நியூயோர்க்கில் நடந்த விக்டோரியாஸ் சீக்ரெட் ஏஞ்சல் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட பிரேசில் நாட்டு மாடல் அழகியான அலெசான்ட்ரா அம்ப்ரோசியா ரூ. 13.59 கோடி மதிப்புள்ள பேன்டசி பிராவை அணிந்து வந்து அழகு நடை போட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
அதிக கவர்ச்சிகரமான அந்த விக்டோரியா சீக்ரெட் ஏஞ்சல் பேன்டசி அனைவரையும் நிலைகுலைய வைத்த இந்த பிரா வைரம், ரூபி, சபையர், அமெதிஸ்ட் என பலவகையான கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5200 கற்கள் இதில் பதிக்கப்பட்டுள்ளதாம்.
பிரா மட்டுமல்ல, அதை அணிந்து வந்த அலெசான்ட்ராவும் படு அழகானவர் தான். 31 வயதான அவருக்கு கடந்த மே மாதம் தான் குழந்தை பிறந்தது. இருப்பினும் தனது பழைய கவர்ச்சியிலே காணப்படுகிறார்.
இந்த காஸ்ட்லியான பிராவை அணிந்து வந்ததைப் பெருமையாக கூறினார் அலெசான்ட்ரா. கடந்த ஆண்டு இந்த பிராவை
ஆஸ்திரேலியாவின் மிராண்டா அணிந்து வந்தார் என்பது நினைவிருக்கலாம்.


