ஏலத்திற்கு வருகிறது இளவரசி டயானாவின் கார்

பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலம் விடப்படவுள்ளது. இந்தக் கார் 2 லட்சம் அமெரிக்க டாலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிகாகோவில் உள்ள வோலோ ஆட்டோ மியூசியம் இந்த ஏலத்தை வருகிற 9ஆம் திகதி நடத்தவுள்ளது. மறைந்த இளவரசி டயானாவும், பிரிட்டன் இளவரசர் சார்லஸசும் 1985ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது, அப்போதைய ஜனாதிபதி ரொனால்டு ரீகன் அவரது மனைவி நான்சி ஆகியோரைச் சந்தித்தனர்.
அப்போது இந்தக் காரைப் பயன்படுத்தினர். அமெரிக்காவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தால் 1979ஆம் ஆண்டு இந்தக் கார் வாங்கப்பட்டது.
பின்னர், நிபுணர்கள் 3 ஆண்டுகள் உழைத்து இந்தக் காரை குண்டு துளைக்காத, ஆயுதங்கள் பொருத்தப்பட்ட காராக மாற்றினர். இதற்காக சுமார் ரூ.1.07 கோடி செலவிடப்பட்டுள்ளது.
விஷவாயு மற்றும் வெடிகுண்டுகளால் சேதம் ஏற்படாத வகையில் அதிகபட்ச பாதுகாப்புடன் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளியின் நிறம் கொண்ட இக் காரின் ஆரம்ப ஏல விலை 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கார் விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகை, டயானா ஆரம்பித்த புற்றுநோயால் பாதித்த குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு அளிக்கப்பட உள்ளது.




Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: