பாகிஸ்தானின் 12வது அதிபராக இந்தியாவில் பிறந்த ‘மம்நூன் ஹூசைன்’ தேர்வு

பாகிஸ்தானின் 12வது அதிபராக  இந்தியாவில் பிறந்த ‘மம்நூன் ஹூசைன்’ தேர்வுஇஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் புதிய அதிபராக இந்தியாவில் பிறந்த மம்நூன் ஹூசைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி பாகிஸ்தானின் 12வது அதிபராக பதவியேற்க உள்ளார். 

பாகிஸ்தானின் 12 வது அதிபரைத் தேர்ர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் நவாப் ஷெரீப் தலைமையிலான முஸ்லீம் லீக் (என்) கட்சியைச் சேர்ந்த 73 வயதான மம்நூன் ஹூசைன் கலந்து கொண்டார். 

மம்நூனுக்கும், பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் வேட்பாளர் முன்னாள் நீதிபதி வாஜிஹுதீன் அகமது ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. வெற்றி பெற 263 வாக்குகளே போதுமானது என்ற நிலையில், ஹுசேன் 277 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

எனவே, வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி மம்நூன் பாகிஸ்தானின் புதிய அதிபராக பதவியேற்பார் என அதிகாரப் பூர்வமாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதுவரை, தற்போதைய அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியே பதவியில் நீடிப்பார். 

வெற்றி பெற்ற மம்நூன், இந்தியாவில் பிறந்தவர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா தான் இவரது சொந்த ஊர். 1947ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த போது, இவரது குடும்பம் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

மம்நூன் ஏற்கனவே 1999-ஆம் ஆண்டு ஜூன்-அக்டோபர் மாதங்களில் சிந்து மாகாண ஆளுநராக இருந்துள்ளார். 

காங்கிரசின் அடுத்த ப்ளான் ... 100 நாள் வேலை திட்ட பெண்களுக்கு இலவச மொபைல் போன்!'...

காங்கிரசின் அடுத்த ப்ளான் ... 100 நாள் வேலை திட்ட பெண்களுக்கு இலவச மொபைல் போன்!'...டெல்லி: 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கு இலவச மொபைல் போன் வழங்குவதற்கான புதுமையான திட்டம் ஒன்றை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2004 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன், தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி கிராமப்புறங்களில் கால்வாய், குளம், கண்மாய் போன்றவற்றை தூர்வாருவது, சாலைகள் சீரமைப்பு போன்ற பணிகளில் உள்ளூர்வாசிகள் ஈடுபடுத்தப்பட்டனர். 

ஆண்டுக்கு கட்டாயம் 100 நாள் வேலை வாய்ப்பு அளிக்கும் இந்த திட்டத்தின் கீழ் ஏராளமானோர், குறிப்பாக பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். இந்த திட்டம்தான் மீண்டும் ஐ.மு.கூட்டணி அரசு ஆட்சிக்கு வர காரணமாக அமைந்தது. 

தற்போது இந்தியாவின் 67 சதவீத மக்களுக்கு விலை மலிவான உணவு தானியங்களை வழங்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. 

வரவிருக்கும் நாடாளுமன்ற லோக்சபா தேர்தலை மனதில் கொண்டே மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்த திட்டத்தை கொண்டுவந்ததாக எதிர்கட்சிகள் விமர்சனம் செய்திருந்தன. ஆனால் காங்கிரஸ் கட்சி அதனை பொருட்படுத்தவில்லை. 

இந்தநிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கு இலவச மொபைல் போன் வழங்கும் கவர்ச்சிகரமான திட்டத்தை செயல்படுத்த ஐ.மு.கூட்டணி அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மொபைல் போன் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் ஆண்டு மொத்த வருவாயின் மீது 5 சதவீத வரி விதித்து, அதன் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆகும் நிதியை திரட்டலாமா என மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே இந்த திட்டத்தை தொடங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கிராமப்புற பெண்களின் வாக்குகளை அள்ளலாம் என்ற எண்ணத்துடன், இந்த திட்டத்தை அறிவிக்க முடிவு செய்துள்ளது. 

இதற்காக ஒவ்வொரு கிராமம்/தாலுகா/மாவட்டம் வாரியாக தகுதியுடையோர்களது பட்டியலை அனுப்புமாறு மாநில அரசை கேட்டுக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் டெல்லி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

மூன்றாண்டுகளுக்குள் தகுதியுடைய அனைவருக்கும் மொபைல் போன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி முடிப்பது என்றும், முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு- ஆந்திராவில் வன்முறை வெடித்தது! எம்.பிக்கள் ராஜினாமா!!

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு- ஆந்திராவில் வன்முறை வெடித்தது! எம்.பிக்கள் ராஜினாமா!!நகரி: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் வன்முறை வெடித்துள்ளது. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களின் ராஜினாமா தொடர்கிறது. 

ஆந்திராவை பிரித்து தனி தெலங்கானா மாநிலத்திற்கு காங்கிரஸ் காரிய கமிட்டி நேற்று ஒப்புதல் அளி்த்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குண்டூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராயபாட்டி சாம்பசிவராவ் காங்கிரஸ் கட்சியில் இருந்தே ராஜினாமா செய்தார்.

மேலும் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முன்னவடிவரம் சதீஷ்குமார், ஜம்மலமடுகு ஆதிநாராயணராவ், ராமசந்திராபுரம் தோட்டாநரசிம்மம் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர். தெலுங்கானாவுக்கு எதிரான 20வது அம்ச திட்ட கமிட்டி தலைவர் துளசிரெட்டியும் தமது பதவியை ராஜினாமா செய்தார். 

தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. இந்துபுரம் அப்துல்கரமும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

அத்துடன் ஆந்திராவின் திருப்பதி, கர்னூல், நெல்லூர், விசாகப்பட்டினம், அனந்தபுரம், கடப்பா, சித்தூர் ஆகிய இடங்களில் தனி தெலுங்கானா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உருவபொம்மையை ஐக்கிய ஆந்திரா கூட்டு நடவடிக்கை குழுவினர் எரித்தனர். 

மேலும் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. மத்திய அரசு அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. விசாகப்பட்டினத்தில் பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். 

இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தெலுங்கானாவைப் போல் விதர்பா, பூர்வாஞ்சல் மாநிலங்களை உருவாக்க கோரிக்கை!

டெல்லி: ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா அமைக்கப்பட்டது போல விதர்பா, புந்தல்கண்ட், பூர்வாஞ்சல் உள்ளிட்ட தனி மாநிலங்களையும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

தெலுங்கானா தனி மாநில கோரிக்கை என்பது 60 ஆண்டுகாலம் நீடித்த போராட்டம்.. இது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படும் நிலையில் மேற்கு வங்கத்தைப் பிரித்து கூர்க்காலாந்து உருவாக்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த 2 நாட்களாக முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

தெலுங்கானா உருவாக்கப்பட்டுவிட்ட நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள்: 

இனி மாநிலங்களைப் பிரிக்கக் கூடாது- பிரகாஷ் காரத்


கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா

ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜாவோ, தெலுங்கானா தனி மாநிலத்தை அமைப்பது என்பது மிக மிக தாமதமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. தெலுங்கானா, ஆந்திர பிரதேச மக்கள் வேறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் சகோதரத்துவத்துடன் தொடர்ந்து அமைதி காக்க வேண்டும் என்றார்.

எல்.கே. அத்வானி

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 3 தனி மாநிலங்களை உருவாக்கினோம். ஆனால் எங்களது கூட்டணிக் கட்சியின் அழுத்தத்தால் அப்போது தெலுங்கானாவை நாங்கள் உருவாக்கவில்லை என்றார்.

ராம்விலாஸ் பஸ்வான்

தெலுங்கானாவைப் போல புந்தெல்காண்ட், விதர்பா, பூர்வாஞ்சால் போல பல புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும். எங்களது லோக்ஜன் சக்தி கட்சி எப்போதும் புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கு ஆதரவு தரும் என்றார் அக்கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான்.


முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு சொந்தமானதே- கேரளா திடீர் ஒப்புதல்!

முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு சொந்தமானதே- கேரளா திடீர் ஒப்புதல்!டெல்லி: முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு சொந்தமானதுதான்.. எங்களுக்கு கவலை எல்லாம் பாதுகாப்பு பற்றிதான் என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு திடீரென தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்பது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த இறுதி விசாரணையில் தமிழக அரசு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் கேரள அரசு தரப்பு வாதம் நேற்று தொடங்கியது. 

கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே, முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமனதுதான் என்று திடீரென ஒப்புக் கொண்டார். 

1979ஆம் ஆண்டு அணையில் விரிசல் ஏற்பட்டதால் நீர் தேக்கம் 136 அடியாக குறைக்கப்பட்டது என்று கூறிய அவர், அணையில் நீர் எவ்வளவு தேக்க வேண்டும் என்ற அதிகாரம் கேரளாவுக்கே உள்ளது என்றார். 

அணையில் நீரை தேக்குவது தொடர்பான சட்டத்தை 2003ல் கேரளா கொண்டு வந்தது என்றும் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றி தான் கேரளாவுக்கு கவலை என்றும் அவர் வாதிட்டார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதற்கு என்ன காரணம் என்று கேட்டனர். மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாமல் 15 நாளில் சட்ட திருத்தம் கொண்டு வந்தது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

'தெலுங்கானா'வுக்கு எதிர்ப்பு.. 'ஆந்திரா'வில் பந்த் -தமிழக பேருந்துகள் நிறுத்தம்!!

'தெலுங்கானா'வுக்கு எதிர்ப்பு.. 'ஆந்திரா'வில் பந்த் -தமிழக பேருந்துகள் நிறுத்தம்!!ஹைதராபாத்: தெலுங்கானா பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக உதயமாக்கப்பட்டுவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோரா ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. 60 ஆண்டுகால போராட்டத்தின் விளைவாக ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா தனி மாநிலமாகிவிட்டது. 

தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களின் பொதுத் தலைநகராக ஹைதராபாத் 10 ஆண்டுகாலத்துக்கு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இதற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது தெலுங்கானா அமைக்கப்படும் என்று அறிவிக்கபப்ட்டுவிட்டதைத் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஆந்திராவுக்கான கூட்டு நடவடிக்கைக் குழு 3 நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

இதைத் தொடர்ந்து இந்த இரு பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் 'புதிய' ஆந்திராவின் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடிக் கிடக்கின்றன. 

இந்த முழு அடைப்பால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திரா செல்லும் பேருதுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல் திருப்பதி, சித்தூர் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 

உத்தரப்பிரதேசத்தை 4 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்: மாயாவதி அதிரடி கோரிக்கை!

உத்தரப்பிரதேசத்தை 4 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்: மாயாவதி அதிரடி கோரிக்கை!லக்னோ: ஆந்திராவை பிரித்தது போல உத்தரப்பிரதேச மாநிலத்தை 4 சிறு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார். 

தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாயாவதி, சிறிய மாநிலங்கள் உருவாக்குவதற்கு நாங்கள் எப்போதும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளோம். தற்போதைய நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை 4 சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். 

பூர்வாஞ்சல், புந்தெல்காண்ட், ஆவத் பிரதேசம், பஸ்சிம் பிரதேசம் என 4 சிறிய மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி அதிகரிக்கும். 

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்த 4 மாநிலங்கள் உருவாக்குவதற்காக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றார். 

அதிரை பட்டுகோட்டை சாலையில் ஆட்டோ பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து! பலர் படுகாயம் .!

பட்டுகோட்டை அதிராம்பட்டினம் சாலை காளிகோயில் அருகில் பகல் சுமார் 2.00 மணியளவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது SRM பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்  பஸ் கவிழ்ந்துபலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அரசு மருத்துவமனைக்கு அனைவரையும் அழைத்து சென்றுள்ளனர்.


இதில் பஸ்சில் பயணம் செய்த அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 47 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆட்டோவில் பயணம் செய்து படுகாயமடைந்த அதிரை சுரக்காய்கொல்லை தெருவை சேர்ந்த சேக் அலி (49), அதிரை புதுத்தெரு அலி மொய்தீன், பட்டுக்கோட்டை ஆட்டோ டிரைவர் பாலாஜி (23), பஸ்சில் பயணம் செய்த புதுவயல் சுசிலா (52), புதுப்பட்டினம் சுசிலா (40) ஆகியோர் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆட்டோ ஒட்டுனர் பாலாஜி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் மற்றவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

தகவல் அறிந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜன் மற்றும் பட்டுக்கோட்டை நகர மன்றத்தலைவர் ஜவஹர் பாபு ஆகியோர் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்தனர். மேலும் மருத்துவரிடம் தீவிர சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டனர்.

பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள், நர்சுகள் இல்லை என்றும் சரியான சிகிச்சை மற்றும் முதலுதவி செய்யவில்லை என்றும் கூறி அதிரை கல்லூரி மாணவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உள்பட ஏராளமான பேர் ஆஸ்பத்திரி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்த பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் முருகேசன், தாசில்தார் முத்துக்குமரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்கமலக்கண்ணன் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் சண்முகவேல், தென்னை நல வாரிய உறுப்பினர் மலைஅய்யன், முன்னாள் எம்.எல்.ஏ ராமச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வேலை நேரத்தில் போதிய டாக்டர்கள் இருக்க வேண்டும். ஸ்கேன் வசதி, போதிய உபகரணங்கள் மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் சரியான சிகிச்சை அளிக்காமல் தஞ்சை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பது நிறுத்த வேண்டும் என்று மறியல் நடத்தியவர்கள் கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் அதை சரி செய்வதாக கூறியதன் பேரில் மறியல் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

















ம.பி.: கழிவறையை சுத்தம் செய்து, பிச்சை எடுத்து பிழைக்கும் பஞ்சாயத்து தலைவி

ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் பஞ்சாயத்து தலைவி ஒருவர் கழிவறைகளை சுத்தம் செய்தும், பிச்சை எடுத்தும் பிழைப்பு நடத்தி வருகிறார். 

மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டம் பச்சாமா கிராமத்தின் பஞ்சாயத்து தலைவி ரஜினி பன்சால்(38). அவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். அவர் இருக்கும் வீடு கன மழை பெய்தால் தாங்காது. பஞ்சாயத்து தலைவியாகிய அவர் பிழைப்பு நடத்த உள்ளூரில் உள்ள பெண்கள் பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்கிறார். மேலும் கிராமத்தில் பிச்சையும் எடுக்கிறார். அவருக்கு வர வேண்டிய சம்பளம் பல மாதங்களாக வரவில்லையாம். 

அவரது மூத்த மகன் அனில் எழுதப்படிக்கத் தெரியாத ரஜினிக்கு அவரது பெயரை எழுத கற்றுக்கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செயலாளரால் அழைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரிடம் சில பேப்பர்களில் அவரது பெயரை எழுத வைத்துள்ளனர். அப்படி வாங்கிய கையெழுத்தை வைத்து பஞ்சாயத்து நிதியை சிலர் கையாடல் செய்துள்ளனர். ஆனால் எதற்காக பேப்பர்களில் பெயரை எழுதினோம் என்று தெரியாத ரஜினியின் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையே அவரது மகன் அனில் கிராமத்தை விட்டு ஓடிவிட்டார். ரஜினியை ஏமாற்றி கையெழுத்து வாங்கியது குறித்து விசாரணை நடத்த தாமோ கலெக்டர் ஸ்வதந்திர குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.

பீகார் குழந்தைகள் சோகம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு!


பீகார் குழந்தைகள் சோகம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

சாப்ரா / பாட்னா: பீகாரில் மதிய உணவு சாப்பிட்டு பலியான குழந்தைகள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சில குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.



சாப்ரா நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தர்மாசதி கண்டமான் என்ற கிராமத்தில் அரசு தொடக்க பள்ளிக்கூடம் உள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு நேற்று இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. உணவு சாப்பிட்ட அனைவரும் 8 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள்.

உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில், ஏறத்தாழ 80 மாணவர்களுக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. இந்த தகவல் ஊருக்குள் பரவியதும், பெற்றோர்கள் அலறியடித்தபடி பள்ளிக்கூடத்துக்கு விரைந்தனர். மயங்கி விழுந்த மாணவர்கள் அனைவரும், உடனடியாக அருகில் உள்ள சாதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பீகார் குழந்தைகள் சோகம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

22 குழந்தைகள் பலி

ஆனால், அவர்களில் குஞ்சன் குமார், அன்ஷு குமார் ஆகிய 2 பேர், வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். மற்ற குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மேலும் 19 குழந்தைகள் இறந்துவிட்டனர்.

மேலும் 30 பேருக்கு அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனைக்குத் தேவையான கூடுதல் மருந்து - மாத்திரைகள் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் சிலர் கவலைக்கிடம்

சிகிச்சை பெறும் மாணவர்களில் சிலருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உணவு சமைத்த பணியாளரும் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

பள்ளிக் கூடத்தில் மதிய உணவாக அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சோயாபீன்ஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பரிமாறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த உணவு கெட்டுப்போய் இருந்ததால், சாப்பிட்டதும் அதுவே விஷமாகி மாறி குழந்தைகளைக் கொன்றிருக்கிறது.

நிதிஷ்குமார் அவசர ஆலோசனை

தகவல் அறிந்ததும், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த துயர சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

தடய அறிவியல் ஆய்வக குழுவினர் உதவியுடன், போலீஸ் டி.ஐ.ஜி. மற்றும் கோட்ட ஆணையாளர் ஆகியோர் இணைந்து இந்த விசாரணையை நடத்துவார்கள் என்று, முதல்வர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலா ரூ.2 லட்சம் உதவி

பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் உதவிப்பணம் வழங்கவும் முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற சாப்ரா பகுதி, பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரீய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ் வெற்றி பெற்ற பாராளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் வன்முறை

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தினால், பீகாரில் வன்முறை ஏற்பட்டுள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி முழு அடைப்புப் போராட்டம் அறிவித்துள்ளதால் பல இடங்களி்ல் வன்முறை வெடித்துள்ளது.

அரசு பேருந்துகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு தீ வைத்து எரிக்கப்பட்டன. தொடர்ந்து வன்முறை ஏற்பட்டுள்ளதால் பதற்றம் எழுந்துள்ளது. மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தலைவர் லல்லு பிரசாத் யாதவ் கேட்டுக் கொண்டுள்ளார்

குடிபோதையில் 35,000 அடி உயரத்தில் விமான கதவை திறக்க முயன்றது இலங்கை அமைச்சரின் மகன்!!

குடிபோதையில் 35,000 அடி உயரத்தில் விமான  கதவை திறக்க முயன்றது இலங்கை அமைச்சரின் மகன்!!கொழும்பு: பிரிட்டன் ஏர்வேஸ் விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது குடிபோதையில் விமான கதவை திறக்க முயன்ற இலங்கை கிரிக்கெட் வீரர் அந்நாட்டு அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவின் மகன் என தெரியவந்துள்ளது. 

பிரிட்டன் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்து கொண்டிருந்த போது 35 ஆயிரம் அடி உயரத்தில் திடீரென இலங்கை வீரர் ஒருவர் விமானத்தின் கதவை குடிபோதையில் திறக்க முயன்றார். பின்னர் அவரை சக வீரர்கள் தடுத்து நிறுத்தினர். பணியாளர்களும் அவரை கட்டுப்படுத்தி உட்கார வைத்தனர். இந்நிலையில் அந்த இலங்கை வீரரின் பெயரின் ரமித் ரம்புக்வெல என தெரியவந்துள்ளது. இவர் இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவின் மகன் ஆவார். 

இதே ரமித் ரம்புக்வெல கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின் போது குடிபோதையில் பால்கனியில் இருந்து கீழே விழுந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரிட்டன் ஏர்வேஸ் விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல இது சின்ன விஷயம் என்று அந்த விமான நிறுவனமே கூறிவிட்டது என்று கருத்து தெரிவித்துள்ளார்.