வெள்ளைத் தங்கத்தில் ஜோலிக்கும் பென்ஸ் கார்!


வெள்ளை தங்கத்தின் சிறப்பு

தங்கத்துடன் பல்லாடியம், நிக்கல் கலந்து வெள்ளை தங்கம் உருவாக்கப்படுகிறது. மேலை நாடுகளில் இதில் ஆபரணம் செய்கின்றனர். இந்த தங்கத்தை பிரித்தெடுக்க பாதரசத்திற்கு பதிலாக பொட்டாசியம் சயனைடை பயன்படுத்துகின்றனர். தீக்குச்சி தலை அளவு வெள்ளைத் தங்கத்திலிருந்து 3 மீட்டர் நீளத்துக்கு கம்பி இழுக்கலாம்.

முலாம் பூச்சு அல்ல..!!

இந்த காரில் முலாம் பூசப்படவில்லை. வெள்ளை தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டிருக்கிறது.

பவர்ஃபுல் எஞ்சின்

இந்த காரில் 1,600 சிசி வி10 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. வெறும் 2 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை தொட்டுவிடும்.



உயிரி எரிபொருளில் இயங்கும்..!

சுற்றுச் சூழல் தீங்கை குறைக்கும் உயிரி எரிபொருள் தொழில்நுட்பத்தில் இந்த கார் இயங்கும். இதுபோன்ற பவர்ஃபுல் எஞ்சின் கொண்ட கார்கள் உயிரி எரிபொருள் தொழில்நுட்பத்தை பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாக கூறலாம்.



விலை

இந்த காரின் அடக்கவிலை ரூ.12.5 கோடியாம்.

இலங்கை சர்மிளாவும்.... தமிழக சல்மாவும்.. மார்க்கத்தை பற்றி கொஞ்சமும் யோசிக்காத இவர்களின் எழுத்தை பாருங்கள் !

 

இஸ்லாம் பெண்களுக்கு கண்ணியத்தையும் பெருமையையும் கொடுக்கிறது.... இது இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழும் பெண்களுக்கு தெரியும்... இதை உணர்ந்ததால்தான் இஸ்லாத்திற்கு வெளியே இருந்த இஸ்லாதை அறியாத கமலாதாஸ் போன்ற எத்தனையோ பெண்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்று விரும்பி இஸ்லாத்தில் இணைகிறார்கள். ஆனால் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து மேல் நாட்டு மோகத்தில் எப்படியும் மனம் போன போக்கில் வாழ வேண்டும் என்று விரும்புகின்ற பெயர் தாங்கிகள் தங்களுக்கும் தாங்கள்
சார்ந்துள்ள சமூகத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடிய கேடுகெட்ட கருத்துக்களை பெண்ணியம் பெண் உரிமை என்ற பெயரில் உளரி வருவதை காலம் காலமாக பார்த்து வருகிறோம்.
அந்த லிஸ்டில் புதிதாக தன்னை இணைத்துகொண்டுள்ளார் இலங்கை பெண் கவிஞர் சர்மிளா... இவர் உதிர்த்தமுத்துக்கள் ''பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும். அது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவதுடன் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்பும் கிடைக்கும்''
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் என்றும் தேவைப்படின் பாலியல் தொழிலாளர்களை வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் தென்பகுதி மாகாண சபையின் ஆளுங்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கின்ற நிலையில் சமூக ஆய்வாளரான சர்மிளா செய்யத்தும் இதனை தெரிவித்திருக்கிறார். 
இலங்கை ஒரு பாரம்பரிய கலாசாரங்களை பின்பற்றுகின்ற நாடு என்கின்ற போதிலும், அங்கு ஏற்கனவே பாலியல் தொழில் மிகவும் அதிகமான அளவுக்கு பரந்திருப்பதால், அதனை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறைக்கு நல்லது. அதனால், அதில் ஈடுபடும் பெண்களுக்கு ஓரளவு பாதுகாப்பும் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவர் ஒரு கவிஞர் இவர் எழுதி தமிழகத்தில் காலச்சுவடு பதிப்பகம் '' சிறகு முளைத்த பெண் '' என்ற கவிதைப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது..
இதே போல் தமிழகத்திலும் ஒரு பெண் கவிஞர் உள்ளார் அவர் பெயர் சல்மா இவர் கூறுவதை கேளுங்கள்...
''எங்கள் வீட்டில் என் கணவரும் தொழுகை செய்யமாட்டார். நானும் அப்படித்தான். நாங்கள் இருவருமே வீட்டில் ரொம்பச் சாதாரணமாகத்தான் இருப்போம். முஸ்லீம் என்ற அடையாளமே எங்களுக்கில்லை''.
''என் தோழி ஒருநாள் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் போகும்போது வீட்டில் ஸ்டிக்கர் பொட்டை விட்டுவிட்டுப் போய்விட்டாள். அதைக் கண்ணாடி முன்பு நின்று என் நெற்றியில் வைத்துப் பார்த்தேன். அதைப் பார்த்து என் பையனுக்குப் பயங்கரக் கோபம் வருகிறது. அழுது அடம்பிடிக்கிறான்.
“நீ என்ன சாமி கட்சிக்குப் போகப் போகிறாயா” என்கிறான். சின்னப் பையனும் அழுகிறான். பெரிய பையனும் அழுகிறான்.இப்போது சின்னப் பையன்களாக இருக்கும் மகன்கள் நாள் ஆக ஆக என்னை என்ன செய்வார்களோ என்ற நினைப்பு எனக்குள் ஓடுகிறது''.
இவர் எழுதிய இரண்டாம் ஜாமங்களின் கதை- முஸ்லிம் பெண்கள் முஸ்லிமல்லாத ஆண்களுடன் ஓடிப்போகின்ற சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறது.இரண்டாம் ஜாமங்களின் கதையைப் பற்றிய அன்றைய பெசன்ட்நகர் நிகழ்வில், ஏற்புரை ஆற்றிய சல்மா ''எனது சமூகத்தைக் கொச்சைப் படுத்துவதோ, என் சமூக மக்களைப் புண் படுத்துவதோ எனது நோக்கமல்ல..நான் கண்டவற்றை, கேட்டவற்றை,அனுபவித்தவற்றை அப்படியே எழுதினேன்'' என்றார்.
இப்படி தான் சார்ந்துள்ள சமுதாயத்தை கொச்சைப்படுத்துவது மட்டுமல்லாது மிகவும் ஆபாசமாகவும் எழுதியுள்ளார்.... 
அச்சில் ஏற்ற முடியாத அருவருப்பான இவரின் கவிதைகள் " கவிஞர் சல்மா " என்று கூகுளில் தேடும்போது கிடைக்கிறது. 
இந்த வியாதிகள் தொடரும் ஏனென்றால் இவ்வாறு தன்னை அடையாளப்படுத்துவதன் மூலம் தன்னை தனித்துக்காட்டி தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் இது போன்ற எழுத்து விபச்சாரிகளின் எண்ணம்... இவர்களை இனம் கண்டு புறக்கணிப்போம்...

வயிறு குறைவதற்க்கு இதை படிங்க....


How to Reduce Stomachஇந்த காலத்தில் உடல் எடைப் பற்றிய பிரச்சனைகள் அதிகம் உள்ளன. சிலர் உடல் எடை அதிகவில்லை என்ற கவலையுடன் இருக்க, மற்றும் சிலருக்கு உடல் எடை குறையாமல் அவஸ்தைப்படுகின்றனர். மேலும் சிலர் உடல் எடை அதிகரிப்புடன் தொப்பையையும் சேர்த்துக் கொண்டு, அவற்றை குறைக்க பெரும் முயற்சி எடுக்கின்றனர். இத்தகைய பிரச்சனைகள் வருவதற்கு காரணம் நமது பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவை தான் முக்கிய காரணங்களாக உள்ளன. இருப்பதிலேயே மிகவும் கடினமான ஒரு செயல் என்னவென்றால் தொப்பையைக் குறைப்பது தான். இதனால் உடல் அழகு மட்டும் கெடுவதில்லை, உடலில் நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றை வரவழைத்து கெடுத்துவிடுகின்றன.
இவை அனைத்திற்குமே வேறு யாரும் காரணமில்லை, நாமே தான் காரணம். மேலும் அந்த வகையான நோய்கள் வருவதற்கு தொப்பையுடன், ஆரோக்கியமற்ற உணவுகள், அதிக வேலைப் பளு, ஹார்மோன் மாற்றங்களும் ஒரு வகையில் காரணங்கள் தான். அதிலும் இன்றைய அவசர காலத்தில் எந்த செயலையுமே சரியான நேரத்தில் செய்ய முடியாமல், உடலை பாழாக்கிக் கொள்கின்றோம்.
சரியான ஆரோக்கியமற்ற உணவுகள், உடலுக்கு ஒரு நாளைக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது, குறைவான தூக்கம், கெட்ட பழக்கவழக்கங்கள் என இதற்கான காரணங்களைச் சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம்.
எனவே என்னவெல்லாம் செய்தால், உடல் எடை அதிகரிக்காமலும், தொப்பை போடாமலும் தடுக்க முடியும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகவே அவற்றை கண்டிப்பாக தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் தினமும் குறைந்தது 4-5 பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

உணவு நேரம்

எந்த வேளையிலும் உணவை தவிர்க்கக்கூடாது. மேலும் அவ்வாறு உண்ணும் உணவையும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், அதிகமான பசியெடுத்து, உண்ணும் உணவும் அதிகமாகிவிடும். பின் உடலில் உள்ள மெட்டபாலிக்கின் அளவு குறைந்து, உடல் எடை குறையாமல், தொப்பை அதிகரித்துவிடும். சொல்லப்போனால், சாப்பிடாமல் இருந்தால் தான், உடலில் தொப்பை ஆரம்பமாகும்.

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அதற்கு அவோகேடோ, பாதாம், ஆப்ரிக்காட், ஆப்பிள், முட்டை, தானியங்கள் போன்றவை தான் சிறந்தது. இதனால் அடிவயிற்றில் இருக்கும் கொழுப்புகள், இதில் உள்ள சத்துக்களால் கரைந்து குறைந்துவிடும்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம் கூட வயிற்றில் கொழுப்புக்கள் சேர்வதற்கு ஒரு காரணம். ஆகவே மனதில் அழுத்தம் ஏற்படாமல் ரிலாக்ஸ் ஆக இருப்பதற்கு யோகா, தியானம் போன்றவற்றை செய்வது நல்லது.

உறக்கம்

போதுமான உறக்கமும் வயிற்றில் உள்ள கொழுப்புக்களை குறைப்பதற்கு உதவும். எப்படியெனில் போதுமான தூக்கம் இல்லாவிட்டால், உடலில் உள்ள மெட்டபாலிசம் குறைய ஆரம்பிக்கும். பின் அந்த நேரத்தில் நாம் எந்த உணவை உண்டாலும், அவற்றை உடலானது முற்றிலும் உறிஞ்சி, உடல் எடையை அதிகரித்துவிடும்.

ஆல்கஹால்

ஆல்கஹால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றை பருகினால், உடலில் தேவையில்லாத கலோரிகள் அதிகரித்து, எடை அதிகமாவதுடன், தொப்பை வந்துவிடும்.

புத்தகம் மற்றும் டிவி

சாப்பிடும் போது புத்தகம் படித்தல், டிவி பார்ப்பது போன்ற செயல்களை செய்ய வேண்டாம். இதனால் நாம் உண்ணும் உணவின் அளவு, நம்மை அறியாமலேயே அதிகரித்துவிடும். பின் தொப்பை வராமல் என்ன செய்யும்?

உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. இதனால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவு அதிகரிக்கும். அவ்வாறு மெட்டபாலிசத்தின் அளவு அதிகரித்தால், உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்துவிடும். உதாரணமாக, வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல், டான்சிங் போன்றவை எடையை குறைக்க உதவும் சிறந்த உடற்பயிற்சிகள்.

உடற்பயிற்சி

உடலில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. இதனால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவு அதிகரிக்கும். அவ்வாறு மெட்டபாலிசத்தின் அளவு அதிகரித்தால், உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்துவிடும். உதாரணமாக, வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல், டான்சிங் போன்றவை எடையை குறைக்க உதவும் சிறந்த உடற்பயிற்சிகள்.

உலகப் பயங்கரவாதி இஸ்ரேலுக்கு ஆதரவாக உளவு பார்த்த துரோகியின் கதி. காசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்லப்பட்டான். (படங்கள் இணைப்பு)

காசா பகுதியில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில், இஸ்ரேலிய உளவாளிகள் 6 பேர் பாலஸ்தீன பகுதியில் சி்க்கினார்கள் என ஹமாஸின் அக்சா ரேடியோ நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தது.ஹமாஸ் அமைப்பால் உளவாளிகள் என பிடிக்கப்பட்ட 6 பேரில் குறைந்தபட்சம் ஒருவருடைய இறந்த உடலை, மோட்டார் பைக்கில் கட்டி இழுத்தபடி காசா பகுதி வீதியில் ஹமாஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர்.இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் BBC , CNN போன்றவற்றில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்று காலை ஒலிபரப்பான செய்தி அறிக்கையில், “காசா பகுதியில் மறைந்திருந்து, இந்த உளவாளிகள் இஸ்ரேலிய உளவுத்துறை
துரோகிகள் மொசாத்துக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தனர்.



ஹமாஸ் இயக்கத்தின் உளவுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் பேரில், இவர்கள் கையும் களவுமாக அகப்பட்டனர்” என கூறப்பட்டது.ஹமாஸிடம் சிக்கிக்கொண்ட 6 பேரிடமும், ஹை-டெக் தகவல் தொடர்பு சாதனங்கள் இருந்ததாக அக்சா ரேடியோ குறிப்பிட்டது.
இவர்கள் காசா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இந்த ஹைடெக் சாதனங்களை இயக்கியதாகவும், இஸ்ரேலிய குண்டுவீச்சு விமானங்கள் காசாவின் மற்றைய பகுதிகள் அனைத்திலும் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்திய போதிலும், இந்த வீடு அமைந்திருந்த இடத்தில் மட்டும் குண்டுகள் ஏதும் விழாமல் பார்த்துக்கொண்டார்கள் என்றும் கூறப்பட்டது.கொல்லப்பட்ட 6 பேரில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல்கள் மோட்டார் பைக்குகளில் கட்டப்பட்டு வீதி வீதியாக இழுத்துச் செல்லப்பட்டன எனவும் அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மோட்டார் பைக்கில் சென்றவர்கள் வீதிகளில் துப்பாக்கிகளை உயர்த்தியபடி, “உளவாளி.. உளவாளி..” என கோஷமிட்டுக்கொண்டு சென்றதாக ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
“இஸ்ரேலுக்காக உளவு பார்க்கும் வேறு யாராவது இருந்தால், உங்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்” எனவும் அவர்கள் கோஷமிட்டபடி சென்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.இந்த ஆறு பேரில் ஒருவருக்கு தண்டனை கொடுக்கப்படும் போட்டோ, சி.என்.என். டி.வி. சேனல் நிருபர் ஆன்டர்சன் கூப்பர் வசம் கிடைத்துள்ளது எனவும் இன்று அதிகாலை தகவல் வெளியானது.
காசா தகவல்களின்படி, வேன் ஒன்றில் கொண்டுவரப்பட்ட 6 பேரும், நடுவீதியில் இறக்கப்பட்டு, வீதியில் வரிசையாக குப்புற படுக்கும்படி உத்தரவிடப்பட்டனர் எனவும், அதன்பின் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்டவர்கள் தமது உளவாளிகளா என்பது குறித்து இஸ்ரேல் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

முதுகு வலி வருது ஏன்?

இன்றைய காலத்தில் நோயில்லாத மனிதரைப் பார்ப்பது மிகவும் கடினமானது. ஏனெனில் அந்த அளவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நோயானது புகுந்து விளையாடுகிறது. சும்மா சொல்லக்கூடாது, உடலில் வரும் நோய்க்கு முதற்காரணமே நாம் தான். ஆனால் அதை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல், நான் ஒன்றும் செய்யவில்லை, ஆனால் எதற்கு இது வருகிறது என்று தெரியவில்லை என்று சொல்வோம். முதலில் நாம் சரியாக இருந்தால், நமக்கு எந்த ஒரு நோயும் வராது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது உடலில் வரும் நோய்களில் பெரும்பாலோனோருக்கு இருப்பது முதுகு வலி. இந்த வலியானது நமக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இப்போது அந்த முதுகு வலி ஏற்படுவதற்கு என்னவெல்லாம் காரணம் என்று சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

நீண்ட நாள் வலி
முதுகு அல்லது கழுத்து அல்லது மற்ற இடங்களில் ஏதாவது வலி ஏற்பட்டால், அந்த வலியை சரிசெய்ய நாம் உடலை ஏதேனும் ஒரு வித்தியாசமான நிலையில் நீண்ட நேரம் வைத்திருப்போம். மேலும் தற்காலிகமாக அந்த வலியை நீக்க மேற்கொண்ட அந்த நிலையை எப்போது வலி ஏற்பட்டாலும் பின்பற்றுவோம். ஆகவே அவ்வாறு வித்தியாசமான நிலையில் வைப்பது உடலின் பல பகுதியை பாதித்து, வலி அல்லது பிடிப்பு போன்வற்றை உண்டாக்குகிறது.

ஊட்டச்சத்து குறைவு

நமது தண்டுவடம் மற்றும் முதுகிற்கு போதுமான ஊட்டச்சத்தானது அவசியம். அப்படியிருந்தால் தான் தண்டுவடம் நன்கு வலிமை பெற்று நேராக இருக்கும். அதிலும் ஊட்டச்சத்துக்களில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்றவை குறைவாக இருந்தால், எலும்புகள் மற்றும் தசைகள் வலிமையிழந்து, பின் இறுதியில் அதிகமான வலியை உண்டாக்கும்.

பரம்பரை

ஒருவேளை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முதுகு வலி இருப்பின், அது பரம்பரையாக தொற்றிக் கொண்டிருக்கும். இவற்றால் கூட காரணமின்றி வலி ஏற்படும். ஆகவே அப்போது அந்த வலியைப் போக்குவதற்கு சரியான நிலையில் உட்கார்ந்து வந்தால், சரிசெய்யலாம்.

அதிக எடை

நாம் சரியான நிலையில் எப்போதும் இல்லாததற்கு காரணம் உடல் எடையும் தான். ஏனெனில் இதனால் அவர்களது வயிற்றில் அதிகமான அளவில் கொழுப்புகள் சேர்ந்து, தொப்பையாக வருவதோடு, அந்த தொப்பை நேராக உட்காரவிடாமல், முன்புறமாக இழுக்கிறது. இதனால் முதுகு வளைந்து, கூன் உண்டாகி, இறுதியில் வலியை அதிகமாக்குகிறது.

பழக்கம்

சில நேரங்களில் நடக்கும் நிலை கூட, முதுகு வலியை ஏற்படுத்தும். உதாரணமாக, நடக்கும் போது தலையை குனிந்து கொண்டு நடக்கும் போது, தன்னை அறியாமலே தோள்பட்டையும் வளையும் நிலை ஏற்படுகிறது. மேலும் ஏதாவது ஒரு எடையுள்ள பொருளை ஒரே பக்கத்தில் தூக்கும் போது அல்லது படுக்கும் போது சரியான நிலையில் படுக்காமல் இருப்பது போன்ற பழக்கங்கள் கூட முதுகு வலி வருதற்கு காரணமாகும்.

கம்ப்யூட்டர் வேலை

முதுகு வலி பெரும்பாலான கம்ப்யூட்டர் முன் வேலை பார்ப்பவர்களுக்கே ஏற்படுகிறது. ஏனெனில் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் போது, கழுத்து மற்றும் தலை சற்று முன்னரும், தோள்பட்டை சற்று வளைந்தும் தான் இருக்கும். இதனால் முதுகை நேராக வைக்காமல், நீண்ட நேரம் வளைந்தே வைத்திருப்பதால், அந்த நிலை பெரும் வலியை உண்டாக்கும்.


ஃபேஷன்

ஃபேஷன் என்ற பெயரில் வந்துள்ள உடைகள் மற்றும் செருப்புகள் கூட இந்த வகையான வலிக்கு முக்கிய காரணங்களாகும். அதிலும் பெண்களுக்கு பென்சில் ஹீல்ஸ், ஹை ஹீல்ஸ், டைட்டான ஆடைகள் என்றும், ஆண்களுக்கு என்றால் நல்ல எடையுள்ள பூட்ஸ், பெல்ட் என்றும் வந்து, அவர்களின் முதுகிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் தாங்க முடியாத வலியை கொடுக்கிறது.

குளிர்காலத்துல பாதங்களையும் சரியா பராமரிங்கள்

basic foot care tips winter குளிர்காலம் என்றாலே வறட்சி காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த காலத்தில் சருமம் வறட்சியடைந்து, வெடிப்புகளை ஏற்படுத்தும். அவ்வாறு வறட்சி ஏற்படும் இடங்களிலேயே பாதங்கள் தான் அதிகம் இந்த காலத்தில் பாதிக்கப்படும். அதில் பாதத்தில் ஏற்படும் பிரச்சனைகள் என்றால் பாத வெடிப்புகள், வறட்சியான பாதம் மற்றும் பாதங்கள் மென்மையிழந்து கடினமாக இருப்பது போன்றவைகள். எனவே எப்போதும் வீட்டில் இருக்கும் போது, குளிர்ச்சியில் இருந்துவிடுபட பூட்ஸ் அல்லது ஷூக்களை அணிந்து கொண்டால், குளிராமல் இருக்கும். இதை செய்தால் மட்டும் பாதத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்காது. மேலும் ஒருசில செயல்களையும் செய்தால் தான், எந்த ஒரு பிரச்சனையும் பாதங்களில் ஏற்படாமல் மென்மையோடு வைத்துக் கொள்ள முடியும்.
மேலும் பாதங்களுக்கு இவ்வளவு கவனம் செலுத்துவதன் நோக்கம், பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததே ஆகும். எனவே எந்த மாதியான பராமரிப்புகளை செய்தால் பாதங்கள் நன்கு ஆரோக்கியத்துடன், அழகாக இருக்கும் என்பதைப் பார்ப்போமா!!!
* குதிக்கால்களில் அழுக்கில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் எந்த ஒரு கிருமிகளும் பாதங்களை தாக்காமல் இருக்கும். இதற்கு தினமும் பாதங்களை வெதுவெதுப்பான நீரில், சிறிது நேரம் ஊற வைத்து, பின் அழுக்கை நீக்கும் ஃபூட் கிளீனரால் தேய்த்து, சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பாதங்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.
* பாதங்களில் உள்ள துளைகளில் இருக்கும் அழுக்குகளை தினமும் ஒரு முறையாவது ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் பாதத் துளைகளில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, இரத்த ஓட்டம் அதிகரித்து, பாதம் மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும். மேலும் ஸ்கரப் செய்தால், குதிகால்களில் இருக்கும் புண்கள் சரியாகும்.
* பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், விரைவில் வறட்சியடைந்துவிடும். இதனால் வெடிப்புகள் வரும். ஆகவே ஒரு நாளைக்கு இரண்டு முறை மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். அதுவும் குளித்த பின்னும், இரவில் தூங்கும் முன்பும் தடவி வர வேண்டும். அதிலும் பேபி ஆயில் அல்லது ஏதாவது பாடி ஆயிலை தடவ வேண்டும். இவற்றால் பாதங்கள் மென்மையாகவும், சுத்தமாகவும், வெடிப்புகளின்றியும் இருக்கும்.
* பாதங்களை சுத்தம் செய்யும் போது மறக்காமல் கால் விரல் நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். இது எந்த காலத்திற்கும் முக்கியமான ஒன்று. ஏனெனில் பொதுவாக கிருமிகள் கால்விரல் நகங்களில் அதிகம் தங்கும். ஆகவே மறக்காமல் பெடிக்யூர் செய்ய வேண்டும். அழகு நிலையம் செல்வதற்கு நேரமில்லையென்றால், வீட்டிலேயே வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து, அந்த கலவையில் கால்களை ஊற வைத்து, ஸ்கரப் செய்ய வேண்டும். ஸ்கரப் செய்த பின்னர், சுத்தமான நீரில் கழுவி, பின் ஏதேனும் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இதனால் அங்குள்ள இறந்த செல்கள் வெளியேறி, வறட்சியின்றி அழகாக காணப்படும்.
* குளிர்காலத்தில் எப்போதும் பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்ள சிறந்த வழியென்றால், அது கால்களில் எப்போதும் சாக்ஸ் அணிவது தான். அதிலும் மாய்ஸ்சுரைசரை பாதங்களில் தடவி, பிறகு சாக்ஸை முழு நாளும் அணிய வேண்டும். இதனால் குளிர்ச்சியில்லாமல் இருப்பதோடு, வறட்சியால் வெடிப்புகள் ஏற்படாமலும் இருக்கும்.
மேற்கூறியவாறு பாதங்களை பராமரித்து வந்தால், குளிர்காலத்தில் பாதங்கள் வறட்சியின்றி, மென்மையோடும், சுத்தமாகவும் இருக்கும். மேலும் உடல் வறட்சியை தடுக்க அதிகமான அளவில் தண்ணீரை தினமும் குடியுங்கள்.

இணையத்தை கலக்கும் மடோனாவின் Gangnam Style நடனம்

 பிரபல பாடகி மடோனா, தென் கொரிய பாடகரான PSY-உடன் இணைந்து Gangnam Style-லில் நடனமாடிய காணொளி இணையத்தில் வெளியாகி வெகு பிரபல்யம் அடைந்துள்ளது.


உஷார்... இண்டர்நெட்வாசிகளின் விவரங்களை கோருவதில் இந்தியாவுக்கு 2-வது இடமாம்!

சென்னை: இணையத்தில் உலாவரும் தனிநபர்களைப் பற்றிய தகவல்களைக் கோருவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இணைய பயன்பாட்டாளர்கள் 3467 பேர் பற்றிய தகவல்களைக் கோரி 2319 வேண்டுகோள்களை இந்தியா விடுத்திருக்கிறது. அமெரிக்காவோ இதுபோல் 7969 வேண்டுகோளை விடுத்திருக்கிறது. அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து பிரேசில் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த நாடு இண்டர்நெட்வாசிகள் பற்றி 1566 வேண்டுகோளை கொடுத்திருக்கிறது. மொத்தமாக இண்டர்நெட்வாசிகள் பற்றிய 20,938 வேண்டுகோள்கள் கூகுளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
பொதுவாக ஜிமெயில் அக்கவுண்ட், சாட்டிங் விவரங்கள், ஆர்குட் விவரங்களைப் பற்றியே அதிகம் கேட்கப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு இதுபோன்ற தகவல்களைக் கோரும் வேண்டுகோள்கள் அதிகரித்தே வருகிறது என்கிறது கூகுள் வட்டாரம்.
நீதிமன்ற உத்தரவுகள் மூலமும் இத்தகைய தகவல்களைக் கோருவது இந்தியாவில் அதிகரித்தே வருகிறது.இணையதளம் மூலமாக நீதிமன்றங்களுக்கு தகவல்களைத் தருவதும் அதிகரித்தே வருகிறது. நடப்பாண்டில் இதுபோல் 596தகவல்கள் நீதிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது 20 நீதிமன்ற உத்தரவுகள் மூலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் 2010 ஆம் ஆண்டு 125 விவரங்கள் இணையதளம் மூலம் நீதிமன்றங்களுக்குக் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப உஷாராக இருக்கிறதா நினைக்கிற இண்டர்நெட்வாசிகளே! எச்சரிக்கை!

ரத்த கண்ணீர் வடிக்கும் வினோத சிறுவன்

ரத்த கண்ணீர் வடிக்கும் வினோத சிறுவன்இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் விநோத நோயால் தாக்கப்பட்டு தினசரி ரத்தக்கண்ணீர் வடிக்கும் தன் மகனால் அவனது தாய் அவதிப்பட்டு வருகிறார்.
ஆந்திரா, பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணுக்கு பிரம்மையா (வயது 12) என்ற மகன் இருக்கிறான். இவனுக்கு 5 வயது இருக்கும் போதே மூக்கிலிருந்து ரத்தம் வடிந்தது. அதற்குரிய சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார்.
இருப்பினும் சில காலத்திற்கு பின்னர் அவனுடைய கண்ணிலிருந்து ரத்தம் வடியத் தொடங்கியது. இதற்காக தனது சொத்துக்களை எல்லாம் விற்று மகனுக்கு சிகிச்சை அளித்தார். பணம் பற்றாகுறையான போது ஊர் மக்கள் கோவில் கட்ட நன்கொடையாக வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை கொடுத்தனர்
இதை வைத்துக் கொண்டு வேலூர் சி.எம்.சி வைத்தியசாலையில் பிரம்மையாவை அனுமதித்த போது "பிளட் பிலேடு லெட் டிசாடர்" என்ற நோய் தாக்கியிருப்பதாகவும் இது கோடியில் ஒருவருக்கு மட்டுமே வருமெனவும் இதனால் கண் பார்வை பாதிக்கப்படுமென்றும் கூறியிருக்கின்றனர்.
மேலும் இந்நோயை குணப்படுத்த ரூ.10 லட்சம் வரை செலவாகுமெனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

ஒரு லிட்டர் சிறுநீரில் 6 மணி நேரத்திற்கு மின்சாரமா?

சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மாணவிகள் நான்கு பேர் சாதனை படைத்துள்ளனர். இவர்களின் இந்த வித்தியாசமான கண்டுபிடிப்பு நைஜீரியாவில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவைச் சேர்ந்த 14 வயதான டூரோ அய்னா அடிபோலா, அகின்டேல் அபியோலா, பேலகே வொலுவடோயின் மற்றும் 15 வயதான பெல்லோ எனியோலா ஆகிய மாணவிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
உலகத்தின் சில இடங்களில் மின்தடை பிரச்சினையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு ஆறுதல் தேடித் தரும் வகையில் இவர்களின் கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




இந்த காளையின் உலக சாதனையைக் கேட்டால் அதிர்ந்து போவீங்க!....

இந்த காளையின் உலக சாதனையைக் கேட்டால் அதிர்ந்து போவீங்க!....அயர்லாந்தின் வடக்கு பகுதியில் வளர்ந்து வரும் பிறந்து 17 மாதங்களே ஆன காளை ஒன்று உலகிலேயே உயரம் குறைந்த காளை என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரன் ஆகியுள்ளது. இதன் உயரமானது வெறும் 30 அங்குலமே ஆகும்.



2012ல் பிறக்கும் குழந்தைகளில் 3ல் 1 குழந்தை 100 வயது வாழும்: ஆய்வு முடிவு

லண்டன்: 2012ம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் 100 வயது வரை வாழ்வார்கள் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் 2012ல் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் 100 வயது வரை வாழ்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் 70 வயது வரை வேலை செய்வார்கள் என்றும் தங்கள் தாத்தா, பாட்டியை விட 8 ஆண்டுகள் தாமதமாகவே திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரின் வாழ்வை விட வித்தியாசமாக இருக்குமாம். நடப்பாண்டில் பிறந்த, பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர் 1983ல் பிறந்திருப்பார்கள் என்றும் அவர்களின் பெற்றோர் 1957ல் பிறந்திருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிறந்த குழந்தைகள் 31 வயதில் தான் முதல் குழந்தையை பெற்றுக்கொள்வார்களாம். மேலும் பலர் குழந்தையே பெற்றுக்கொள்ள மாட்டார்களாம். அப்படியே பெற்றுக் கொண்டாலும் ஒன்றோடு நிறுத்திக் கொள்வார்களாம். 20துகளில் அவர்களுக்கு நிதி தொடர்பான அழுத்தங்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 70 வயதில் தான் ரிட்டையர் ஆவார்களாம்.
2012 பிறந்த பிறக்கும் குழந்தைகளில் 39 சதவீத பெண்கள் குழந்தைகளும், 32 சதவீத ஆண் குழந்தைகளும் 100வது பிறந்தநாளைக் கொண்டாடுவார்கள். அதாவது ஆண்களை விட அதிகமான பெண்கள் 100 வயதைத் தொடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

பலாத்கார புகாரில் சிக்கிய பிங்கி பிராம்னிக் ஆண் தான்...! கற்பழிப்பு வழக்குப் பதிவு!!

 Medical Test Confirms Pinki Pramani Is Male கொல்கத்தா: பாலியல் பலாத்கார புகாரில் சிக்கி கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள பிங்கி பிராம்னிக் ஆண் என்பது மருத்துவ பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் மீது மேற்கு வங்க போலீஸார் கற்பழிப்பு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
தடகள வீராங்கனையாக அறியப்பட்டவர் பிங்கி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இவர் மீது கடந்த ஜூன் மாதம் அனாமிகா ஆச்சார்யா என்ற பெண் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில் பிங்கி ஒரு ஆண். அவரும் நானும் பல வருடமாக சேர்ந்து வாழ்ந்து வருகிறோம். என்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு தற்போது மோசடி செய்து விட்டார் பிங்கி. என்னையும் அடித்துச் சித்திரவதை செய்தார். பலமுறை என்னை வற்புறுத்தி அவர் உறவு கொண்டார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். சிறைக்கும் அவர் அனுப்பப்பட்டார். அவர் ஆணா, பெண்ணா என்பதை அறிய மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.
சோதனைகளின் முதல் கட்டத்தில் அவர் ஆணாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. இதுகுறித்து பிங்கி வேதனையும், ஏமாற்றமும் வெளியிட்டார். இதையடுத்து மேலும் ஒரு சோதனைக்கு காவல்துறை உத்தரவிட்டது.
அதன்படி கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனை டாக்டர்கள் குழு பிங்கியிடம் சோதனை நடத்தினர். அதில், பாலின ரீதியாக பிங்கி ஒரு ஆண்தான் என்பதை உறுதி செய்து அறிக்கை அளித்துள்ளனர்.
இதையடுத்து பிங்கி மீது கற்பழிப்பு மற்றும் மோசடிப் புகாரை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
தடகள வீராங்கனையாக அறியப்பட்ட பிங்கி தற்போது ஒரு ஆண் என்று மருத்துவப் பரிசோதனை உறுதி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிங்கி மீண்டும் கைது செய்யப்படக் கூடும் என்ற எதிர்பார்பபையும் இது ஏற்படுத்தியுள்ளது.
பிங்கி பிராம்னிக் 2006-ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் பிரிவு தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். இவர் ஆண் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அவரது பதக்கம் பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகி 88 ஆண்டுகளுக்கு பின்பு புகைப்படம் எடுத்து கொண்ட தம்பதி


திருமணமாகி 88 ஆண்டுகளுக்கு பின்பு சீனாவை சேர்ந்த தம்பதியர் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். சீனாவின் சிசுவான் மாகாணத்தின் நான்சோங் நகரை சேர்ந்தவர் வூ சோங்கான்(வயது 101), இவரது மனைவி வூ சோன்ஷி(வயது 103).
இவர்களுக்கு கடந்த 1924ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்த காலத்தில்  கேமார  பற்றி தெரியாத காரணத்தால், இவர்கள் புகைப்படம் எடுத்து கொள்ளவில்லை.
இந்நிலையில் புகைப்படம் எடுத்து கொள்ள பேரப்பிள்ளைகள் ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து இருவரும் திருமண உடை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டனர்.   

ரூ.13 கோடி மதிப்புள்ள உடையணிந்து நடை போட்ட பிரேசில் மாடல் அழகி


நியூயோர்க்கில் நடந்த விக்டோரியாஸ் சீக்ரெட் ஏஞ்சல் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட பிரேசில் நாட்டு மாடல் அழகியான அலெசான்ட்ரா அம்ப்ரோசியா ரூ. 13.59 கோடி மதிப்புள்ள பேன்டசி பிராவை அணிந்து வந்து அழகு நடை போட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
அதிக கவர்ச்சிகரமான அந்த விக்டோரியா சீக்ரெட் ஏஞ்சல் பேன்டசி அனைவரையும் நிலைகுலைய வைத்த இந்த பிரா வைரம், ரூபி, சபையர், அமெதிஸ்ட் என பலவகையான கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5200 கற்கள் இதில் பதிக்கப்பட்டுள்ளதாம்.
பிரா மட்டுமல்ல, அதை அணிந்து வந்த அலெசான்ட்ராவும் படு அழகானவர் தான். 31 வயதான அவருக்கு கடந்த மே மாதம் தான் குழந்தை பிறந்தது. இருப்பினும் தனது பழைய கவர்ச்சியிலே காணப்படுகிறார்.
இந்த காஸ்ட்லியான பிராவை அணிந்து வந்ததைப் பெருமையாக கூறினார் அலெசான்ட்ரா. கடந்த ஆண்டு இந்த பிராவை  ஆஸ்திரேலியாவின் மிராண்டா அணிந்து வந்தார் என்பது நினைவிருக்கலாம்.



இவ்வளவு பயங்கரமான திருவிழா


இவ்வளவு  பயங்கரமான  திருவிழா