1 லட்சம் பேருடன் உறவு கொள்ளக் கிளம்பிய பெண் 'இலக்கை' எட்ட 20 வருஷமாகும்!

வார்சா: 1 லட்சம் பேருடன் உறவு கொள்ளப் போவதாக தனது காதலி கூறியுள்ளது குறித்து போலந்து பெண்ணின் காதலர் இதில் என்ன விசேஷம் இருக்கிறது என்று படு கேஷுவலாக கருத்து தெரிவித்துள்ளார். 

அனியா லிசெவ்ஸ்கா என்ற அந்தப் பெண் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 1 லட்சம் ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதற்காக செக்ஸ் யாத்திரையைத் தொடங்கியுள்ளார். 

இந்தப் பெண்ணுக்கு தனியாக ஒரு காதலரும் இருக்கிறார். அவரோ, தனது காதலியின் செயல் தனக்கு அதிருப்தியைத் தரவில்லை என்றும் இதைப் பெரிதாக பேச என்ன இருக்கிறது என்றும் கேஷுவலாக கருத்து கூறுகிறார். தான் தனது காதலியை கைவிடப் போவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.


21 வயதுதான் ஆகிறது அனியாவுக்கு. ஆனால் இவரது ஆசையோ.. பேராசையாக உள்ளது. அதாவது 1 லட்சம் ஆண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அது.


தலைநகர் வார்சாவிலிருந்து தனது செக்ஸ் யாத்திரையைத் தொடங்கியுள்ள இப்பெண், இதுவரை 284 பேருடன் உறவை முடித்துள்ளாராம்.


இந்தப் பெண் குறித்த மேலும் சில விவரங்கள் தெரிய வந்துள்ளன. அதாவது இவருக்கு ஒரு காதலர் இருக்கிறார். அவருக்கும் 21 வயதுதான் ஆகிறது. தனது காதலியின் செக்ஸ் யாத்திரை குறித்து இவர் அலட்டிக்கவே இல்லையாம்.


இதுகுறித்து அவர் சொல்லும்போது இது ஒரு பெரிய மேட்டரே கிடையாது. நான் இதை பெரிய விஷயமாகவே கருதவில்லை. எந்த ஆச்சரியமும் எனக்கு வரவில்லை. அவரது விருப்பம் அது. நிறைவேற்றுகிறார்.. நான் உடன் இருக்கிறேன் என்கிறார் கூலாக.


அனியாவின் ஆசை என்னவென்றால் போலந்து ஆண்கள் மட்டும் அவருக்குப் போதாதாம். ஐரோப்பிய ஆண்கள் வேண்டுமாம், உலகம் பூராவும் ஆண்களுடன் பழக வேண்டுமாம்.

வார இறுதி நாட்களில் மட்டுமே தனது செக்ஸ் வேட்டையை நடத்துகிறாராம் அனியா. இதற்காக பேஸ்புக்கையும், இணையதளத்தையும் அவர் தொடங்கியுள்ளார்.


தான் செக்ஸில் ஈடுபடும் ஆணுக்கு அதிகபட்சம் 20 நிமிடங்கள்தான் கொடுப்பாராம் அனியா. அதுக்குள்ளேயே வேலையை முடித்து விட வேண்டுமாம்.

இவரது கணக்குப்படி பார்த்தால், தூக்கம், சாப்பாடு இல்லாமல் தொடர்ந்து செக்ஸில் ஈடுபட்டால் ஒரு லட்சம் பேர் என்ற இலக்கைத் தொட இவருக்கு 3.8 வருடங்கள் பிடிக்குமாம்.

அதேசமயம், வார இறுதி நாட்களில் மட்டுமே இவர் செக்ஸ் வைத்துக் கொள்வதால் 1 லட்சம் பேரை அடைந்து முடிக்க இவருக்கு 20 வருடங்கள் பிடிக்குமாம்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: