வேலூர்: வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் திடீரென நடத்தப்பட்ட சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள்,சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இச்சிறையில் இருக்கும் ராஜிவ் கொலையாளி முருகனிடமும் செல்போன், சிம்., சிடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
வேலூர் சிறையில் போதைப் பொருட்களும், செல்போன்களும் தாராளமாக புழங்குவதாக சிறைத்துறை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சிறைதுறை டி.ஐ.ஜி. கோவிந்தராஜ், லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. அரி ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வேலூர் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர் 8 மணி நேரம் நடந்த சோதனை முடிவில் சிறை அதிகாரிகள், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர்.
நேற்று நடந்த ரெய்டின்போது ராஜீவ் கொலையாளி முருகனிடம் இருந்து ஒரு செல்போன், சிம்கார்டு மற்றும் மெமரிகார்டு, ஒரு சிடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனஞ்செயன் என்ற கைதியிடம் இருந்து 2 செல்போன்களும், சிம்கார்டும், மேலும் சிறைவளாகத்தில் இருந்து 2 சிம்கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.