தனது கணவர் மீதிருந்த கோபம் காரணமாக, அமெரிக்க பெண் ஒருவர் 7 வயது மகனையும், 5 வயது மகளையும் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தவர் எலிசபெத் பிளாகோஸ்கா(வயது 40). இவர் தன் கணவன் மீதிருந்த கோபத்தில் 7 வயது மகனை 50 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதனையடுத்து அப்பெண்ணை கைது செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, லாரி ஓட்டுனரான தனது கணவர் குழந்தைகள் இருவரையும் கவனிக்கும்படி தன்னிடம் தனிமையில் விட்டதாகவும், அதனால் ஏற்பட்ட கோபத்தினால் தான் தனது மகனைக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது மகனை தான் கொன்றதை 5 வயது மகள் பார்த்ததால், அக்குழந்தையையும் தான் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

