந்தையை கணவர் ஊரான டி.பரங்கிணி கிராமத்திற்கு கொண்டு சென்றார். அன்று மாலை 4 மணிக்கு அந்த குழந்தை அணிந்திருந்த சட்டை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதனை தொடர்ந்து அந்த குழந்தையின் தலையும் தீப்பிடித்து எரிந்தது. 

சிறப்பு பிராத்தனை 

இது பில்லி சூனியத்தின் வேலையாக இருக்குமோ? என கருதி ராஜேஸ்வரி தனது கைக்குழந்தையை புதுச்சேரியில் உள்ள இந்து கோவில்கள், மசூதி, கிறிஸ்தவ ஆலயங்களுக்கு கொண்டு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். 

உறவினர் வீட்டிலும்... 

பின்னர் அபிஷேகபாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ராஜேஸ்வரி தனது குழந்தையுடன் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த சில மணி நேரத்தில் மீண்டும் அந்த குழந்தை மீது தீப்பிடித்து எரிந்தது. உடனே அந்த குழந்தையை வீட்டை விட்டு வெளியே எடுத்து வந்தவுடன், வீடும் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் டி.பரங்கிணியில் உள்ள மாமியார் துளசி வீட்டிற்கு ராஜேஸ்வரி கைக்குழந்தையுடன் சென்றார். அங்கேயும் குழந்தையின் உடலில் திடீரென தீப்பற்றி எரிந்ததுடன் பக்கத்து வீடுகளிலும் தீப்பற்றியது. 

ஊரை விட்டு போயிடுங்க... 

எனவே அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், இந்த குழந்தையை இங்கேயே வைத்திருந்தால் நெடிமோழியனூரில் வீடுகள் தீப்பிடித்து எரிந்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதை போல, டி.பரங்கிணியிலும் வீடுகள் தீப்பிடித்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் எனவே குழந்தையை வேறு எங்காவது கொண்டு சென்றுவிடுங்கள் என கூறியுள்ளனர். 

தற்கொலை முயற்சி 

இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். உடனே அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மேலும் கைக்குழந்தையான ராகுலும் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். 

மருத்துவ பரிசோதனை 

குழந்தையின் உடலில் ஏற்படுவதாக கூறப்படும் தீ-யிற்கான காரணத்தை அறிய இன்று மருத்துவக்குழுவினர் சோதனை நடத்தவுள்ளனர். குழந்தையின் உடல் எரிவதற்கு என்ன காரணம் என கண்டறியாமல், குழந்தையையும், அதன் தாயையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

மர்மம் விலகுமா? 

2மாத கைக்குழந்தையின் உடலில் திடீர், திடீரென தீப்பிடித்து எரியவதற்கான காரணம் என்ன? அந்த கைக்குழந்தையை எந்த ஊருக்கு கொண்டு சென்றாலும் தீப்பிடித்து எரிவதற்கான காரணம் என்ன? என்பது மர்மமாகவே உள்ளது. 

சகோதரத்துவத்துடன் வாழ்வோம்… இஸ்லாமியர்களுக்கு ஜெ. ரம்ஜான் வாழ்த்து

கொடநாடு: நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளில் கூறியுள்ளபடி அனைவரும் சகோதரத்துவடன் வாழவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: "ஈகை திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 

புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் முப்பது நாட்கள் நோன்பிருந்து இறை உணர்வோடு எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி ஏழை எளியோரின் ஏழ்மையை போக்கிட உணவும், செல்வமும் வழங்கி, சிறப்புத் தொழுகைகள் செய்து இறைவனை வழிபட்டு ரம்ஜான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவார்கள். 

அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி, தன்னால் இயன்றதை பிறருக்கு தருமம் செய்து, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை அனைவரும் பின்பற்றி வாழ்வில் உயர்ந்திட உறுதியேற்போம். 

இந்தப் புனித ரம்ஜான் பெருநாளில் எல்லா துறைகளிலும் தமிழகம் சிறப்பு எய்திட நாம் அனைவரும் ஒற்றுமையோடு உழைத்திடுவோம் என்று கூறி எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். 

டெல்லியில் ‘ஸ்டூடண்ட் விசா’வில் வந்து விபச்சாரம் செய்யும் 'வெளிநாட்டு பறவைகள்'!

 டெல்லி: டெல்லியில், ஸ்டூடண்ட் விசாவில் மாணவிகள் போர்வையில் வந்து விபச்சாரத்தில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு பெண்களுக்கு பொதுவாகவே பாலியல் தொழிலில் மவுசு அதிகமாம். அதிலும் இளம்பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாமாம். எனவே, இதை தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளும் பாரின் கால்கேர்ஸ், ஸ்டூடண் விசாவில் மாணவிகள் போல் இந்தியாவிற்குள் நுழைந்து விபச்சாரம் செய்வது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

சில பாலியல் புரோக்கர்கள் இவர்களை கிட்டத்தட்ட 15 நாட்களுக்குக் கூட மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விடுகிறார்களாம்.

அப்பெண்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் தங்குமிடம் குறித்த செலவுகள் அனைத்தும் புரோக்கர்கள் பொறுப்பாகும்.

இத்தகைய வெள்ளைத் தோல் அழகிகளைக் காட்டி, வாடிக்கையாளர்களிடம் ரூ25000 முதல் ஒரு லட்சம் வரை கறந்து விடுகிறார்களாம் தரகர்கள்.

வெளிநாட்டிற்கும், இந்தியாவிற்குமாக பறந்து, பறந்து பாலியல் தொழில் செய்யும் அந்தப் பெண்களுக்கு சுலபமாக மாதம் ரூ 20லட்சம் வரை சம்பளம் கிடைத்து விடுகிறதாம்.

பிரபல மீது 'பயங்கரமான' பாலியல் குற்றச்சாட்டு!

சென்னை: பிரபல அரசியல் கட்சி தலைவர் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகி பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தலைவர் பன்முகம் கொண்டவர். சென்னையில் பிரபலமான கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். டிவி வைத்திருக்கிறார். பத்திரிக்கை வைத்திருக்கிறார். 

இவர் மீதுதான் இந்தப் பரபரப்பான புகார் எழுந்துள்ளது. அவர் மீது குற்றம் சாட்டியிருப்பவர் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் ஆவார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். மீனவர் சமுதாயத்தைச் சார்ந்தவர். தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

2011 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கூட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக இவர் போட்டியிட்டாராம். அந்த கட்சி தலைவருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட அந்த பெண் கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் இளைஞரணி செயலாளர் ஆகியோர் மீது பாலியல் ரீதியான புகார் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவியதால் பலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

இதுதொடர்பான புகாரை அவர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், உளவுத்துறைக்கும் அனுப்பி வைத்துள்ளாராம். ஆனால் எந்தக் காவல் நிலையத்திலும் இவர் புகார் கொடுக்கவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. 

இந்த தகவல் குறித்த உண்மை தன்மை அறிய மாநில உளவுத்துறை போலீசாரும் விசாரணையில் குதித்துள்ளார்களாம். புகார் குறித்த ஆதாரங்களை சேகரி்த்து ஆய்வு செய்து வருகின்றார்களாம். 

புகார் உண்மை என்றால் விரைவில் அந்த அரசியல் கட்சி தலைவர் மீது சட்டப்படி நடவடிக்கை பாயுமாம். ஆனால் புகார் பொய் என்று தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட பெண்மணி மீது வழக்கு தொடரப்படும் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகின்றது.

முல்லைப் பெரியாறு அணை வழக்கு.. கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணை வழக்கு.. கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!டெல்லி: முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்த ஏ.எஸ். ஆனந்த் குழுவின் அறிக்கையை குறை கூறிய கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் முன்பு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கோரும் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. 

கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திட உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறுவதற்காக கேரள சட்டசபையில் அணைகள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்து தமிழ அரசு சார்பில் சுட்டிக் காட்டப்பட்டது. தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட இந்த வாதம் ஏற்கத்தக்கது எனக் கூறிய நீதிபதிகள், அணையின் பாதுகாப்பை கேரள சட்டசபை தீர்மானம் மூலம் முடிவு செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தது. 

இன்று கேரள அரசு தனது தரப்பு வாதத்தை நீதிபதிகள் முன்பு எடுத்து வைத்தது. 

அப்போது அணையின் பாதுகாப்பு கருதி அணையில் 136 அடிக்கு மட்டும் நீர் நிரப்ப வேண்டும் என்று கேரள அரசின் வாதம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு நீர் நிரப்பினால் அணைக்கு ஆபத்து என்றால் அப்போது 136 அடிக்கு மட்டும் நீர் நிரப்பினால் அணை பாதுகாப்பாக இருக்கும் என்று எவ்வாறு உங்களால் கூற முடியும் என்று கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

மேலும் உச்சநீதிமன்றம் இன்னொரு வல்லுநர் குழுவை நியமித்து அணையை ஆய்வு செய்து அப்போது பாதுகாப்பாக இல்லை எனில் அணையை இடிக்க கேரளாவுக்கு உரிமை உண்டு என்றும் கேரள வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது உச்சநீதிமன்றம் அமைத்த முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவின் அறிக்கையையும் கேரள அரசு வழக்கறிஞர் விமர்சித்தார். 

இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணையைவிட உயரமான அணைகள் பலமாக இருக்கின்றன. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை எப்படி பாதுகாப்பானதாக இல்லை என்று கூற முடியும் என்றனர்.

கெட்டவன்னு தெரிந்தும் ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும்?: சேரன் கண்ணீர்

சென்னை: கெட்டவன் என்று தெரிந்தும் ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும் என்று இயக்குனர் சேரன் தன் மகளின் காதல் விவகாரம் பற்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் சேரன் தனது மகளின் காதல் விவகாரம் குறித்து இன்று பகல் 12.30 மணிக்கு பேட்டி அளித்தார். அவருடன் அவரது மனைவி செல்வராணி மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் இருந்தனர். சேரன் 

செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இதுவரை வெளி உலகிற்கு என் மனைவியை நான் அறிமுகப்படுத்தியது இல்லை. தற்போது அவரை அறிமுகப்படுத்துகிறேன். இவர் தான் என் மனைவி. எனக்கு 2 மகள்கள். நான் பணக்காரன் அல்ல. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். அப்பா ஒரு தியேட்டர் ஊழியர், அம்மா ஆசிரியை. என் மகள்களுக்கு சினிமா பின்னணியும், பணக்கார வாசனையும் வராமல் இருக்க அவர்களை மிகவும் கவனமாக வளர்த்தேன் என்று சேரன் கூறினார்.

நான் என் மனைவியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். என் மகள்களுக்கு நாங்கள் எந்த ஜாதி என்று இதுவரை நான் கூறியதில்லை. மூத்த மகள் விவரம் தெரிந்தவள். இளையவள் தாமினிக்கு தாழ்வு மனப்பான்மை இருந்ததால் அவளை செல்லமாக வளர்த்தோம் என்று தன் மகளை நினைத்து கண்கலங்கினார் சேரன்.

தாமினிக்கு 18 வயதில் காதல் வந்தபோது அதை நாங்கள் எதிர்க்கவில்லை. படிப்பை முடித்த பிறகு திருமணம் செய்து கொடுக்கிறோம் என்றோம். ஆனால் பையனை பற்றி விசாரித்தபோது அவனது பின்னணி எங்களுக்கு பயத்தை அளித்தது என்றார் சேரன்.

இருதய நோயுள்ள தாயுடன் இருந்தான். வேலை இல்லை. நான் சந்துருவின் குடும்பத்தாரை சந்தித்து பேசினேன். மாதம் ரூ. 10,000 முதல் ரூ.15,000 வரை சம்பாதி, வாழ்க்கையில் முன்னேறிக் காட்டு, 3 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து வைக்கிறேன் என்றேன். அதுவரை ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றாதீர்கள் என்று அவனிடம் கேட்டுக் கொண்டேன். அவனும் சரி என்றான். ஆனால் எனக்கு தெரியாமல் அவர்கள் தொடர்ந்து பேசி உள்ளனர்.

ஒரு கட்டத்தில் அவன் என் மகளை எனக்கு எதிராக திருப்பிவிட்டான். சந்துருவிடம் பேசாமல் இருக்க என்னால் முடியவில்லை. பேசாமல் இருந்தால் செத்துவிடுவேன் என்று என் மகளை பேச வைத்தான். நான் உடனே அவனுக்கு போன் போட்டு கொடுத்து என் மகளை பேச வைத்தேன். எந்த தகப்பனும் செய்யாததை செய்தேன். அதன் பிறகு அவன் நிறைய பொய் கூறினான். என் மகளுடன் பேசக் கூடாது என் நான் கூறிய நாட்களில் இரவு நேரத்தில் அவன் பிற பெண்களுடன் வெகு நேரம் பேசி இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று சேரன் தெரிவித்தார்.

அவன் ஃபேஸ்புக்கில் என் மூத்த மகளிடம் ஐ லவ் யூ என்று கூறியிருக்கிறான். அவனுக்கு 7,8 பெண்களுடன் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க நாங்கள் தயார். மோசமான நடத்தை, பொருளாதாரம் சரி இல்லை, பெண்களுடன் தகாத தொடர்பு என்று இதை எல்லாம் பார்த்த பிறகும் ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும் என்று சேரன் வருத்தப்பட்டார்.

உன் அப்பாவின் படத்தில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளான். இதையடுத்து எழில் இயக்கும் படத்தில் அவனை நடிக்க வைக்குமாறு என் மகள் என்னிடம் தெரிவித்தாள் என்றார் சேரன்.

என் மகளை வைத்து பணத்தையும், சொத்துக்களையும் பறிக்க திட்டமிட்டதை உணர்ந்தேன். அவனை நான் அடிக்கவும் இல்லை, கொலை மிரட்டலும் விடுக்கவில்லை. என் மகள் ஒரு கட்டத்தில் மனம் மாறி சந்துரு வேண்டாம் என்றாள். ஆனால் தற்போது அவள் மனதை மாற்றி மூளை சலவை செய்து எனக்கு எதிராக திருப்பி விட்டிருக்கிறான் என்றார் சேரன் அழுதபடியே.

சந்துரு நல்லவன் இல்லை. அவன் குடும்பமும் நல்ல குடும்பம் இல்லை. அவன் மீது 3 பெண்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். நல்ல குடும்பமாக இருந்தால் நானே சேர்த்து வைப்பேனே. அவனது குடும்பப் பின்னணி குறித்து உளவுத்துறை விசாரிக்க வேண்டும் என்றார் இயக்குனர் அமீர்.

தங்கள் மகள் கெட்டவனை நம்பி தங்களை எதிர்ப்பதை நினைத்து சேரனும், அவரது மனைவியும் அழுதபடியே பேட்டி அளித்தனர். ஆனால் தாமினியோ பெற்றோர் வேண்டாம், காதலன் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்.

இன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...!

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் தனது முதல் ஓட்டத்தைத் தொடங்கப் போகிற நாள் கிட்டத்தட்ட வந்து விட்டது. இன்னும் 10 நாட்களில் கோயம்பேட்டில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதான் சென்னை மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டமாகும். இதை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை ஓட்டத்துக்குப் பின்னர் முதல் பாதையில் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கும் என்று தெரிகிறது.

பிரேசிலிலிருந்து வந்த பெட்டிகள்


இந்தப் பெட்டிகள், கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


இதேபோல மேலும் 2 மெட்ரோ ரயில்கள் (8 பெட்டிகள்) அடுத்த மாதம் கப்பலில் சென்னை வந்தடைகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் 9 ரயில்களும் பிரேசிலில் இருந்து வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னை மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் கோயம்பேடு பணிமனையில் முதல்கட்டமாக மேற்கொள்ளப்படும். இதற்காக தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன.


கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரயில்களை நிறுத்திவைப்பதற்காக இதுவரை 1,960 மீட்டர் நீளத்துக்கு தண்டவாளப் பணியும், 12,700 மீட்டர் நீளத்துக்கு மின்பாதை அமைக்கும் பணியும் முடிந்துள்ளன.


மேலும் பணிமனையில் மின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன. ரயில் பெட்டிகளில் உள்ள உதிரி பாகங்கள், உள் அமைப்புகள் சரியாக இருக்கின்றதா என்ற சோதனையும் சில நாள்களுக்கு முன்பு முடிவடைந்துவிட்டது. சோதனை ஓட்டம் முடிந்த பிறகு பயணிகள் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்ற தேதி அறிவிக்கப்படும். அதன் பின்னர் போக்குவரத்து தொடங்கும்.


காதலனுடன் செல்லவே விரும்புகிறேன் - சேரன் மகள் நீதிமன்றத்தில் உறுதி

காதலனுடன் செல்லவே விரும்புகிறேன் - சேரன் மகள் நீதிமன்றத்தில் உறுதிசென்னை: இயக்குனர் சேரனின் மகள் தாமினி இன்று பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டர். அப்போது தன் காதலன் சந்துருவுடன் போகவே விரும்புவதாக அவர் உறுதியாகக் கூறிவிட்டார். 

காதல் பிரச்சினையில் சிக்கியுள்ள தாமினி மயிலாப்பூர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தாமினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, தாமினியின் காதலன் சந்துருவின் தாயார் ஈஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி கேட்டுக்கொண்ட ஈஸ்வரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, "தாமினியை காதலித்த வாலிபர் சந்துருவை அடி ஆட்களை அனுப்பி கொலை செய்துவிடுவதாக திரைப்பட இயக்குனர் சேரன் மிரட்டியுள்ளார். இது குறித்து தாமினி கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை என்ற பெயரில் அவரை காப்பகத்தில் அடைத்து வைத்துள்ளனர். எனவே, இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும். திருமண வயது வந்த பெண்ணை பலவந்தமாக இப்படி அடைத்து வைத்துள்ளது தவறு," என்றார். 

இதைக் கேட்ட நீதிபதிகள், ஈஸ்வரி தாக்கல் செய்த மனு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், பிற்பகல் அந்த மனு விசாரிக்கப்படும் என்றும் அறிவித்தனர். 

மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது இயக்குனர் சேரன் மகள் தாமினியை நீதிமன்றத்தில் போலீசார் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதையடுத்து இன்று மதியம் தாமினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் போலீசார். 

காதலனுடன் செல்ல உறுதி 

அப்போது தாம் காதலன் சந்துருவுடன் செல்லவே விரும்புவதாக நீதிபதிகள் முன் தாமினி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தாமினியின் பாதுகாப்பு கருதி, அவரை மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் வீட்டில் தங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

விசாரணையின்போது, இயக்குனர் சேரன், தனது மனைவியுடன் உயர்நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். சந்துரு குடும்பத்தினரும் வந்திருந்தனர் 

இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் !

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை. இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்...


இந்த படங்கள் கூகுள்ல கூட கிடைக்காதாம்...

நீங்கள் இணையத்தில் எவ்வளவோ வேடிக்கையான போட்டோக்களை பார்த்திருபீர்கள் ஆனால் இதுபோல போட்டோக்களை நிச்சயம் பார்த்திருக்கமாட்டிர்கள். 

இந்த போட்டோக்கள நல்லா பாருங்க இது குறும்பு தனமா எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.