சென்னை: சென்னை மாநகரில் மழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் அவரசத் தேவைக்கு விரைவதற்காக மண்டல அலுவலர்களை தயார் நிலையில் வைத்துள்ளது சென்னை மாநகராட்சி.
சென்னை மாநகரில் மழையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளக்காடாகியுள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. போக்குவரத்து பாதிப்பு, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது என மக்கள் ஸ்தம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் மழை வெள்ளப் பாதிப்புக்கு தொடர்பு கொள்வதற்காக மண்டல வாரியாக அலுவலர்களின் செல்போன் எண்களை மாநகராட்சி வெளியி்ட்டுள்ளது. இவர்களைத் தொடர்பு கொண்டு தெரிவித்தால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
15 மண்டலங்களுக்கும் மண்டல வாரியாக செல்போன் எண்கள் விவரம்
1-வது மண்டலம் - 9445190001
2-வது மண்டலம் - 9445190002
3-வது மண்டலம் - 9445190003
4-வது மண்டலம் - 9445190004
5-வது மண்டலம் - 9445190005
6-வது மண்டலம் - 9445190006
7-வது மண்டலம் - 9445190007
8-வது மண்டலம் - 9445190008
9-வது மண்டலம் - 9445190009
10-வது மண்டலம் - 9445190010
11-வது மண்டலம் - 9445190011
12-வது மண்டலம் - 9445190012
13-வது மண்டலம் - 9445190013
14-வது மண்டலம் - 9445190014
15- வது மண்டலம் - 9445190015.