டெல்லி: ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா அமைக்கப்பட்டது போல விதர்பா, புந்தல்கண்ட், பூர்வாஞ்சல் உள்ளிட்ட தனி மாநிலங்களையும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தெலுங்கானா தனி மாநில கோரிக்கை என்பது 60 ஆண்டுகாலம் நீடித்த போராட்டம்.. இது தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படும் நிலையில் மேற்கு வங்கத்தைப் பிரித்து கூர்க்காலாந்து உருவாக்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த 2 நாட்களாக முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா உருவாக்கப்பட்டுவிட்ட நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள்:
இனி மாநிலங்களைப் பிரிக்கக் கூடாது- பிரகாஷ் காரத்

கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா

ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜாவோ, தெலுங்கானா தனி மாநிலத்தை அமைப்பது என்பது மிக மிக தாமதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. தெலுங்கானா, ஆந்திர பிரதேச மக்கள் வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் சகோதரத்துவத்துடன் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும் என்றார்.
எல்.கே. அத்வானி

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 3 தனி மாநிலங்களை உருவாக்கினோம். ஆனால் எங்களது கூட்டணிக் கட்சியின் அழுத்தத்தால் அப்போது தெலுங்கானாவை நாங்கள் உருவாக்கவில்லை என்றார்.
ராம்விலாஸ் பஸ்வான்

தெலுங்கானாவைப் போல புந்தெல்காண்ட், விதர்பா, பூர்வாஞ்சால் போல பல புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும். எங்களது லோக்ஜன் சக்தி கட்சி எப்போதும் புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கு ஆதரவு தரும் என்றார் அக்கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான்.