25 ஆண்டுகளுக்குப் பிறகு வட இலங்கையில் இன்று தேர்தல்.. விறு விறு வாக்குப்பதிவு!

25 ஆண்டுகளுக்குப் பிறகு வட இலங்கையில் இன்று தேர்தல்.. விறு விறு வாக்குப்பதிவு!கிளிநொச்சி: 25 ஆண்டுகளுக்கு பிறகு, இலங்கை தமிழர் பகுதியில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர், கடந்த 2009-ம் ஆண்டு ஒரு பெரும் இனப்படுகொலையுடன் முடிந்தது. அதன்பிறகு, இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில் முதல் முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு வட இலங்கையில் இன்று தேர்தல்.. விறு விறு வாக்குப்பதிவு!

அத்துடன் வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. 

3 மாகாணங்களிலும் மொத்தம் 43 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 24 ஆயிரம் போலீசார் உள்பட 40 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

மிக அதிக அளவில், யாழ்ப்பாணத்தில் 7 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. இந்த கட்சிக்கு முக்கிய போட்டியாக, அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. 

தமிழ் தேசிய கூட்டணியின் தலைமை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாணத்தில் உள்ள 36 தொகுதிகளில் மொத்தம் 906 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது ராணுவத்தினர் மிகவும் கெடுபிடியில் ஈடுபட்டு வருவதாக, தமிழர் கட்சி சார்பில் புகார் கூறப்பட்டு வந்தது. 

சில தொகுதிகளில் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் ராணுவத்தினர் பிரசாரம் செய்தனர். ராணுவமே சில வேட்பாளர்களைக் களமிறக்கியும் உள்ளது.

 இந்திய ஓட்டுப்பெட்டி

இலங்கையில் மரத்தினால் ஆன ஓட்டுப்பெட்டிகளை தேர்தலுக்கு பயன்படுத்துவது வழக்கம். இந்த தேர்தலில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓட்டுப்பெட்டிகள், பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டது.

25 ஆண்டுகளுக்கு பிறகு...

வரலாற்றுச் சிறப்பு மிக்க வடக்கு மாகாண தேர்தல், 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. கடந்த 1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி, மாகாண கவுன்சில்கள் உருவாக்கப்பட்டன. அதன்பிறகு முதன் முதலில் 1988-ம் ஆண்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. 

அப்போது, தனித் தமிழ் ஈழம் கோரி, விடுதலைப்புலிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் தீவிரம் அடைந்திருந்ததால் ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டுமே தேர்தலில் போட்டியிட்டது

எச்.ஐ.வி.,யை அழிக்க புதிய மருந்து: அமெரிக்க ஆய்வாளர்கள் சாதனை

வாஷிங்டன்: அமெரிக்க ஆய்வாளர்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும், புதிய மருந்துப் பொருளை, கண்டுபிடித்து உள்ளனர்.

எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான, எச்.ஐ.வி., வைரசை அழிப்பதில், மருத்துவர்களும், மருந்துப் பொருள் தயாரிப்பாளர்களும், இன்னும் தங்கள் ஆய்வில், 100 சதவீத வெற்றியை அடையவில்லை என்றே கூறலாம். அமெரிக்காவில் உள்ள, மின்னிசோட்டா பல்கலைக்கழக மருந்துப்பொருள் தயாரிப்புத் துறை ஆய்வாளர்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும் மருந்துப் பொருளைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் ஆராய்ச்சியின் பலனாக, எச்.ஐ.வி.,யைக் கட்டுப்படுத்தும், இரு திரவ மருந்துகளின் கலவையில் புதிய மருந்துப் பொருளைக் கண்டுபிடித்து உள்ளனர்.

ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளதாவது: புற்று நோயைக் கட்டுப்படுத்த, "டெசிடேபைன், கெம்சிடேபைன்' என்ற இரு திரவ மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துப் பொருட்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளன. இந்த மருந்துகள், நோயாளிகளுக்கு, ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இதனால், பெரும் நேர விரயமும், பொருட் செலவும் ஏற்படுகிறது. இந்த சிகிச்சை பெறும் நோயாளிகள், சிகிச்சை முடியும் வரை, எவ்வித வேலையிலும் ஈடுபட முடியாமல், படுக்கையிலேயே இருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால், இந்த இரு மருந்துப் பொருட்களையும் ஒன்றாக்கி, மாத்திரை வடிவில் புதிய மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், நோயாளிகளின், பொருள் மற்றும் நேரம் மிச்சப்படுத்தப்படும். எனினும், முதற்கட்ட சோதனைகளுக்குப் பின்னரே, நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படும். புதிதாக உருவாக்கப் பட்டுள்ள மருந்து, சோதனையில் வெற்றி பெற்றால், எய்ட்ஸ் நோய்க்கான மருந்துப் பொருள் தயாரிக்கும் ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல் கல்லாய் அமையும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அம்மா குடிநீர் .. தொடங்கி வைத்தார் ஜெயலலிதா

சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் அம்மா குடிநீர் அறிமுகமாகியுள்ளது. இந்தத் திட்டம் மற்றும் குடிநீர் விற்பனையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். 

விலையில்லா அரிசி, குறைந்த விலையில் பருப்பு, பாமாயில் திட்டம், அம்மா உணவகம் ஆகியவற்றின் வரிசையில் தற்போது அம்மா குடிநீரும் இணைகிறது. 

இதேபோல மலிவு விலை காய்கறித் திட்டமும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது நினைவிருக்கலாம்.

மாநகராட்சிகளில் அம்மா உணவகம் 

தமிழக மாநகராட்சிகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு குறைந்த விலையில் இட்லி, சாம்பார் சாதம், தயிர்ச் சாதம், கரிவேப்பிலை சாதம் உள்ளிட்டவை விற்கப்படுகின்றன.

மலிவு விலை காய்கறிக் கடைகள் 

அதேபோல காய்கறி விலைகளை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31 ‘பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் அதாவது மலிவு விலை காய்கறி கடைகளையும் முதல்வர் தொடங்கி வைத்து அவையும் சிறப்பாக செயல்படுகின்றன.

அம்மா குடிநீர்

இந்த வரிசையில் தற்போது அம்மா குடிநீர் இணைகிறது. ஏழை, எளிய மக்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில், அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையங்களை அமைக்க கடந்த ஜூன் 21-ந்தேதி முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இன்று முதல் தொடக்கம்

அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டு, விற்பனையும் அன்றைய தினமே தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று முதல் இத்திட்டம் தொடங்குகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நிதிச்சுமையை ஓரளவு குறைக்கவும், அவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவும் வழிவகுக்கும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று அம்மா குடிநீர் திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். வீடியோ கான்பரன்சிங் மூலமாக அவர் இதைத் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்திற்காக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா குடிநீர் உற்பத்தி நிலையத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். பின்னர் அம்மா குடிநீர் முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.  

10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் 

இந்த நிலையத்தில், நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் குடிநீர் அம்மா குடிநீர் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், சென்னை மாநகரில் உள்ள அனைத்து பஸ் நிலையங்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள பஸ் நிலையங்களிலும் ஒரு லிட்டர் பாட்டில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு நீண்ட தூரம் செல்லும் அரசு பஸ்களிலும் பயணிகளுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

உலகின் வயதான மனிதரான ஷார்ட்டி 112வது வயதில் நியூயார்க்கில் மரணம்

உலகின் வயதான மனிதரான ஷார்ட்டி 112வது வயதில் நியூயார்க்கில் மரணம் நியூயார்க்: உலகின் வயதான மனிதரான ஷார்ட்டி தனது 112வது வயதில் நியூயார்க்கில் மரணம் அடைந்தார். 

உலகின் வயதான மனிதர் ஸ்பெயின் வம்சாவளியைச் சேர்ந்த சலுஸ்டியானோ சான்சேஸ்-பிளாஸ்கெஸ்(112). அவரின் பட்டபெயர் ஷார்ட்டி. அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து வந்தார். அவர் கடந்த 1901ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி ஸ்பெயினில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தார். அவர் தனது நண்பர்களுடன் கடந்த 1918ம் ஆண்டு கியூபா சென்றார். அங்குள்ள வயல்களில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு அவர் எல்லிஸ் தீவு வழியாக அமெரிக்காவுக்கு வந்தார். 

அவர் லின்ச் மற்றும் கென்டுக்கி ஆகிய இடங்களில் உள்ள நிலக்கரி சுரங்களில் வேலை செய்தார். இறுதியாக அவர் நியூயார்க்கில் உள்ள நயாக்ரா நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று அங்கு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த 1934ம் ஆண்டு அவர் பேர்ல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

உலகின் வயதான மனிதராக கருதப்பட்ட ஜிரோமோன் கிமுரா கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி மரணம் அடைந்ததையடுத்து ஷார்ட்டி உலகின் வயதான மனிதர் என்ற பெருமையை அடைந்தார். 

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஷார்ட்டி நியூயார்க் அருகே உள்ள கிராண்ட் தீவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். 

ஷார்ட்டி திருமணம் மற்றும் கிராமத்து கொண்டாட்டங்களில் இசைக் கருவிகளை வாசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், சாலைகள் வெள்ளக்காடாகியுள்ளதாலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

முதல்வர் ஜெயலலிதா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். 

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகர கடந்த 2 நாட்களாக வட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பிளஸ் டூ காலாண்டுத் தேர்வு மட்டும் நேற்று தொடங்கியது. 

இந்தநிலையில் மழை நீடிப்பதாலும், 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதாலும் மழை நிலவரம் குறித்து முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் இறுதியில் இன்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளை மூட அவர் உத்தரவிட்டார். 

இன்று நடைபெறவிருந்த காலாண்டுத் தேர்வுகளை கடைசித் தேர்வுக்குப் பின்னர் நடத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னைவாசிகளே.. மழையால் பாதிப்பா.. இந்த எண்களுக்குப் போன் செய்யுங்கள்

சென்னைவாசிகளே.. மழையால் பாதிப்பா.. இந்த எண்களுக்குப் போன் செய்யுங்கள்சென்னை: சென்னை மாநகரில் மழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் அவரசத் தேவைக்கு விரைவதற்காக மண்டல அலுவலர்களை தயார் நிலையில் வைத்துள்ளது சென்னை மாநகராட்சி. 

சென்னை மாநகரில் மழையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளக்காடாகியுள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. போக்குவரத்து பாதிப்பு, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது என மக்கள் ஸ்தம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் மழை வெள்ளப் பாதிப்புக்கு தொடர்பு கொள்வதற்காக மண்டல வாரியாக அலுவலர்களின் செல்போன் எண்களை மாநகராட்சி வெளியி்ட்டுள்ளது. இவர்களைத் தொடர்பு கொண்டு தெரிவித்தால் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

15 மண்டலங்களுக்கும் மண்டல வாரியாக செல்போன் எண்கள் விவரம் 
1-வது மண்டலம் - 9445190001 
2-வது மண்டலம் - 9445190002 
3-வது மண்டலம் - 9445190003 
4-வது மண்டலம் - 9445190004 
5-வது மண்டலம் - 9445190005 
6-வது மண்டலம் - 9445190006 
7-வது மண்டலம் - 9445190007 
8-வது மண்டலம் - 9445190008 
9-வது மண்டலம் - 9445190009 
10-வது மண்டலம் - 9445190010 
11-வது மண்டலம் - 9445190011 
12-வது மண்டலம் - 9445190012 
13-வது மண்டலம் - 9445190013 
14-வது மண்டலம் - 9445190014 
15- வது மண்டலம் - 9445190015.

சிரியா மீது ‘3 நாள் அதிரடி ஏவுகணைத் தாக்குதல்’ நடத்த அமெரிக்கா திட்டம்

வாஷிங்டன்: சிரியா மீது 3 நாட்கள் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 

இந்த மூன்று நாட்களிலும் அதி தீவிரமான தாக்குதலை சிரியா மீது நடத்த அமெரிக்க படைகள் தயாராகி வருகின்றனவாம். 

இந்த செய்தியை லாஸ் ஏஞ்செலஸ் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. 


ஏவுகணைத் தாக்குதலே இதில் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறதாம். பலமுனைகளிலிருந்து இத்தாக்குதலை நடத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாம்.


முதலில் 50 இலக்குகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கூடுதல் இலக்குகளை சேர்க்குமாறு வெள்ளை மாளிகை நிர்வாகம் அமெரிக்க ராணுவத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாம்.

சிரியப் படையினர் எந்தவிதத்திலும் சுதாரிக்காத வகையில் அதிரடியாக தாக்குதலை நடத்தி முடிக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளதாம்.


அமெரிக்க விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்களை பெருமளவில் பயன்படுத்தவும், ஐந்து அமெரிக்க ஏவுகணை அழிப்பு விமானங்களும் பயன்படுத்தப்படவுள்ளனவாம்.


குரூஸ் ஏவுகணைகள், வானிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளையும் பெருமளவில் பயன்படுத்தவுள்ளதாம் அமெரிக்கா.


செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் நிமிட்ஸ் போர்க் கப்பல் முக்கியத் தாக்குதலை நிகழ்த்தவுள்ளதாக தெரிகிறது.

72 மணி நேரத்தில் அதாவது 3 நாட்களுக்குள் அத்தனை தாக்குதலையும் முடித்து சிரியாவை அதிபர் அஸ்ஸாத்தின் பிடியிலிருந்து விடுவிக்கும் வகையில் தாக்குதல் இருக்கும் என்று அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

‘இன்ஸ்டாகிராமில்’ இணைந்த நாசா: அட்டகாசமான நிலவுப் படங்களை வெளியிட்டது

வாஷிங்டன்: இன்ஸ்டாகிராமில் அமெரிக்காவின் நாசா அதிரடியாக இணைந்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே நிலவின் அட்டகாசமான படங்களை அது வெளியிட்டு பிரமிக்க வைத்துள்ளது. 

இந்த நிலவுப் படங்களுக்கு அமோகமான ஆதரவும் கிடைத்துள்ளது. இதுவரை நாசாவின் இன்ஸ்டாகிராமுக்கு 56,374 ஆதரவாளர்கள் கிடைத்துள்ளனர். 

இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள நாசா அதில் வெளியிட்டுள்ள நிலவின் படங்கள் வியப்பின் உச்சத்திற்குக் கொண்டு செல்வதாக அமைந்துள்ளது.


முதலில் 2 படங்களை வெளியிட்டது நாசா. அதில் நிலாவின் பிரமாண்டம் அட்டகாசமாக இருக்கிறது. நிலவின் கிரே நிற பரப்பும், அதன் தரைத்தளமும் தெள்ளத் தெளிவாக தெரிகின்றன.


2வது படத்தில் பூமி படு அழகான கோணத்தில் காட்சி தருகிறது. மேலும் பல புகைப்படங்கள் வெளியாகவுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.


நாசாவின் பல்வேறு கண்டுபிடிப்புகளும், சாதனைகளும், அரிய புகைப்படங்களும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்படும் என்று நாசா பத்திரிக்கைத் தொடர்பு செய்தித் தொர்பாளர் லாரன் வோர்லி கூறியுள்ளார்.


வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புகைப்படங்கள், பூமி குறித்த புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் இதில் பதிவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


நித்தியானந்தாவின் சிஷ்யையை மணக்கிறார் அவரது அண்ணன்!

நித்தியானந்தாவின் சிஷ்யையை மணக்கிறார் அவரது அண்ணன்!பெங்களூர்: நித்தியானந்தாவின் சிஷ்யை என்று கூறப்படும் மலேசியாவைச் சேர்ந்த நித்திய கீதானந்தா என்பவருக்கும், நித்தியானந்தாவின் உடன் பிறந்த அண்ணன் செந்தில்குமாருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாம். 

நித்தியானந்தாவுக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி உண்டு. அண்ணன் பெயர் செந்தில்குமார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 40 வயதாகிறது. நித்தியானந்தாவின் தந்தை இறந்ததும், தனது தாயார் மற்றும் தம்பியை தன்னுடனேயே அழைத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 

அண்ணன் செந்தில்குமார் மட்டும் திருவண்ணாமலையில் தொடர்ந்து தங்கியுள்ளார். இந்த நிலையில் அவருக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. நித்தியானந்தாவின் சிஷ்யையானா மலேசியாவைச் சேர்ந்த சுபத்ரா என்கிற நித்திய கீதானந்தாவை மணக்கிறாராம் செந்தில்குமார். இவர்களது திருமணம் செப்டம்பர் 16ம் தேதி பிடதி ஆசிரமத்தில் நடைபெறவுள்ளதாம். 

திருமணத்திற்கா அழைப்பிதழில், நித்தியானந்தர் ஆண்டு 36ஆம் வருடம் ஆவணி மாதம் 31ந்தேதி திருமணம் என்று போடப்பட்டுள்ளது. மேலும், அவதார புருஷர் ஜகத்குரு பகவான் ஸ்ரீ ல ஸ்ரீ பரமஹம்ச நித்யானந்த ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் திருவருளால் நடைபெறவுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேலத்தைக் கலக்கிய பெரிய கொல்லப்பட்டி மைதிலிக்கு குண்டாஸ்...!

சேலம்: சேலம் மாவட்டத்தையே தனது திருட்டுக்களால் கலக்கி வந்த மைதிலி என்ற 38 வயதுப் பெண் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்கிறது. 

பெரியகொல்லப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மைதிலி. 38 வயதாகும் இவர் பெரிய கைகாரி. அதாவது வீடுகளுக்குள் புகுந்து திருடுவதில் செம கில்லாடி. 

குறி வைத்து வீடு புகுவது மைதிலியின் ஸ்டைலாகும். அதிலும் திறந்திருக்கும் வீடுகளுக்குள்தான் இவர் தில்லா நுழைவார். சேலம் மாவட்டத்தில் ஏகப்பட்ட திருட்டு வழக்குகளில் சிக்கியுள்ளார் மைதிலி. தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

மைதிலி சேலம் போலீஸாரை படாதாபாடு படுத்தியுள்ளார். முன்பு ஒருமுரை சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அரை நிர்வாண கோலத்தில் நின்று பெரும் அக்கப்போரை செய்தவர் இந்த மைதிலி. மைதிலியை ஒருமுறை பார்க்க அவரது தாயார் சாந்தி வந்திருந்தார். அப்போது ஹான்ஸ், பீடா, புகையிலை, பான்பராக் போன்றவற்றைக் கொண்டு வந்து கொடுத்தார். இதை சிறைக் காவலர்கள் பார்த்து விட்டனர். 

இதையடுத்து சாந்தி கைது செய்யப்ப்டடார். இந்த நிலையில், ராசிபுரம் கோர்ட்டுக்கு மைதிலியைக் கொண்டு செல்ல போலீஸார் வெளியே அழைத்து வந்தனர். அப்போது சிறைக்கு வெளியே நின்று கொண்ட மைதிலி, தனது சேலையைக் கழற்றி ஜாக்கெட், உள் பாவாடையுடன் நின்று கொண்டு, சத்தம் போட ஆரம்பித்தார். 

சிறைக்குள் பெண் கைதிகளை சித்ரவதை செய்கின்றனர். பார்வையாளர்களிடம் லஞ்சமாக பணம் வாங்குகின்றனர். கேள்வி கேட்கும் கைதிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் போட்ட சத்தத்தால் கூட்டம் கூடி விட்டது. ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். பின்னர் போலீஸார் அவரை சமாதானப்படுத்தி கூட்டிச் சென்றனர். 

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரச்சினையைக் கிளப்பியுள்ளார் மைதிலி. இவரது தம்பி முத்து என்பவரும் திருட்டு வழக்குகளில் தொடர்பு உடையவர். இவர் மீது சேலம் கோர்ட்டில் வழக்கு உள்ளது. கோர்ட் விசாரணைக்கு இவர் ஆஜராகாததால் இவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டு இருந்தார். 

இதனால் இவரை போலீசார் தேடிவந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பும் மைதிலியின் வீட்டிற்கு சென்று முத்து உள்ளாரா என போலீசார் விசாரித்து வந்தனர். இதை அறிந்த மைதிலி ஆத்திரம் அடைந்தார். 

இந்த நிலையில், நேற்று இவர் சேலம் எண் 4 மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டு வளாகத்தில் அமர வைக்கப்பட்டு இருந்தார். அப்போது அங்கு சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் ஏட்டு ரவி வந்தார். 

ரவியைப் பார்த்ததும் ஆத்திரத்துடன், படு ஆபாசமாக அவரைத் திட்டித் தீர்த்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை அருகில் இருந்த போலீஸார் அமைதிப்படுத்தினர். ஆனாலும் விடாத மைதிலி, என் வீட்டுக்கு யாராவது மறுபடியும் போனீங்கன்னா அத்தனை பேரையும் கொன்று விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். 

இந்த நிலையில் ஏட்டு ரவி தனக்கு மைதிலி கொலை மிரட்டல் விடுத்ததாக அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஏற்கனவே மைதிலி மீது 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனராம்.

பேய் பிடித்ததாக கூறி மனைவியை நிர்வாணமாக அடைத்து வைத்த கணவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேய் பிடித்ததாக இளம்பெண்ணை நிர்வாணமாக்கி தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 3 பேரை திருப்பத்தூர் போலீசார் கைது செய்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அங்கி நாயனபள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகள் நதியா (24). இவருக்கும், திருப்பத்தூர் அடுத்த மொளகரம்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி சந்தானத்துக்கும் (31) கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

இந்நிலையில், நதியாவிடம் வரதட்சணை கேட்டு சந்தானம், அவரது தந்தை ராஜேந்திரன், தாய் கவுரி (50), தங்கை சுமதி (25), ராஜேந்திரனின் அண்ணன் பூமிநாதன் (60) உள்ளிட்டோர் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த மாதம் நதியா பெற்றோருக்கும், சந்தானம் பெற்றோருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த சந்தானம் குடும்பத்தினர், நதியாவுக்கு பேய் பிடித்ததாக கூறி அவரை நிர்வாணப்படுத்தி ஒரு அறையில் அடைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. சிறிதுநேரம் நதியாவை வெளியே விட்டு விட்டு பின்னர் மீண்டும் அறையில் வைத்து பூட்டி விடுவார்களாம். 

கடந்த 2ம் தேதி இரவு அறையில் தூங்கிக் கொண்டிருந்த நதியாவின் முகத்தில் சந்தானம் தலையணையை வைத்து அழுத்தி கொல்ல முயன்றுள்ளார். அவர்கள் பிடியில் இருந்து தப்பிய நதியா நேற்று திருப்பத்தூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தானம், ராஜேந்திரன், கவுரி ஆகியோரை கைது செய்து திருப்பத்தூர் 2ம் வகுப்பு மாஜிஸ்திரேட் ராதாகிருஷ்ணன் முன் ஆஜர்படுத்தினர். 

இதனையடுத்து சந்தானம், ராஜேந்திரனை திருப்பத்தூர் கிளைச் சிறையிலும், கவுரியை வேலூர் மத்திய சிறையிலும் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பூமிநாதன், சந்தானத்தின் தங்கை சுமதி ஆகியோரை தேடி வருகின்றனர்.

விஜய், ஷங்கரை அடுத்து 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் வாங்கும் சந்தானம்

விஜய், ஷங்கரை அடுத்து 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் வாங்கும் சந்தானம்சென்னை: சந்தானம் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கவிருக்கிறாராம். 

இன்றைய தேதியில் அதிகம் கிராக்கி உள்ள காமெடி நடிகர் என்றால் அது சந்தானம் தான். சந்தானம் மீது கோலிவுட் ஹீரோக்கள் பலர் கடுப்பில் உள்ளார்களாம். நாம் ஒரு படத்தில் சில மாதங்கள் நடித்து வாங்கும் சம்பளத்தை மனிதர் 10 நாட்கள் நடித்து வாங்கிவிடுகிறாரே என்று ஹீரோக்கள் காட்டமாக உள்ளார்களாம். 

இப்பொழுது அவர்கள் வயிறு ரியும்படி சந்தானம் ஒன்றை செய்துள்ளார். வேறு ஒன்றும் இல்லை ரூ.2 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குகிறாராம். தற்போது கோலிவுட்டில் விஜய் மற்றும் இயக்குனர் ஷங்கரிடம் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் உள்ளது.

முன்பு பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஆர்டர் கொடுத்தபோது அதை ஓட்ட உங்களுக்கு தகுதி இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துவிட்டது. ஆனால் சந்தானம் தமிழக மக்களை சிரிக்க வைக்கிறார் என்ற தகுதியை வைத்து அவருக்கு காரை விற்கிறதாம். 

தமிழகத்தில் ரூ.2 கோடிக்கு கார் வாங்கும் ஒரே காமெடி நடிகர் சந்தானம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் மூளைச் சாவு அடைந்த சாப்ட்வேர் எஞ்ஜினியரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம்!

கோவை: கோவையில் சாலைவிபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சாப்ட்வேர் எஞ்ஜினியரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. 

கோவையை அடுத்த சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் மருதாசலம். பெயிண்டர். இவரது மனைவி கலாவதி. இவர்களது ஒரே மகன் ராஜகோபால் (வயது 23). 

கோவைப்புதூரில் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு நண்பர் மனோஜ் என்பவருடன் ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு சென்றார். 

சாமி தரிசனம் முடிந்ததும் இருவரும் மோட்டார் சைக்கிளில் சரவணம்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது மோதியது. 

இந்த விபத்தில் ராஜ கோபாலும், மனோஜூம் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் ராஜகோபாலை காப்பாற்ற முடியவில்லை. 

நேற்று காலை 10 மணி அளவில் ராஜகோபாலுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யும்படி டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர். பெற்றோர்கள் கனத்த இதயத்துடன் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தனர். 

அதன்பேரில் ராஜ கோபாலின் உடலில் இருந்து 2 சீறுநீரகங்கள், கல்லீரல், 4 இருதய வால்வுகள், 2 கண்கள் ஆகியவற்றை தானமாக பெற முடிவு செய்யப்பட்டது. 

கல்லீரல் மற்றும் 4 இருதய வால்வுகளை பெறுவதற்காக சென்னை குளோபல் ஆஸ்பத்திரி டாக்டர்கள் விவேகானந்தன், மனோஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை 6 மணி அளவில் விமானம் மூலம் கோவை சென்றனர். அவர்கள் வந்தவுடன் இரவு 8.45 மணி அளவில் ஆபரேஷன் தொடங்கியது. 

வாலிபரின் 2 சிறுநீரகங்களில் ஒன்று சுந்தராபுரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சசிகலா என்ற பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் கோவை ராம்நகரில் எஸ்.பி.டி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நூர்ஜ ஹான் என்ற பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. 

2 கண்கள் கோவையில் உள்ள அரவிந்த் ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது. 

கோவை விமான நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு பின்னர் விமானங்கள் புறப்படுவதில்லை. ஆனால் மருத்துவ சேவைக்காக கோவை விமான நிலையம் நேற்று நள்ளிரவு வரை செயல்பட்டது. 

4 இருதய வால்வுகள் மற்றும் கல்லீரலை குளோபல் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வந்தனர். அதிகாலை 3.50 மணிக்கு சென்னையில் தனி விமானம் தரை இறங்கியது. முன்னதாக அங்கு ஆம்புலன்ஸ் தயாராக நிறுத்தப்பட்டு இருந்தது. விமானம் வந்து நின்றதும் அதன் அருகில் ஆம்புலன்ஸ் கொண்டு செல்லப்பட்டு அதில் உடல் உறுப்புகள் பாதுகாப்பாக ஏற்றப்பட்டது. 

விமான நிலையத்தில் இருந்து மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் விரைந்து இயக்கப்பட்டது. 

போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் ஆம்புலன்சிற்கு வேகமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர். 

குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனையை சென்றடைந்த டாக்டர்கள் அங்கு ஏற்கனவே ஆபரேஷன் செய்ய தயாராக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த உப கரணங்களுடன் சிகிச்சையை தொடங்கினர். 

சிறுமி ஆதித்தயாவுக்கு வாலிபரின் கல்லீரலை பொருத்தி வெற்றிகரமாக ஆபரேஷனை செய்து முடித்தனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் கோவையில் இருந்து சென்னைக்கு உடல் உறுப்புகள் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

சிறிது நேரம் தாமதம் ஆனாலும் இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக செய்து முடிக்க இயலாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். 

ராஜகோபாலின் இருதய 4 வால்வுகளும் குளோபல் ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதை ஒரு சிறுமிக்கு பொருத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

விபத்தில் பலியான இளைஞரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.

காதலனிடம் சுட்ட காசை ‘ஆசனவாயில்’ ஒளித்து வைத்த அமெரிக்க காதலி

நியூயார்க்: காதலனிடம் திருடிய பணத்தை ஆசனவாயில் ஒளித்து வைத்த அமெரிக்கப்பெண், அதனை வெளியே எடுக்க முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 

அமெரிக்கா, டென்னிசே நகரை சேர்ந்த கிறிஸ்டி பிளாக் (43) என்ற பெண்மணி தனது காதலன் பாபிலேயிடம் இருந்து 5000டாலர் திருடியுள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சத்து 39 ஆயிரத்தை 750ரூபாய் ஆகும். 

திருடைய பணத்தை ஒளித்து வைக்க இடம் தேடிய கிறிஸ்டி, தற்காலிகமாக பணத்தை தன் ஆசனவாய் வழியாக திணித்து குடல் பகுதியில் மறைத்து வைத்தார். பின் காதலன் வீட்டை விட்டு வெளியேறிய கிறிஸ்டி, பணத்தை எடுப்பதற்காக பாத்ரூம் சென்றிருக்கிறார். ஆனால், பணம் அதற்குள் ஆசனவாய் வழியாக குடலுக்குள் சென்று மாட்டிக் கொண்டது. 

பிரஸ் மற்றும் சில கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தி பணத்தை வெளியே எடுக்க முயன்றுள்ளார் கிறிஸ்டி. ஆனால், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது தான் மிச்சம். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கிறிஸ்டிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். 

அவரது குடல் பையில் மறைத்து வைக்கப் பட்டிருந்த பணமும் மீட்கப்பட்டது. பிறகு என்ன செய்ய, காதலனிடம் திருடிய பணத்தை, மருத்துவமனைக்கு பில்லாக கட்டி வருகிறார் கிறிஸ்டி.

மும்பையில் ஆட்டோவில் தனியாக சென்ற இளம்பெண்ணிடம் பைக்கில் வந்த 2 பேர் சில்மிஷம்

மும்பையில் ஆட்டோவில் தனியாக சென்ற இளம்பெண்ணிடம் பைக்கில் வந்த 2 பேர் சில்மிஷம்மும்பை: மும்பையில் ஆட்டோவில் தனியாக சென்ற இளம்பெண்ணிடம் பைக்கில் வந்த இருவர் மோசமாக நடந்து கொண்டுள்ளனர். 

மும்பை மலாத் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர்(ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்) ஓஷிவாராவில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு கடந்த சனிக்கிழமை மாலை 5.30 ஆட்டோவில் தனியாக சென்றுள்ளார். 

அந்த ஆட்டோ லிங்க் ரோட்டில் சென்றபோது அந்த வழியாக ஒரு பைக்கில் 2 பேர் வந்தனர். அவர்கள் ஆட்டோவுக்கு அருகிலேயே சென்றதுடன் அந்த பெண்ணை கிண்டல் செய்து, அசிங்கமாக பேசியுள்ளனர். அவரைப் பார்த்து விசில் அடித்ததோடு, கண்ணடித்துள்ளனர். அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறிய ஆட்டோ டிரைவரை அவர்கள் திட்டி, சண்டைக்கு அழைத்துள்ளனர். 

அந்த இருவரும் ஆட்டோவின் கம்பியைப் பிடித்து கொண்டே பைக்கில் சென்றுள்ளனர். 

இதில் பயந்துபோன அப்பெண் நைசாக தனது செல்போனில் அவர்களை போட்டோ எடுத்துக் கொண்டார். அவர்களின் ஆட்டம் அத்துமீறவே ஆட்டோ டிரைவர் வண்டியை நிறுத்த முயன்றதும் அவர்கள் சென்றுவிட்டனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தால் ஏதாவது பின்விளைவுகள் வருமோ என்று அவர் பயந்து கொண்டு புகார் கொடுக்கவில்லை. அவர்களின் புகைப்படத்தை பாலிவுட்டில் துணை இயக்குனராக இருக்கும் அப்பெண்ணின் நண்பர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 

இந்த புகைப்படத்தை பார்த்த 2 பெண்கள் அந்த இருவரும் தங்களிடமும் மோசமாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். 

கடந்த வாரம் தான் ஓஷிவாரா பகுதியில் டிவி நடிகை லவ்லீன் கௌர் திருடன் உள்பட 3 பேரால் தாக்கப்பட்டார். 

அதை மக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர உதவிக்கு வரவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் தற்போது ஒரு பெண்ணிடம் 2 பேர் கலாட்டா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய விமானப் படையில் உலகின் மாபெரும் சரக்கு விமானம் 'சி-17 குளோப்மாஸ்டர்'!

டெல்லி: உலகின் மிகப் பெரிய ராணுவ சரக்கு விமானமான சி-17 குளோப்மாஸ்டர் விமானம் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் போயிங் நிறுவனத் தயாரிப்பான இந்த விமானம் 70 டன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.


ஒவ்வொன்றும் தலா ரூ. 2,000 கோடி மதிப்புள்ளவை இந்த விமானங்கள். இந்த வகையைச் சேர்ந்த 10 விமானங்களை வாங்க கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. ரூ. 20,000 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் இரு நாடுகள் இடையிலான மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.


டாங்கிகள், பீரங்கிகள், கவச வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், ராணுவ லாரிகள், நூற்றுக்கணக்கான படையினர் என பல்வேறு அதிக எடை வாய்ந்த சரக்குகளை இந்த விமானத்தால் கையாள முடியும்.


இப்போது இந்தப் பயன்பாடுகளுக்கு ரஷ்யத் தயாரிப்பான ஐ.எல்.76 ரக சரக்கு விமானங்களையே இந்திய விமானப் படை பயன்படுத்தி வருகிறது. இந்த விமானங்களை விட 30 டன் அளவுக்கு அதிக எடையை குளோப்மாஸ்டர் விமானங்களால் கொண்டு செல்ல முடியும்.


உலகிலேயே இந்தியாவுக்குத் தான் இந்த வகையைச் சேர்ந்த 10 விமானங்களைத் தர அமெரிக்கா முன் வந்துள்ளது. வேறு எந்த நாட்டுக்கும் இதுவரை 2,3 விமானங்களுக்கு மேல் அமெரிக்கா தந்ததில்லை. இதனால் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 10 குளோப்மாஸ்டர் விமானங்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கும். இந்த 10 விமானங்களும் வந்து சேர்ந்த பின் மேலும் 6 விமானங்களை வாங்கவும் ஒப்பந்தத்தில் இடம் உள்ளது.


இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள 256 குளோப்மாஸ்டர் விமானங்களில் 222 விமானங்கள் அமெரிக்க விமானப் படையிடம் தான் உள்ளன. மிச்ச விமானங்கள் ஆஸ்திரேலியா, கனடா, கத்தார், யுஏஇ, இங்கிலாந்து மற்றும் நேடோ படையினருக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.


இந்த விமானங்களை இந்திய விமானப்படையில் இணைக்கும் நிகழ்ச்சி உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் நேற்று நடந்தது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி இந்த விழாவில் கலந்து கொண்டார். புதிய விமானங்களை விமானப்படையில் இணைப்பதன் அடையாளமாக விமானத்தின் சாவியை படைப்பிரிவின் கமாண்டரிடம் ஆண்டனி வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய விமானப்படை தளபதி ஏ.கே.பிரவுனி, சி-17 ரக விமானங்கள் வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் உயரமான விமானப்படை தளங்களில் இருந்து இயக்கப்படும் என்றார்.

கொலை குற்றவாளி, காமக்கொடூரன் ஜெய்சங்கரை தப்ப வைத்தது யார்?

பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கற்பழிப்பு குற்றவாளி ஜெய்சங்கர் தப்பிச் செல்ல அங்குள்ள யாரோ தான் உதவி செய்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பல்வேறு கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள பனங்காட்டூரைச் சேர்ந்த ஜெய்சங்கர் (36) கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி முதல் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தான். 

இந்நிலையில் அவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சிறையில் இருந்து தப்பியோடிவிட்டான்.

தப்பிய முறை...

ஜெய்சங்கர் அவன் அறைக் கதவை போலி சாவி போட்டு திறந்து சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவன் இருந்த அறையை உள்ளிருந்து திறக்க முடியாது.

ஜெய்சங்கரை அந்த அறையில் வைத்து பூட்டுவது, அவனை கண்காணிப்பது ஆகிய வேலையை பாதுகாவலர்களாக பணிபுரியும் ஆயுள் தண்டனை கைதிகள் 3 பேர் செய்து வந்தனர். ஒன்று அவர்களில் ஒருவர் அறையை பூட்டாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது அவர்கள் அறையை வெளியே இருந்து திறந்துவிட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஜெய்சங்கர் அறையை விட்டு வெளியே வந்தபோது அதிகாலை 4 மணிக்கு யாரோ மின் இணைப்பு மற்றும் யுபிஎஸ் இணைப்பை துண்டித்துள்ளனர். சிசிடிவி கேமராக்களும் வேலை செய்யவில்லை. மேலும் ஜெனரேட்டரும் வேலை செய்யவில்லை.

பெங்களூர் சிறையில் மொத்தம் உள்ள 40 சிசிடிவி கேமராக்களில் வெறும் 8 மட்டும் தான் வேலை செய்கிறது. அந்த கேமராக்கள் 1996ம் ஆண்டில் வாங்கப்பட்டவை. 10 ஆண்டுகள் தான் அவை உழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்சங்கர் சிறையின் 20 அடி சுற்றுச்சுவரை 15 அடி நீள இரும்பு கம்பியைக் கொண்டு கடந்துள்ளான். அவன் அந்த கம்பியின் உதவியோடு ஏறும்போது யாரோ அவன் கீழே விழாமல் இருக்க கம்பியை பிடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஜெய்சங்கர் போலீஸ் சீருடை அணிந்து தப்பியுள்ளான். அவன் யாருக்கும் தெரியாமல் சீருடையை எடுத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.


எப்படிப் பண்ணுவாங்க? ஆண்மைப் பரிசோதனை?..

சென்னை: பாலியல் பலாத்காரம், பாலியல் சில்மிஷம் போன்ற வழக்குகளில் சிக்கும் ஆண்களுக்கு முதலில் ஆண்மைப் பரிசோதனை செய்வார்கள் காவல்துறையினர். 

இந்தப் பரிசோதனையின் முடிவைப் பொறுத்துத்தான் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பலமாக இருக்குமா, இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும். 

இதற்கு முன்பு இப்படிப்பட்ட வழக்குகளில் சிக்கிய பிரபலங்கள் பலருக்கும் இந்த சோதனையை காவல்துறையினர் செய்துள்ளனர். ஏன்.. நித்தியானந்தாவுக்கும் கூட ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

இப்படித்தான் தற்போது 16 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சாமியார் அஸரம் பாபுவுக்கும் ஆண்மைப் பரிசோதனை செய்து அவர் நல்ல ஆண்மையுடன் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்மைப் பரிசோதனை என்றால் என்ன.. என்ன செய்வார்கள் என்பதைப் பார்ப்போமா...

பாலியல் பலாத்கார வழக்குகளில் சிக்குவோர் தாங்கள் தப்பிக்க தங்களுக்கு ஆண்மை இல்லை, அந்த அளவுக்கு தங்களிடம் தெம்பு இல்லை என்ற வாதத்தை நீதிமன்றங்களில் முன்வைக்கக் கூடும் என்பதால், முதலில் இந்த ஆண்மைப் பரிசோதனையை காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டோருக்கு நடத்துகிறார்கள்.

பாலியல் பலாத்கார வழக்குகளில் சிக்குவோரிடம் ஆண்மைப் பரிசோதனை நடத்த காவல்துறையினருக்கு உரிமை தரப்பட்டுள்ளது. இதை வைத்துத்தான் காவல்துறையினர் தங்களது தரப்பு வாதத்தை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் இந்த சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த சோதனையை நடத்துவது யூரோ - ஆண்ட்ராலஜிஸ்ட் மருத்துவர்கள்தான். அதாவது சிறுநீரகவியல் மற்றும் ஆண்மைக் குறைபாடு நிபுணர்கள்.

மொத்தம் 3 விதமான சோதனைகள் இதில் நடத்தப்படும். முதலில் செமன் அனாலிசிஸ்... அதாவது விந்தனு ஆய்வு. விந்தனு எண்ணிக்கை, வீரியம் எந்த அளவு உள்ளது என்பது ஆராயப்படும். இரண்டாவது, ஆண்குறி ஸ்கேன். ஆண் குறி எழுச்சியுடன் உள்ளதா என்பதை அறிய டாப்ளர் ஸ்கேன் மூலம் ஆய்வு செய்வார்கள். கடைசியாக விஷூவல் எக்ஸாமினேஷன். அதாவது ஆண் குறி எழுச்சி பெற்ற நிலையில் எப்படி உள்ளது, சாதாரண நிலையில் எப்படி உள்ளது என்பது ஆராய்வது.

விஷூவல் எக்ஸாமினேஷனின்போது ஆண்குறி எழுச்சி நிலையில் எப்படி இருக்கிறது, சாதாரண நிலையில் எப்படி இருக்கிறது என்பதை டாக்டர்கள் கண்டறிவார்கள். இதன் மூலம் ஆண்குறியானது வழக்கமான எழுச்சி நிலையில் உள்ளதா அல்லது அதில் குறைபாடு உள்ளதா என்பதை அறிய முடியும்.

அத்தனை பரிசோதனைகளும் முடிந்த பின்னர் சம்பந்தப்பட்ட ஆணால் உடலுறவு கொள்ள முடியுமா, அதற்கான தகுதியுடன் அந்த நபர் உள்ளாரா, விந்தனு கணக்கு இயல்பு நிலையில் இருக்கிறதா என்ற முடிவுக்கு டாக்டர்கள் வருவார்கள்.

ஆண்மைப் பரிசோதனையின்போது முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. அதாவது குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இயல்பான முறையில் எழுச்சியை வரவைத்து சோதனை செய்தால்தான் காவல்துறைக்கு நல்லது. அப்படி இல்லாமல், இதற்காகவே உள்ள மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி பின்னர் எழுச்சி வர வைத்து சோதனை செய்தால் அது குற்றவாளிக்கு சாதகமாகப் போய் விடும். காரணம், எனக்கு இயல்பான முறையில் எழுச்சி வராது, அப்படி இருக்கையில், நான் எப்படி கற்பழித்திருக்க முடியும் என்று அவர் வாதிட முடியுமே...

மருந்து கொடுத்து எழுச்சியை ஏற்படுத்தி சோதனை செய்யும்போது, அந்த சோதனையைச் செய்த டாக்டரும் வழக்கில் ஒரு சாட்சியமாக சேர்க்கப்படுவார்.

ஒரு வேளை குற்றம் சாட்டப்பட்ட நபர் சோதனை செய்து கொள்ள முன்வராவிட்டால், மறுப்பு தெரிவித்தால், அதுதொடர்பான டாக்டர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும்.

இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் அரசு் தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட மாட்டார்கள். மாறாக நடுநிலையான சாட்சியாக அவர்கள் கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கார்ட்டூன்’ சேனல் மாற்ற மறுத்த அண்ணன்: கோபத்தில் தற்கொலை செய்த 11 வயது தங்கை

பெங்களூர்: கார்ட்டூன் சேனல் வைக்க மறுத்த அண்ணனுடன் உண்டான சண்டையால் மனமுடைந்த 11வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. 

பெங்களூர் காடுகோடி சாதரமங்களாவில் வாழ்ந்து வரும் கூலித் தொழிலாளி குமாரின் 11வயது மகள் நவநீதா. அச்சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். 

நேற்று முன்தினம் நவநீதா தனது சகோதரன் மற்றும் பெற்றோருடன் அமர்ந்து விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றை பார்த்தபோது, இது போரடிப்பதாகவும், கார்ட்டூன் சேனல் மாற்றக்கோரியும் கூறியுள்ளார் நவநீதா. 

இது தொடர்பாக நவனீதாவுக்கும், அவரது சகோதரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் படுக்கையறைக்குள் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டுள்ளாள் நவநீதா. பெற்றோர் இது குறித்து முதலில் அசட்டையாக இருந்துள்ளனர். 

பின்னர் இரவு சுமார் பத்தரை மணியளவில் சாப்பிடுவதற்காக நவநீதாவின் அறைக்கதவைத் தட்டியுள்ளார் அவரது அம்மா ராணி. ஆனால், நெடுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமைந்த அவளது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். 

அங்கே, நவநீதா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவளை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், நவநீதா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதைக் கேட்டு கதறி அழுதனர். 

சம்பவம் குறித்து தகவலறிந்த காடுகோடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நிருபர் பலாத்காரம்: குற்றவாளிகள் நீலப்படம் பார்ப்பதில் வெறியர்களாம்! விசாரணையில் அதிர்ச்சி

நிருபர் பலாத்காரம்: குற்றவாளிகள் நீலப்படம் பார்ப்பதில் வெறியர்களாம்! விசாரணையில் அதிர்ச்சிமும்பை: மும்பையில் புகைப்பட நிருபர் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மூன்று பேர் ரெகுலராக நீலப்படங்களை பார்ப்பவர்கள் என்றும், விபச்சார விடுதிக்கு செல்பவர்கள் என்றும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த வாரம் மும்பையில் சக்தி மில் பகுதியில் நடந்த பலாத்கார சம்பவ குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில் விஜய், காசிம், உள்ளிட்ட 3 பேர் ரெகுலராக ஃபோர்ன் படங்களை பார்ப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதோடு மும்பையில் விபாச்சார விடுதிகளுக்கும் அடிக்கடி சென்று வருபவர்கள் என்றும் போலீசாரிடம் கூறியுள்ளனர். 

மதன்புரா பகுதியில் தடைசெய்யப்பட்ட நீலப்படங்களை சென்று பார்த்த காரணத்தினால்தான் பாலியல் குற்றச்சம்பவங்களில் அவர்கள் ஈடுபட காரணமாக அமைந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். 

மதன்புரா பகுதியில் மட்டும் சட்டத்திற்கு புறம்பான வகையில் நீலப்படங்களை ஒளிபரப்பும் இடங்கள் உள்ளதாகவும் நாள்தோறும் 10 காட்சிகள் வரை ஒளிபரப்புகின்றனர். ஒவ்வொரு பார்லரிலும் 50 முதல் 80 பேர்வரை தினசரி இதுபோன்ற ஃபோர்ன் படங்களை பார்க்கின்றனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சட்டவிரோத பார்லர்களை ஒழிக்க முடியும் என்றும் தெரிவித்தனர். 

இதனிடையே மும்பை மாநகர கமிஷனர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் சட்ட விரோதமாக நீலப்படம் ஒளிபரப்பும் இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. நகர்பகுதிகளில் பாழடைந்த இடங்களில் அமர்ந்து போதை வஸ்துகளை உபயோகித்த 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

செக்ஸ் சர்ச்சையில் சிக்கிய சாமியார்கள்…

இந்தியாவில் ஆசிரமங்களுக்கும், சாமியார்களுக்கும் பஞ்சமில்லை. நாடுமுழுவதும் ஏதாவது ஒரு ஊரில் அருள்வாக்கு கூறும் சாமியார்கள் பக்தர்களால் போற்றப்படுகின்றனர். 

சிலரது வாக்கு பலிப்பதால் அவர்களின் ஆசிரமத்திற்கு வருமானம் கூடுகிறது. சிலர் நோய் தீர்க்க சிகிச்சை செய்வதால் அவர்களும் ஆன்மீக ஞானிகளாக பக்தர்களால் போற்றப்படுகின்றனர். 

யோகா கற்றுக் கொடுக்கும் மாஸ்டர்கள் கூட நாளடைவில் மிகப்பெரிய ஆஸ்ரமங்கள் அமைத்து கல்லா கட்டத் தொடங்கிவிடுகின்றனர். இவர்களில் சிலர் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கின்றனர். தவறு செய்தவர் சாமியார் என்பதால் அது மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.


கடந்த சில ஆண்டுகளாகவே ஏதாவது ஒரு சாமியாரைப் பற்றி சர்ச்சைக்குரிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் செக்ஸ் சர்ச்சையில் சிக்கி ஊடகங்களில் அடிபடுபவர் அஸ்ராம் பாபு.


குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சாமியார் அஸ்ரம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளை இருக்கின்றன. இவர்மீது நிலமோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்தன.


கடந்த டிசம்பரில் மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது சர்ச்சைக்குரிய கருத்தினை கூறி ஊடகங்களில் அடிபட்டார். பலரது கண்டனத்திற்கு ஆளானார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ‘அஸ்ரம் பாபு என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்' என அவருடைய ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் டெல்லி போலீசில் புகார் செய்யவே இப்போது கம்பி எண்ணி வருகிறார்.

பிரேமானந்தா

திருச்சி பாத்திமாநகரில் ஆஸிரமம் நடத்தி வந்தவர் சாமியார் பிரேமானந்தா. அவர் ஆசிரமத்தில் நடந்த சீடர் கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தா, கடலூர் சிறையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார்.திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படவே பிரேமனந்தா எந்த ரகசியத்தையும் வெளியிடாமல் மரணமடைந்து விட்டார்.

நித்யானந்தா

திருவண்ணாமலை, பெங்களூரு என ஆசிரமம் அமைத்து கோடிக்கணக்கான பக்தர்களை வளைத்த நித்யானந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதா உடன் உறவில் ஈடுபட்டதாக வீடியோ காட்சி வெளியானது. இது நாடுமுழுவதும் பக்தர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. ஏராளமானோர் ஆசிரமத்தை அடித்து நொறுக்கினார். அவரும் சில காலம் சிறைச் சாலைக்குள் சென்று வந்தார்.


நித்யானந்தா சாமியாரின் லீலைகள் வெளிச்சத்திற்கு வந்தாலும்கூட, அவருக்கு இளைய ஆதீனம் பதவி கொடுத்து தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தினார் மதுரை ஆதினம். இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுக்கவே பதவி கொடுத்த ஆதினம் சத்தமில்லாமல் பறித்துக் கொண்டார்.

கல்கி சாமியார்

கல்கி சாமியார் ஆசிரமத்தில் போதைக்கு அடிமையாகி சீரழிந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் பற்றி சில மாதங்களுக்கு முன்னால் தொலைக்காட்சியிலும் ஒரு நிகழ்ச்சி வாயிலாக அனைவருக்கும் தெரியவந்தது. இங்கே இருப்பவர்கள் அனைவருமே, போதையில் மிதப்பது மாதிரியே உலவிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதனை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.


புராண காலத்தில் துறவிகள் என்பவர்கள் அரச குலகுருவாகவும், பல வித்தைகளை கற்றுக்கொடுப்பவர்களாகவும் இருந்துள்ளனர். ஆனால், இன்றைய சாமியார்கள் என்பவர்கள், ஒன்று சித்து வேலைகள் தெரிந்த மந்திரவாதிகளாகவோ அல்லது மக்களை மயக்கும் அளவு பிரசங்கம் செய்பவர்களாகவோ இருக்கிறார்கள்.

சாமியார்களுக்கு பஞ்சமில்லை

செக்ஸ் சர்ச்சையில் சாமியார்கள் சிக்கினாலும், பீடி சாமியார், குட்டி சாமியார், அரிவாள் சாமியார், சாராய சாமியார் இன்னும் இப்படி எத்தனையோ சாமியார்கள் நாடு முழுவதும் தங்களது ஆசிரமங்களை அவர்களது வசதிக்கு தகுந்தார்ப்போல் அமைத்து, மக்களுக்கு ஆசி வழங்கிகொண்டுதான் இருக்கிறார்கள். சில மாதங்களில் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக அடிபடும் இந்த சாமியார்கள் பின்னர் சத்தமில்லாமல் அமுங்கிவிடுகின்றனர். மக்களும் அதை மறந்துவிட்டு சாமியார்களை நோக்கி செல்லத் தொடங்கிவிடுகின்றனர் என்பதுதான் வேதனை.

சென்னை அறவழி சாமியார்

அதேபோல சென்னையில் பிரலபலமான சாமியார் மற்றும் ஜோதிடரான அறவழி சாமியார் என்பவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அவரது தாயின் துணையுடன் பலருக்கு விருந்தாக்கியதாக பெரும் சர்ச்சை எழுந்தது. சாமியாரும் கைது செய்யப்ப்டடு தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.